புது வரவு :
Home » , , » டி.என்.பி.எஸ்.சி- விண்ணப்பிப்பது எப்படி-பாகம்- 2

டி.என்.பி.எஸ்.சி- விண்ணப்பிப்பது எப்படி-பாகம்- 2

     டி.என்.பி.எஸ்.சி (tnpsc) தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது  பாகம் - 1 ல் குறிப்பிட்டதைப் போல டி.என்.பி.எஸ்.சி அலுவலக இணையதளம் சென்று அதிகாரப் பூர்வ அறிவிப்பை வாசித்துவிட்டீர்களா. ஆமாம் இந்த முறை கட்டாயம் இணையதளத்தின் மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.

         இதற்கு முன்னால் நடந்த தேர்வுகளுக்கு அரசு தலைமை தபால் நிலையங்கள் மூலம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன.இப்போது முதல்முறையாக வங்கித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதைப் போல இணையத்தின் மூலம் விண்ணப்பம் செய்ய தேர்வாணையம் ஏற்பாடு செய்திருக்கிறது.இதன் மூலம் அரசுக்கும் சரி தேர்வை எழுதுபவர்களுக்கும் சரி நேரம் மிச்சம்..ஆனால் பல கிராமத்து மாணவர்களுக்கும் இணைய பழக்கம் இல்லாதவர்களுக்கும் இணையத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்பது சற்று குழப்பமான விசயம் தான்..

         முதலில் நேரடியாக தேர்வுக்கு விண்ணப்பிக்கவேண்டாம்.அதற்கு முன்னதாக ஒரு முறை பதிவு (one time registration) என்றொன்றை தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.அதில் தங்களுடைய விபரங்களை ஒருமுறை பதிந்து விண்ணப்பத்து விட்டால் போதும் ஐந்து ஆண்டுகளுக்கான டி.என்.பி.எஸ்.சி சம்பந்தப் பட்ட அனைத்து விபரங்களும் வந்துவிடும்.முதல் முறை விண்ணப்பிக்கும்போதே ரூ.50 இணைய வழியிலோ அல்லது வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ செலுத்தி விட்டால் போதும்.அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை..


விண்ணப்பிப்பது எப்படி 
www.tnpscexams.net தளத்திற்கு செல்லுங்கள் அங்கே இடது புறத்தில் one time registration என்று குறிப்பிடப்பட்டுள்ளதை க்ளிக் செய்யுங்கள்..அடுத்த பக்கத்தில் விண்ணப்ப படிவம் இருக்கும்.அப்படிவத்தில் தங்கள் பெயர், தந்தையார் பெயர்,தாயார் பெயர்,கணவர் அல்லது மனைவி பெயர்,நீங்கள் பிறந்த இடம்,தந்தையார் பிறந்த இடம்,உங்கள் தாய்மொழி உள்ளிட்டான விபரங்கள் கேட்கப்பட்டிருக்கும் மட்டுமின்றி உங்கள் இனம்,மதம்,சாதி,சாதி உட்பிரிவு,சாதி சான்றிதழின் எண்,எந்த வருடம் பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு படித்தீர்கள் என்ற விபரங்களும் கேட்கப்பட்டு இருக்கும்  அவற்றையும் தவறின்றி குறிப்பிட்டு விடுங்கள்..விண்ணப்பத்தின் இறுதியில் உங்கள் புகைப்படத்தையும் உங்கள் கையொப்பத்தையும் உள்ளிட வேண்டும்.உங்கள் கணிப்பொறியிலிருந்து அந்த இரண்டையும் தரவேற்றம் செய்யவேண்டும்.அதுமட்டுமில்லாமல் புகைப்படம் 3.5 cm x 4.5 cm (20 KB –50 KB) அளவிற்குள்ளும் உங்களது கையொப்பம் 3.5 cm x 1.5 cm (10 KB –20 KB) என்ற அளவிற்குள்ளும் இருக்குமாறு வடிவமைத்த பிறகே அவற்றை நீங்கள் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய இயலும் .இல்லையென்றால் பிழை என்று வரும்.இது எப்படி என்று பல மாணவர்களுக்கு தெரிவதில்லை..

புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் அளவை மாற்றுவது எப்படி :

         நம் இல்லத்தில் இணைய வசதி இருந்தால் கூட புகைப்பட அளவை மாற்றும் மென்பொருள் இருந்தால் தான் அதை செயலாற்ற முடியும்.எனவே எனக்குத் தெரிந்த ஒரு எளிமையான வழியைச்சொல்கிறேன்.

         முதலில் போட்டொ ஸ்டுடியோ சென்று பாஸ்போட் சைஸ் போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்..பின்பு ஒரு வெள்ளைத் தாளில் உங்களது கையொப்பத்தை போட்டு அதையும் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்.. பின்பு மேற்கண்ட அளவுகளைச் சொல்லி அவற்றின் அளவுகளை குறைத்துக் கொடுக்குமாறு புகைப்படக்காரரிடம் சொல்லுங்கள்..அவர் எளிதாக அளவை மாற்றித் தந்துவிடுவார்.(ஸ்கேன் வசதி இருந்தால் அதை செய்து கொள்ளலாம்) அவற்றை நீங்கள் சி.டி.யிலோ அல்லது பென்டிரைவிலோ காப்பி செய்து கொண்டு வந்து விடுங்கள்.. அவ்வளவுதான். இப்போது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முடித்தபின்பு அளவு குறைக்கப்பட்ட போட்டோவையும் கையொப்பத்தையும் விண்ணப்பத்தில் பதிவேற்றிவிடுங்கள்..பின்னர் மீண்டும் ஒருமுறை விபரங்களை சரி பார்த்துக் கொண்டு பின்னர் எந்த வழியில் பணத்தை செலுத்துகிறீர்களோ அதை தேர்வு செய்துவிட்டு  விண்ணப்பத்தை submit செய்து விடலாம்.விண்ணப்பம் முழுமையாக பூர்த்தியாகியிருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.(எ.கா.நீங்கள் உடல் ஊனமுற்றவரா? எனக் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு,இல்லை என்றால் இல்லை என்பதை டிக் செய்ய செய்யவேண்டும்)  

         உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்ட பிறகு அடுத்தப் பக்கத்தில் உங்கள் விண்ணப்பம் தயார் அதை PDF file லாக சேமித்துக் கொள்ளும்படி கேட்கும் அதை மறக்காமல் நீங்கள் சேமித்துக்   கொள்ளுங்கள்.பின்பு உங்கள் ஈமெயில் முகவரியில் சென்று பார்த்தால் உங்களுக்கென ஒரு பயனர் பெயரும் ரகசிய எண்ணும் வந்திருக்கும் அதை குறித்து வைத்துக் கொள்ளவும்..

குறிப்பு:
1)தனியாக ஈமெயில் முகவரி இல்லாதவர்கள் புதிதாக ஏற்படுத்திக் கொள்ளவும்..
2)அந்த ஈமெயில் முகவரியை ஐந்து வருடங்களுக்கு மாற்றாமல் புழக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்..
3)புகைப்படம் கையொப்பத்தை பதிவேற்றம் செய்யத் தெரியாதவர்கள் தெர்ரிந்தவர்களை வைத்துக் கொண்டு செய்யுங்கள்.
4)இல்லத்தில் கணிப்பொறி இல்லாதவர்கள் பிரௌசிங் சென்டர் சென்று தான் விண்ணப்பக்க இயலும் அங்கு செல்வதற்கு முன்பாக புகைப்படத்தின் அளவை குறைத்து விட வேண்டும்.அங்கு அளவை குறைக்கும் வசதி பெரும்பாலும் இருக்காது..
5)கட்டணம் ரூ.50 ஐ எப்படி செலுத்தப் போகிறீர்கள் என்பதை முடிவெடுத்துக் கொண்டு செல்லவம்..

அடுத்தப் பகுதியில் தேர்விற்கான விண்ணப்பத்தை நிரப்புவது எப்படி என்பதை பார்ப்போம்..

(இது குறித்து சந்தேகங்கள் என்றால் தவறாமல் கருத்துரை பெட்டியின் வாயிலாக கேட்கலாம)
==========================================================================
 பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்கள் பயனடையட்டும்.
==========================================================================
                                                                                                                                         அன்புடன்



இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

5 comments:

  1. எண்ணற்ற வேலையின்னி இருக்கும் இளைஞர்களுக்கு பயன் தரும் நல்லதகவல் சா இராமாநுசம். எங்கே தங்களைக் காணவில்லையே!

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவுக்கு நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  4. என் நண்பர் பதிவு செய்ய சொன்னார்

    உங்கள் பதிவை படித்தவுடன் தெளிவாக விளங்கி உள்ளது

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  5. na one time registration pani enaku login id and password vanthathu but login panna invalid id nu varuthu enna reason?

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com