புது வரவு :
Home » , » பெண் குழந்தையின் விலை 100 ரூபாய் - அடக்கொடுமையே

பெண் குழந்தையின் விலை 100 ரூபாய் - அடக்கொடுமையே

       
                                                                                                            /அம்மணியும் சின்ராசும்/


       பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் 22 ந்ததேதி கூடுகிறது மம்தா பானர்ஜியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க காங்கிரஸ் புது வியூகம்

         இன்றைய தலைப்புச் செய்தியை வாசித்துக்கொண்டிருந்த சின்ராசு,

"பாத்தியா அம்மணி"

         என்றபடி அந்தப் பக்கத்தைக் காட்டினான்.

"நான்..காலைலியே பாத்துட்டேனுங் மாமோவ்.."

"என்ன அம்மணி பிரச்சனையாம்..அந்த மம்தா மத்திய அரசு மேல இப்படி நம்பிக்கையிலா தீர்மான போடக் காரணம் என்ன"

"அதுக்கு காரணம் நெறைய இருக்குங் மாமா..ஆனா சில்லற ஏவாரத்துல அந்நிய நேரடி முதலீட்டிக்கு மத்திய அசராங்கம் அனுமதி கொடுத்தத கண்டிச்சு வர்ற கூட்டத்தொடரோட ரெண்டாவது நாளான 22 ந்தேதி நம்ம திரிணாமுல காங்கிரஸ் கட்சியோட தலைவியும் மேற்கு வங்காள மாநிலத்தோட முதலமைச்சருமான மம்தா பானர்ஜி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக முந்தாநாளு அறிவிச்சாங்க..அதுக்காக அவுங்க எல்லாக்கட்சிக்காரங்க கிட்டயும் பேசிட்டிருக்காங்க"

"காங்கிரசோட கூட்டணி போட்டு ரயில்வே அமைச்சரா இருந்தவங்க தான அம்மணி"

"ஆமாங் மாமா.. முதலமைச்சர் ஆன உடனே பதிவிய ராஜினாமா பண்ணிட்டாங்க"

"சரி மத்திய அரசு மேல அவுங்களுக்கும் கோவம்.என்ன தான் ஆகும்ன்னு பார்ப்போம்.."

"ஆமாங் மாமா.. நான் ஒரு கணக்கு சொல்றேன்..அதுப்படிதான் ஆகும்"

"என்ன கணக்கு அம்மணி"

"இப்பத்தான் நானே எந்த கட்சிக்கு எத்தன ஓட்டு இருக்குன்னு கணக்கு போட்டுட்டு இருக்கிறேன்..நாளைக்கு சொல்றனுங் மாமா"

"சரி அம்மணி நாளைக்கு கட்டாயம் சொல்லு.."

"சரிங் மாமா.. சொல்றனுங்"

"ஏ அம்மணி பால்தாக்கரேவ அரசு மரியாதையோட அடக்கம் பண்ணினாங்களாம்.. அதெப்படி அரசு மரியாதை கொடுத்தாங்க"

"மாமோவ்.. இதைப் பத்தி நாம பேசவேண்டாம்..ஏன்னா நம்ம வீட்டை சூறையாடினாலும் ஆடிப்போடுவாங்க..இதைப் பத்தி பேஷ் புக்குல யாரோ கருத்து சொல்ல அவங்களோட கடைகிடையெல்லாம் நொறுக்கி போட்டாங்களாம் நொறுக்கி"

          என்றவள் தன் கண்களை உருட்டிக் காட்டினாள்.

"ஐயய்யோ அதெங்க அம்மணி"

          செயற்கை பயத்தை ஏற்படுத்தினான் சின்ராசு.

"இங்கில்ல மாமா ..மும்பையில"

"அதான பாத்தேன். சரி அத விடு அம்மணி.."

            என்ற சின்ராசு கையில் இருந்த பேப்பரை கீழே வைத்துவிட்டு வேற என்ன அம்மணி சேதி"



"திருச்செந்தூர் கடற்கரையில சூரசம்ஹாரம் நடந்துச்சாம்"

"அது நடந்தா என்ன நடக்காட்டி என்ன.. அதனால நாட்டுக்கு என்ன லாபம்..அதவிடு வேற"

"நம்ம பிரதமர் கம்போடியா நாட்டுக்கு போயிருக்காராம் மாமா"

          அம்மணி சொல்லி புன்னைகைக்க,

"அவர விடு அம்மணி அவர் உலகம் முழுசும் கூட சுத்திட்டு வருவார்..பிதமர்ன்னா நாளு நாட்டுக்கு போவாரு வருவாரு..பின்ன நாம ரெண்டுபேருமா கவுர்மென்டு காசுல வெளிநாட்டுக்கு போக முடியும்?"

               சின்ராசுவைப் பாத்து சின்னதாய் முறைத்த அம்மணி,

"சரி அதவிடுங்க..திருப்பதியில சாமி தரிசனத்துக்கு கூட்டம் அலைமோதுதாம்"

"சும்மாவா அம்மணி..அத்தனை பாவத்தை மக்கள் பண்ணியிருக்காங்க.. கோயில்ல கொண்டு போய் கொட்டவேண்டாமா"

"நல்லா சொன்னீங்க மாமா"

"மேல சொல்லு அம்மணி..ஆமா குழந்தைய யாரோ 100 ரூபாய்க்கு வித்துப்போட்டாங்கன்னு சொன்னியே என்னது?"

"ஓ..அதுவா மாமா.. சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுல ஒரு கைகொழந்தைய கீழ போட்டு ஒரு பொம்பள பிச்சையெடுத்திட்டு இருந்திருக்கு..கொழந்தை பசி மயக்கத்துல கிறங்கி போய் கெடக்க,அக்கம் பக்கம் இருந்தவங்க எவ்வளவோ திட்டியும் அந்தப் பொம்பள கேட்கலை.போலீஸ்க்கு யாரோ சொல்ல போலீஸ் வந்து அந்தப் பொம்பளக்கிட்ட கொழந்தைக்கு பால் கொடுக்கச் சொல்லியிருக்கு ..அந்தப் பொம்பள எனக்கு பால் சுரக்காது இது என்னோட கொழந்தை இல்ல.நான் 100 ரூபாயிக்கு இன்னொரு பொம்பளைக்கிட்டிருந்து வாங்கியாந்தேன்னு சொல்ல அந்தப் பொம்பளையும் போலீஸ் புடிச்சு விசாரிக்கும்போதுதான் தெரிஞ்சதாம் அந்தக் கொழந்தை கட்டிட மேஸ்திரியோட கள்ளக் காதல்ல  பொறந்ததாம்.அதனால 1000 ரூபாய்க்கு வெலை பேசி 100 ரூவா அடவான்ஸ் கொடுத்துப்போட்டு கொழந்தைய இந்தப் பொம்பள வாங்கியாந்து பிச்சையெடுக்க ஆரம்பிடுச்சு..அப்புறம் அந்தக் கொழந்தைய கொழந்தங்க காப்பகத்துக்கு அனுப்பிச்சு போட்டு இந்த ரெண்டு பொம்பளங்களையும் ஏழு வருஷ ஜெயில் தண்டனையில போட்டுட்டாங்களாம்"

"என்ன கொடுமை அம்மணி..நாட்டுல இப்படியெல்லாமா நடக்கும்"

"ஆமா மாமா..இவளுக கொழுப்பெடுத்துப்போயி கள்ளக்காதல் பண்ணுவாளுக. கொழந்தைய பெத்து 100 ரூபாயிக்கு விப்பாளுக..நானாயிருந்தா அவளுக்கு தூக்கு தண்டையே கொடுத்திருப்பேன்..அந்தக் கட்டிட மேஸ்திரிய புடிச்சு உள்ள போட்டாங்களான்னு தெரியில..அவனையெல்லாம் புடிச்சு கரண்டு மரத்துக கட்டிவச்சு..தோலை உரிக்கோணும் ராசக்கோலு"

               அம்மணி கோபமாகப் பேச அவளை திசை திருப்பும் வண்ணம் கேட்டான் சின்ராசு..

"சரி விடு அம்மணி..என்ன பண்றது..ஆமா அம்மணி, நமக்கும் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் மேட்ச் நடந்துட்டு இருந்துச்சே என்னாச்சு அம்மணி"

"அதுவா..அதெல்லாம் மத்தியான சோத்துக்கு முன்னாடியே நாம்மாளுக ஜெயிச்சுட்டானுங்க மாமோவ்"

"என்ன அம்மணி சொல்றே..என்னால நம்பவே முடியலையே"

               நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அம்மணியைப் பாத்து செயற்கையாய் திகைக்க,அம்மணி சின்ராசைப் பார்த்து செல்லமாக முறைத்தாள்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

18 comments:

  1. காதலர் தினத்துல வர்ற கதை மாதிரியே இருக்கே?!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க அநியாயம்..

      Delete
  2. இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலர் இருக்க அங்கு போய் ஏன் பிறந்தாய் செல்ல மகளேன்னுதான் பாட தோணுது.

    ReplyDelete
  3. நானும் டிவியில் பார்த்தேன் இந்த கொடுமையை. கல்லிப்பாலுக்கு தப்பி இப்போ கூறு போட்டு விற்கும் நிலைியில் சமூகம்.

    ReplyDelete
  4. உலகத்தில் சிறந்தது தாய்மை
    என்கிற வரிகள் ஞாபகத்தில் வந்து போனது
    அருமையாக இவ்வார நிகழ்வுகளை
    சொல்லிப்போனமைக்கு மனமார்ந்த
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இந்தக் கொடுமை எல்லாம் எப்போது மாறுமோ...?
    tm6

    ReplyDelete
    Replies
    1. அதான் தெரியல தலைவா..

      Delete
  6. என்ன கொடுமைகள். அருமையான தொகுப்பு.

    ReplyDelete
  7. தாய்மையின் உன்னதம்
    அறியாத
    உடற்பசி எடுத்த
    பிணங்கள்...

    மனம் வலியெடுக்கும் சம்பவம் தோழரே..

    ReplyDelete
    Replies
    1. மாறுமா..மாறவேண்டும்..

      Delete
  8. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு விஷயம் கொடுமை :(( நல்லவேளை நடவடிக்கை எடுத்தாங்க

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com