புது வரவு :
Home » , , , » டி.என்.பி.எஸ்.சி- வினைத்தொகை,பண்புத்தொகை கண்டறிதல் பாகம் 16

டி.என்.பி.எஸ்.சி- வினைத்தொகை,பண்புத்தொகை கண்டறிதல் பாகம் 16

             இலக்கண குறிப்பறிதல்
              (வினைத்தொகை,பண்புத் தொகை)


      முந்தைய பதிவான பாகம் 15 ல் பெயரெச்சம்,வினையெச்சம் போன்றவற்றைப் பார்த்தோம்..

       இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது வினைத்தொகை,பண்புத்தொகை  போன்றவற்றை எப்படி கண்டறிவது என்பதைத்தான்.

 வினைத்தொகை என்றால் என்ன?
     
        மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தழுவப்பெற்று வரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

(எ.கா) ஊறுகாய்

வினைத்தொகையை எப்படி கண்டறிவது?

         வினைத்தொகையில் இரு சொற்கள் இருக்கும்.முதல் சொல்லானது வினைச்சொல்லாக இருக்கும்.இரண்டாவது சொல்லானது பெயர்ச்சொல்லாக இருக்கும்.

       ஊறுகாய் என்பதில் ஊறு என்பதை வினைச்சொல்லாகவும் காய் என்பதை பெயர்ச்சொல்லாகவும் எடுத்துக் கொள்க.

         இந்த ஊறுகாய் என்ற சொல்லில் மூன்று காலங்களும் மறைந்து இருக்கின்றன.

          ஊறிய காய்-இறந்த காலம்
          ஊறுகின்ற காய்-நிகழ்காலம்
          ஊறும் காய்-எதிர்காலம்

         இப்பொழுது மூன்று காலங்களும் வெளிப்படுகிறது அல்லவா. இதைப்போல கொடுக்கப்பட்ட விடைகளில் எந்த சொல்லானது மூன்று காலங்களையும் உள்ளடக்கி வருகிறதோ அதுவே வினைத்தொகை என முடிவு கொள்ளுங்கள்..

(எ.கா)

1)படர்கொடி

   படர்ந்த கொடி-இறந்த காலம்
   படர்கின்ற கொடி-நிகழ்காலம்
   படரும் கொடி-எதிர்காலம்

2)சுடுசோறு

   சுட்ட சோறு-இறந்த காலம்
   சுடுகின்ற சோறு-நிகழ்காலம்
   சுடும் சோறு-எதிர்காலம்

3)குடிநீர்
   
   குடித்த நீர்-இறந்த காலம்
   குடிக்கின்ற நீர்-நிகழ்காலம்
   குடிக்கும் நீர்-எதிர்காலம்
        
         கொடுக்கப்பட்டிருக்கிற அனைத்து விடைகளையும் சொல்லி சொல்லிப் பாருங்கள்..முக்காலத்தையும் உணர்த்துகிறதா என்று.ஒரு விடை மட்டும்தான் முக்காலத்தையும் உணர்த்தும்.மூன்று தவறான விடைகள் பெரெச்சமாகவோ வினையெச்சமாகவோ இருக்கலாம்.தவறான விடைகள புறந்தள்ளுவதன் மூலமும் சரியான விடையைக் கண்டு பிடிக்கலாம்.

பண்புத்தொகை என்றால் என்ன?

        ஒரு சொல்லானது பொருளின் பண்பையும் குணத்தையும் உணர்த்தி வந்தால் அது பண்புத்தொகை ஆகும்.

 (எ.கா)   செந்தாமரை

        (முன்னதாக பெயர்ச்சொல் வகையறிதலில் பண்புப்பெயரை பற்றி படித்தோம் ஞாபகம் இருக்கிறதா? வேண்டுமானால் அந்த பாகத்தை மீண்டும் ஒருமுறைப் படித்து பண்புப்பெயரை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.)

பண்புத்தொகையைக் கண்டறிவது எப்படி?

      கொடுக்கப்பட சொற்களில் எந்த சொல்லைப் பிரிக்கும் போது 'மை' விகுதி  வருகிறதோ அது பண்புத்தொகை எனக் கண்டறிக..
     
        (ஒரு வார்த்தையை பிரித்தெழுத தெரிய வேண்டியது அவசியம்.பிரித்தெழுக பகுதியில் உங்களுக்கு ஐந்து வினாக்கள் கேட்கப்படும்..அதை பிறகு பார்ப்போம்)

         'செந்தாமரை' என்ற வார்த்தையைப் பிரித்தால் செம்மை+தாமரை என்று பிரியும்.
   
        'மை' விகுதி தெரிகிறதா..ஒரு வார்த்தையை சரியாக பிரித்தால்தான் 'மை' விகுதியைக் கணடறிய முடியும்.

நிறத்தை குறிக்கும் சொற்கள்:

பசுமை,நீலம்,வெண்மை

குணத்தைக் குறிக்கும் சொற்கள்:

நன்மை,தீமை,கொடுமை,பொறாமை

சுவையைக்குறிக்கும் சொற்கள்:

காரம்,புளிப்பு,கசப்பு

வடிவத்தைக் குறிக்கும் சொற்கள்:

சதுரம்,வட்டம்,நாற்கரம்

 இருபெயரொட்டுப் பண்புத்தொகை

      சிறப்புப் பெயர்கள் முன்னும் பொதுப்பெயர்கள் பின்னும் நின்று இடையில்
“ஆகிய” எனும் பண்பு உருபு மறைந்து வருவதே இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்.

(எ.கா)
சாரைப்பாம்பு, நாகப்பாம்பு,
இந்திய நாடு, தமிழ்நாடு,
மாமரம், குமரிப்பெண்
வாழை மரம்.
தாமரைப் பூ
பொருட்செல்வம்
கடல் நீர்
தைத்திங்கள்
அவி உணவு
அரவணை
செருக்களம்


 என்ன தோழர்களே..வினைத்தொகை,பண்புத்தொகையை இனி எளிதாக கண்டு பிடித்து விடலாமா..அவ்வளவுதான்..

      அடுத்த பாகத்தில் வியங்கோள் வினைமுற்று,வினையாலணையும் பெயர் போன்றவற்றை எப்படி கண்டறிவது எனக் காண்போம்..

நன்றி..
==========================================================================
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிக்கின்ற தோழர்களுக்கு பயன் அளிக்கட்டும்..
==========================================================================
பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லுங்கள்.. 


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

9 comments:

 1. சகோ இடையே தான் படித்துப் போகிறேன்...

  நன்றி

  ReplyDelete
 2. அவ்வப்போது வந்து செகிறீர்களே அதுவே போதும் சகோ..நன்றி..

  ReplyDelete
 3. ஓய்வு நேரத்தில் முந்தைய பாகங்களையும் படித்துவிடுகிறேன் ..! பகிர்வுக்கு நன்றி தொடருங்கள் தொடர்கிறேன் ..!

  ReplyDelete
 4. எளிமையா சொல்றீங்க... ரொம்ப நன்றி

  ReplyDelete
 5. // என்ன தோழர்களே..வினைத்தொகை,பண்புத்தொகையை இனி எளிதாக கண்டு பிடித்து விடலாமா//

  நிச்சயமாக :)
  இலக்கண பகுதியை மிகவும் எளிய முறையில் விளக்கியுள்ளீர்கள் . மிக்க நன்றி :)

  ReplyDelete
 6. இதை புத்தகமாக்கி வெளியிடலாமே அண்ணா???
  அருமையான விளக்கங்கள்.. எல்லாரும் பிளாகர் பாவிக்கிறவங்களா இருக்க மாட்டாங்க இல்லையா? அதுதான் கூறினேன.

  ReplyDelete
 7. தமிழும் இலக்கணமும் மறந்துபோகும் நிலையில் அபூர்வமான தமிழ்தொண்டு உங்கள் பதிவுகள்.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. முன்பு படித்து இப்போது தான் ஞாபகம் வருகிறது.தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  ReplyDelete
 9. இந்த பதிவுகள் கூட நான் அரசு பணியாளர் ஆக காரணம் ஆகும்

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com