புது வரவு :
Home » , , » நண்பன் என்றாலே நல்லவன் என்று பொருளல்ல..

நண்பன் என்றாலே நல்லவன் என்று பொருளல்ல..

                                                                                                                          முகநூல் முனகல்-3
                                                                                                                        /என் முகநூலிருந்து/

நண்பன் என்றாலே
நல்லவன் என்று பொருளல்ல..
சமூக விரோதிக்கும்
நண்பன் இருக்கிறான்..

நல்லவனாக காட்டிக்கொள்ள
முயற்சிப்பதற்கு பதிலாக
நல்லவனாகவே
இருந்துவிட்டு போகலாம்..

இறக்கும் வரை
தேவைப்பட்டுக்கொண்டேயிருக்கிறது..
தேவை தீர்ந்துபோனதாய்
எவனும் சொன்னதில்லை..

வாய்ப்புக்களைத் தேடும்போது
வேகமாய் இருக்கிறோம்..
வேகம் குறைந்த பிறகே
வாய்ப்புகள் வாசற்கதவைத் தட்டுகிறது..

நமக்கு யாரும் உதவவில்லையென
வருத்தப் படுகிறோம்..
நாம் யாருக்கும் உதவவில்லையென
வருத்தப்படுவதேயில்லை...

இருக்கிறவன் இல்லாததைப்
போலவே காட்டிக்கொள்கிறான்..
இல்லாதவன் இருப்பதைப்
போலவே காட்டிக் கொள்கிறான்..

நமது எழுத்துகளே
நம்மைப் பற்றி
கிட்டத்தட்ட
சொல்லிவிடுகிறது..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

25 comments:

  1. அருமை...

    நம்மைப்பற்றி நாமே சொல்ல தேவையில்லை
    நம்மைப்பற்றி நாம் நம் சொல், எழுத்து, செயல், குணங்கள் ஆகியவைகள் மூலமாக சொல்லிவிடுகிறோம்...

    நல்லது தலைவரே...

    ReplyDelete
  2. ழகான வரிகள் பதிவுக்கு நன்றி...

    ReplyDelete
  3. நண்பன் என்றாலே
    நல்லவன் என்று பொருளல்ல...,
    >>
    ரொம்ப சரிதான் சகோ! பசுதோல் போர்த்திய புலிகள் இங்கு ஏராளம்...,

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய்..சரியாகச் சொன்னீர்கள்..

      Delete
  4. நமது எழுத்துக்களே
    நம்மை பற்றி
    கிட்டத்தட்ட
    சொல்லிவிடுகிறது
    >>
    அவ்வ் அப்போ நான் அறுந்த வாலுன்னு தெரிஞ்சு போச்சா?!

    ReplyDelete
    Replies
    1. அது தெரிஞ்சு எத்தனை நாள் ஆகுது..

      Delete
  5. அகத்தின் அழகு எழுத்திலும் தெரியும்...

    ReplyDelete
  6. மிகச் சரி
    உள்ளத்தில் உள்ளதுதானே
    சொல்லிலும் செயலிலும் வரும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா.. மகிழ்ச்சி

      Delete
  7. தேவைப்பட்டுக்கொண்டேயிருக்கிறது..
    தேவை தீர்ந்துபோனதாய்
    எவனும் சொன்னதில்லை..

    நமக்கு யாரும் உதவவில்லையென
    வருத்தப் படுகிறோம்..
    நாம் யாருக்கும் உதவவில்லையென
    வருத்தப்படுவதேயில்லை...

    அர்த்தமுள்ள மனம் கவர்ந்த வரிகள்!

    ReplyDelete
  8. அழகாகச் சொன்னீர்கள் கவிஞரே.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி முனைவரே..

      Delete
  9. \\நண்பன் என்றாலே
    நல்லவன் என்று பொருளல்ல..
    சமூக விரோதிக்கும்
    நண்பன் இருக்கிறான்..\\ அவனைப் பொறுத்தவரை அவனது நண்பன் நல்லவன்.

    \\வாய்ப்புக்களைத் தேடும்போது
    வேகமாய் இருக்கிறோம்..
    வேகம் குறைந்த பிறகே
    வாய்ப்புகள் வாசற்கதவைத் தட்டுகிறது..\\ இது உண்மையாகைடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏன் வேகமாக இருக்கும்போதே வாய்ப்புகள் கதவைத் தட்டக் கூடாது? எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

    \\நமக்கு யாரும் உதவவில்லையென
    வருத்தப் படுகிறோம்..
    நாம் யாருக்கும் உதவவில்லையென
    வருத்தப்படுவதேயில்லை...\\ நான் பலமுறை யாருக்குமே பிரயோஜமில்லாம தண்டமாயிருக்கொமேன்னு வருந்தியதுண்டு.

    \\நமது எழுத்துகளே
    நம்மைப் பற்றி
    கிட்டத்தட்ட
    சொல்லிவிடுகிறது.\\ நிறைய தப்பு தப்பா புரிஞ்சு வச்சிருக்கீங்கன்னு சொல்லிடிச்சு!!.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜெயதேவ்..

      என்ன புரிந்து கொண்டீர்கள் எனத் தெரியவில்லை.நன்றாகப் படித்தீர்களா?அனைத்தையும் குறிப்பிட்டு மாற்றுக்கருத்து சொல்லவேண்டும் என்று ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறீர்கள் என நன்றாகத் தெரிகிறது.

      சமூகவிரோதிக்கு நண்பன் நல்லவனா இருக்கலாம் சமூகத்திற்கு அவனால் என்ன பயன்? சமூகவிரோதி என்பவன் கெட்டவன்.அவனுக்கும் நண்பன் உண்டு என்பதே கருத்து.சமூக விரோதியின் நண்பன் சமூகவிரோதிக்கு நல்லவனா கெட்டவனா என்று பொருளல்ல..

      //ஏன் வேகமாக இருக்கும்போதே வாய்ப்புகள் கதவைத் தட்டக் கூடாது? எதை வைத்துச் சொல்கிறீர்கள்?//

      ஹாஹாஹா..அதை அந்த வாய்ப்புகளிடம்தான் கேட்கவேண்டும்.

      //நான் பலமுறை யாருக்குமே பிரயோஜமில்லாம தண்டமாயிருக்கொமேன்னு வருந்தியதுண்டு//

      செம கூத்துங்க..தேடிப்போய் பண்றதுதான் உதவி..போய் செய்யுங்கள் தோழரே..பல லட்சம் பேருக்கு உதவி வேண்டுமாம்.எதற்கு நீங்களே உள்ளுக்குள் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.எனக்கே வருத்தமாய் இருக்கிறது.

      மாற்றுக்கருத்தை எப்படியாவது சொல்லியாகவேண்டும் என்று கருத்துரையிட்ட உங்களுக்கும் இது பொருந்தும் போல இருக்கிறதே தோழர்..

      //நமது எழுத்துகளே
      நம்மைப் பற்றி
      கிட்டத்தட்ட
      சொல்லிவிடுகிறது.//

      உங்கள் எழுத்துகள் உங்களைத் தெளிவாகக் காட்டிக்கொடுத்துவிட்டது.

      நிறைய தப்பு தப்பா புரிஞ்சு வச்சிருக்கீங்கன்னு சொல்றதவிட எல்லாத்தை தப்பா படிச்சருக்கீங்கன்னு நெனைக்கிறேன்.
      ஒரு பதிவுக்கு மாற்றுக்கருத்து சொல்வது இயல்புதான் அதற்காக இப்படியா..ஹாஹாஹா..

      Delete
  10. நீங்க வழக்கமா பெரியாரைப் பற்றி எழுதினாலோ அல்லது இசுலாமியரைப் பற்றி எழுதினாலோ அங்க வந்துதானே மாற்றுக்கருத்தை பதிவிடுவீங்க..ஆச்சர்யமா இருக்கே இங்கேயும் வந்திருக்கீங்களே..

    ReplyDelete
  11. \\சமூகவிரோதிக்கு நண்பன் நல்லவனா இருக்கலாம் சமூகத்திற்கு அவனால் என்ன பயன்? சமூகவிரோதி என்பவன் கெட்டவன்.அவனுக்கும் நண்பன் உண்டு என்பதே கருத்து.சமூக விரோதியின் நண்பன் சமூகவிரோதிக்கு நல்லவனா கெட்டவனா என்று பொருளல்ல.\\ நண்பன் எனது ஒரு relative term அன்பரே. நீங்கள் கவிதையில் சமூகத்தின் நண்பன் எட்று குறிப்பிடவில்லை, வெறுமனே நல்லவன் என்று தான் சொல்லியிருக்கிறீர்கள்.


    \\ஹாஹாஹா..அதை அந்த வாய்ப்புகளிடம்தான் கேட்கவேண்டும்.\\ நீங்கள் சொன்ன மற்றவற்றை ஒப்புக் கொண்டாலும் இதை ஒப்புக் கொள்ள யாது அன்பரே, அதற்க்கு பெயரே வாய்ப்பு அது எப்போ வேண்டுமானாலும் வரும், நாம் ஓய்ந்த பின்னரே வரும்னு சொல்வதற்கில்லை.


    \\செம கூத்துங்க..தேடிப்போய் பண்றதுதான் உதவி..போய் செய்யுங்கள் தோழரே..பல லட்சம் பேருக்கு உதவி வேண்டுமாம்.எதற்கு நீங்களே உள்ளுக்குள் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.எனக்கே வருத்தமாய் இருக்கிறது.\\ நான் பண்ற உதவிகள் பலமுறை வீணாகிப் போயிருக்கிறது அதான். நிச்சயம் முயல்கிறேன்.

    \\மாற்றுக்கருத்தை எப்படியாவது சொல்லியாகவேண்டும் என்று கருத்துரையிட்ட உங்களுக்கும் இது பொருந்தும் போல இருக்கிறதே தோழர்..\\ அப்படியெல்லாம் இல்லை, நன்றாகப் பாருங்கள் நிச்சயம் துளியேனும் நியாயம் இருக்கும்.

    \\ஒரு பதிவுக்கு மாற்றுக்கருத்து சொல்வது இயல்புதான் அதற்காக இப்படியா..ஹாஹாஹா..\\ பதிவுலகில் நான் பார்த்தவரைக்கும் பதிவில் போட்டுள்ளதற்கு எதிர் கருத்தே சொல்லக் கூடாது என்ற எழுதப் படாத சட்டமே இருக்கிறது!! நான் மனதில் பட்டதை மட்டுமே சொன்னேன், எல்லாத்துக்கும் ஆமாம் போடுறவங்க நிச்சயம் உங்க நல்ல நண்பனா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது சார், டேஞ்சர்!! வாய்ப்புக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி தோழரே..மனதில் பட்டதை சொல்வது நல்ல விசயம்தான்..

      Delete
  12. தனித் தனி முகநூல் பதிவுகளாக இருந்தாலும் கடைசி வரிகளை மட்டும் விட்டு விட்டால் மற்றவை ஒரு முழு கவிதையாய் மணக்கிறது.

    ReplyDelete
  13. \\நீங்க வழக்கமா பெரியாரைப் பற்றி எழுதினாலோ அல்லது இசுலாமியரைப் பற்றி எழுதினாலோ அங்க வந்துதானே மாற்றுக்கருத்தை பதிவிடுவீங்க..ஆச்சர்யமா இருக்கே இங்கேயும் வந்திருக்கீங்களே.\\ இதில் என்னைக் குறிப்பிடுகிறீர்களா? தலைப்பு பிடித்திருக்கும் பதிவுகள் அனைத்துக்கும் போவேன். கடவுள் மறுப்பு நடக்கும் இடங்களில் அதிக நேரம் இருந்திருக்கலாம் ஏன்னா அங்கே என்னை லந்து செய்பவர்கள் அதிகம்!! பிரபலமான பதிவர்கள் யாருடைய பதிவுகளையும் நான் படிப்பதில்லை, மோகன்குமார் விதிவிலக்கு!!

    ReplyDelete
  14. அன்பின் மதுமதி - நண்பன் - அழகான விளக்கம் - அருமை அருமை - நமது சிந்தனைகள் - செயல்கள் - எழுத்து - இவை எல்லாமே நாம் யாரென்று காட்டிக் கொடுக்கும். நல்வாழ்த்துகள் மதுமதி -நட்புடன் சீனா

    ReplyDelete
  15. இருக்கிறவன் இல்லாததைப்
    போலவே காட்டிக்கொள்கிறான்..
    இல்லாதவன் இருப்பதைப்
    போலவே காட்டிக் கொள்கிறான்..

    நமது எழுத்துகளே
    நம்மைப் பற்றி
    கிட்டத்தட்ட
    சொல்லிவிடுகிறது..
    nice lines sir

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com