பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் பிரபலங்கள் நடித்த திரைப்படங்கள் மண்ணைக் கவ்வுவதும் துளியும் எதிர்பாராத அறிமுக நாயகர்களின் படங்கள் வெற்றியடைவதும் தமிழ் திரையுலகில் சாதாரணமாக நடந்து வருவதுதான்.. பெரிய இயக்குனர்கள், பெரிய தயாரிப்பாளர்கள், பிரபல நடிகர்கள், பிரபல நடிகைகள், பிரபல தொழில் நுட்ப கலைஞர்கள் என்று ஒரு படத்தில் கூட்டணி அமைத்தால் கதையைப் பற்றி கவலைப் படாமல் படத்தைப் பார்க்க முதல் நாளே தியேட்டருக்கு செல்வது தமிழனின் வழக்கம். அதே வேளையில் முற்றிலும் புதுமுகங்களைத் தாங்கி நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வந்தாலும் பார்ப்பதற்கு ஏனோ விருப்பம் காட்டுவதில்லை. ஆனால் எதிர்பார்த்த பெரிய படம் தனக்கு திருப்தியளிக்கவில்லை என்றால் கடுமையான விமர்சனம் செய்யும் தமிழன், எதிர்பாராத சின்ன படம் சிறப்பாக இருக்கும்போது அதை பாராட்டவும் தயங்குவதில்லை..
கடந்த வருடங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் பெரும்பாலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது எனச் சொல்லலாம். அப்படி சொல்வதைக் காட்டிலும் படத்தைப் பார்க்க ரசிகர்களை தூண்டிய அளவிற்கு பில்டப் கொடுத்த படங்கள் யாவும் ரசிகர்களை திருப்தி செய்ய முடியாமலேயே திரும்பிச் சென்றது எனலாம்.
அந்த வகையில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம் துப்பாக்கி. துப்பாக்கி வெளிவருவதற்கு முன் பிரபலங்கள் நடித்த அத்தனைப் படங்களும் பெரிய வசூலை ஈட்ட முடியாமல்தான் திணறின. அதைப் போலத்தான் துப்பாக்கியும் தோல்வியடையும் என சிலர் ஆரூடம் சொல்லி வந்தார்கள். காரணம் பிரபலங்களுக்கு மார்க்கெட் போயிருந்ததுதான். விஜயின் முந்தைய படங்களான சுறா, காவலன் போன்றவை தோல்விப் படங்களின் பட்டியலில் சேர்ந்திருந்தன. நண்பன் படம் வெற்றி பெற்றிருந்தாலும் அது ஷங்கரின் படம் என்ற முத்திரையைக் குத்திக்கொண்டு போய்விட்டது.
துப்பாக்கி ஆரம்பித்தலிருந்து ரிலீஸ் தேதி வரைக்கும் ஏகப்பட்ட தடங்கலை சந்தித்திருந்தது. இறுதியாக குறிப்பிடப்பட்டிருந்த நாளில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தீபாவளியன்று ரிலீஸ் செய்தார்கள். இத்துடன் போட்டி போட எந்தப் படமும் இல்லாத போதும் சிம்புவின் போடாபோடி மட்டும் களத்தில் இருந்தது. ஆனால் துப்பாக்கிக்கு சரியான போட்டியாக அப்படம் அமையவில்லை..
ஒரு படம் ரிலீஸ் ஆனவுடனேயே விமர்சனங்கள் இணையத்தில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்துவிடும். அந்த விமர்சனங்கள் ஓரளவாவது படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது என்பது உண்மைதான். படத்தை முதல் நாள் பார்த்தவர்கள் இணையத்தில் படத்தைப் பாரட்டி எழுத, இன்று படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. 100 கோடி ரூபாய்க்கு மேலாக வசூலை ஈட்டிக்கொண்டிருக்கிறது. 2012 ம் ஆண்டின் பெரிய வெற்றிப் படம் துப்பாக்கி என்று கூடச் சொல்லலாம்.
துப்பாக்கியின் மாபெரும் வெற்றிக்கு காரணம் விஜயா அல்லது முருகதாஸா என ஆங்காங்கு பேசிக்கொள்வதை கேட்க முடிகிறது. விஜயின் ரசிகர் பட்டாளம்தான் படத்தை வெற்றியடையச் செய்தது.விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் அதனாலே வெற்றி எளிதானது என்று சொல்லுகிறார்கள். அப்படியானால் காவலனும் சுறாவும் தோல்வியைச் சந்திக்க காரணம் என்ன?
இந்திய அளவில் புகழ்பெற்று இருக்கும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தினால் தான் துப்பாக்கி வெற்றிப் பெற்றது என்றும் சிலர் சொல்ல கேட்க முடிகிறது. அப்படியானால் வெற்றியைத் தொடர்ந்து ருஷித்துக்கொண்டிருந்த சூர்யாவோடு வெற்றிப்பட இயக்குனர் முருகதாஸ் கூட்டணி அமைத்து இயக்கிய ஏழாம் அறிவு ஏன் எதிர்பார்த்த வெற்றியையோ வசூலையோ ஈட்டவில்லை என்கிற வினா வந்து நிற்கிறது. ஒரு படத்தின் வெற்றிக்கு எப்போதும் தனிமனிதன் காரணமாக இருந்ததில்லை. அது ரஜினிகாந்த் படமாக இருக்கட்டும் கமலஹாசன் படமாக இருக்கட்டும். நல்ல கதையம்சம் , நல்ல நடிப்பு, நல்ல கதாபாத்திரங்கள் நல்ல இசை , நல்ல ஒளிப்பதிவு, நல்ல பாடல்கள் என அனைத்து அம்சங்களும் ரசிகர்களைக் கவரும்போது படம் தானாகவே வெற்றியடைகிறது. அப்படி வெற்றியடையும் படத்தில் எந்தெந்த பிரபலங்கள் பணியாற்றினார்களோ அவர்களின் ரசிகர்கள் அவரைச் சுட்டிக்காட்டி இவரால்தான் படம் வெற்றி பெற்றது என்று சொல்லி வருவது இயல்பு.
ஒரு படத்தில் பணியாற்றும் அனைவரும் பிரபலங்கள் என்பது படத்தை பார்க்க ரசிகர்களைத் தூண்டும் அம்சமே தவிர படத்தை வெற்றி பெற வைக்கும் அம்சம் கிடையாது.முற்றிலும் புதுமுகங்கள் சேர்ந்து பணியாற்றிய பலபடங்கள் வெற்றியை ஈட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி துப்பாக்கியின் வெற்றிக்கு விஜயோ முருதாஸோ முழுக்க முழுக்க மட்டும் காரணமல்ல. அவர்களும் காரணம். அந்தப் படத்தில் பணியாற்றிய லைட்மேன்களும்,ஜூனியர் ஆர்டிஸ்டுகளும் கூட இப்படத்தின் வெற்றிக்கு உழைத்திருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்..
well said.
ReplyDeletekala karthik
நல்ல அலசல் சார்... முகம் தெரியாத வெற்றியாளர்கள் பல பேர் உண்டு... நன்றி...
ReplyDeleteஇரண்டாவது வாரத்தில் படம் படுத்து விட்டதாகச் சொல்கிறார்களே? 75 கோடியே கஷ்டமாமே?
ReplyDelete75 KODI NASHTAMA POI KUDA NAMBARA MATHIRI SOLLU PA FLOP AGARA PADAME 75 KODI NASHTAM AGATHU ITHU HIT PADAM VIJAYA PIDIKKATHAVANGA THAPPA UNGAKITTA SOLLI IRUKKANGA NEENGA NETLA SEARCH PANNI PAARUNGA
ReplyDelete