புது வரவு :
Home » , , , , , , » டி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29

டி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29

12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல்
            வணக்கம் தோழர்களே..பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோனைகளைப் பற்றி பார்ப்போம்.

           இப்பகுதியில் ஐந்து முதல் ஆறு வினாக்களை எதிர்பார்க்கலாம்.
அடிமோனை
         அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி வருவது அடிமோனை ஆகும்.
(எ.கா) டி விளையாடு பாப்பா - நீ
             ய்ந்திருக்கலாகாது பாப்பா
இணை மோனை 1, 2
          ஓரடியில் முதல் இரு சீர்களில் வரும் மோனை இணை மோனை ஆகும்.
(எ.கா) “றந்தார் றந்தா ரனையர் சினத்தை”
பொழிப்பு மோனை 1, 3
          ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் மோனை பொழிப்பு
மோனை ஆகும்.
(எ.கா) பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஓரூஉ மோனை 1, 4
         ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் மோனை ஓரூஉ மோனை
ஆகும்.
(எ.கா) ழுக்கம் விழுப்பம் தரலான் ழுக்கம்
கூழை மோனை 1, 2, 3
          ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் வரும் மோனை கூழை மோனை ஆகும்.
(எ.கா) “ல்விக் ரையில ற்பவர் நாற்சில”
கீழ்க்கதுவாய் மோனை 1, 2, 4
         ஓரடியில் முதல் சீர், இரண்டாம் சீர், நான்காம் சீர் போன்றவற்றில் வரும்
மோனை கீழ்க்கதுவாய் மோனை ஆகும்.
(எ.கா) “ற்றார் ழிபசி தீர்த்தல் ஃதொருவன்”
மேற்கதுவாய் மோனை 1, 3, 4
        ஓரடியில் ஒன்று, மூன்று, நான்காம் சீர்களில் வரும் மோனை மேற்கதுவாய் மோனை ஆகும்.
(எ.கா) “வானின்று உலகம் ழங்கி ருதலால்”
முற்று மோனை
        ஓரடியில் நான்கு சீர்களிலும் வரும் மோனை முற்று மோனை
(எ.கா) ற்க சடற ற்பவை ற்றபின்

அடி எதுகை
        அடிதோறும் முதல் சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி
எதுகை ஆகும்.
(எ.கா.) பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கு
               ஏழையினைக் கண்டனம் எனமே”
இணை எதுகை 1, 2
        ஓரடியில் முதல் இரு சீர்களில் வரும் எதுகை இணை எதுகை ஆகும்
(எ.கா) “இன்மையுள் இன்மை விருந்தொறால்”
பொழிப்பு எதுகை 1, 3
        ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் எதுகை பொழிப்பு எதுகை
ஆகும்.
(எ.கா) “தோன்றின் புகமொடு தோன்றுக”
ஒரூஉ எதுகை 1.4
           ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் எதுகை ஓரூஉ எதுகை
ஆகும்.
(எ.கா) “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்”
கூழை எதுகை 1, 2, 3
         ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் வரும் எதுகை கூழை எதுகை ஆகும்.
(எ.கா) “பற்றுக பற்றற்றான் பற்றிணை”
கீழ்க்கதுவாய் எதுகை 1, 2, 4
        ஓரடியில் முதலாம் இரண்டாம், நான்காம் சீர்களிலும் வரும் எதுகை
கீழ்க்கதுவாய் எதுகை ஆகும்.
(எ.கா) செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்
மேற்கதுவாய் எதுகை 1, 3, 4
         ஓரடியில் முதலாம், மூன்றாம் நான்காம் சீர்களில் வரும் எதுகை
மேற்கதுவாய் எதுகை ஆகும்.
“கற்க கசடற கற்பவை கற்றபின்”
முற்று எதுகை 1, 2, 3, 4
          ஓரடியில் நான்கு சீர்களிலும் எதுகை வந்தால் அது முற்று எதுகை ஆகும்.
(எ.கா) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
இயைபுத் தொடை         ஒரு செய்யுளின், அடிகளிலும் சீர்களிலும் அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபுத்தொடையாகும்.
(எ.கா) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
-------------------------------------------------------------------------------------------------------------
 பதிவு பயனுள்ளதாய் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.. பலருக்கு பயன்படட்டும்..
-------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                                            அன்புடன்





பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

10 comments:

  1. தொடருங்கள் தொடர்கிறோம்.!

    ReplyDelete
  2. ரொம்ப அவசியமான பதிவு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. அண்ணா நீங்கள வெளியிட்ட இரு பத்தகங்களையும் படிக்க ஆவலாக உள்ளது ஆனால் என்னால் பெற முடியாமைக்காக வருந்துகிறேன்...

    படித்தவர்கள் அருமை என்றார்கள்....

    ReplyDelete
  4. எளிமையாக மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்
    மதுமதி!நன்று!வாழ்த்துக்கள்!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  5. உங்களுடைய பகிவு மிகவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நன்றி.
    முற்று மோனை பகுதியில் தாங்கள் கொடுத்துள்ள எ.கா
    "கற்க கசடறக் கற்பனை கற்றபின்" என்று உள்ளது இதில் கற்பனை என்பதை கற்பவை என்று திருத்தம் செய்து கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. அட்டா..பாருங்கள் எவ்வளவு கவனக்குறைவு என்று..மாற்றிவிட்டேன்..சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..

      Delete
    2. அட்டா..பாருங்கள் எவ்வளவு கவனக்குறைவு என்று..மாற்றிவிட்டேன்..சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..

      Delete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com