36 வது புத்தகக் கண்காட்சி சென்னையில் கோலாகலமாக துவங்கியிருக்கிறது.புத்தக வாசிப்பாளர்கள் கொண்டாடும் விதமாக இது அமையும்.எத்தனையோ பேர் தன் மனம் கவர்ந்த எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தேடி அது எங்கும் கிடைக்காமல் போக சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிக்கொள்ளலாம் என நாட்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களின் தேடலை இக்கண்காட்சி நிறைவு செய்யும்.
ஆரம்பத்தில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இந்தளவிற்கு வரவேற்பு இருந்ததா என்றால் இல்லையெனச் சொல்லலாம்.ஆனால் கடந்த நான்கைந்து வருடங்கள் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சி திருவிழா போல காட்சியளிக்கிறது.அதற்கு காரணம் சமூக வலைத்தளங்களின் எழுச்சியே.சமூக வலைத்தளங்களே இறந்து போன புத்தகங்களையும் உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.
தனக்கு பிடித்த புத்தகங்களை முகநூல் மற்றும் வலைப்பூக்களின் மூலமாக தனது நண்பர் வட்டத்திற்கு பரிந்துரை செய்கிறார்கள்.இதனால் அவர்களுக்கும் அந்தப் புத்தகத்தை தேடி வாசிக்கும் ஆர்வம் மேலோங்குகிறது.
முகநூல் மற்றும் வலைப்பூ பயனாளர்கள் இந்த நாளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றே சொல்லலாம்.கடந்த காலங்களில் ஒரு சில வலைப்பதிவர்கள் தனது புத்தகங்களை இக்கண்காட்சியில் வெளியிட்டார்கள்.இந்த ஆண்டும் சில வலைப்பதிவர்கள் புத்தகங்களை வெளியிடுகிறார்கள்.அவர்களுக்கு வலைப்பதிவுலகம் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ளலாம்.
பால கணேஷ்(மின்னல் வரிகள்)
அண்ணன் பாலகணேஷ் 'மின்னல் வரிகள்' என்ற வலைப்பூவில் எழுதிவருபவர். அவர் தனது வலைப்பூவில் எழுதிய நகைச்சுவைப் பகுதிகளைத் தொகுத்து 'சரிதாயணம்@சிரிதாயணம்' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார்.இந்தப் புத்தகம் இக்கண்காட்சியில் விற்பனைக்கு கிடைக்கும்.அதற்கு முன்னதாக இப்புத்தகம் குறித்த அறிமுகமும் இக்கண்காட்சியில் நடைபெற இருக்கிறது.
சத்ரியன்(மனவிழி)
தோழர் சத்ரியன் மனவிழி என்ற வலைப்பூவில் எழுதி வருபவர். தன் வலைப்பூவில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 'கண்கொத்திப்பறவை' என்ற பெயரில் நூலாக தொகுத்திருக்கிறார்.இந்நூல் கடந்தவாரம் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது.இந்தப் புத்தகம் இக்கண்காட்சியில் விற்பனைக்கு கிடைக்கும்.இப்புத்தகம் குறித்த அறிமுகமும் இக்கண்காட்சியில் நடைபெற இருக்கிறது.
கருணாகரசு(அன்புடன் நான்)
தோழர் கருணாகரசு 'அன்புடன் நான்' என்ற பெயரில் வலைப்பதிவு எழுதி வருபவர்.தன் வலைப்பூவில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 'நீ வைத்த மருதாணி' என்ற பெயரில் நூலாக தொகுத்திருக்கிறார்.அவர் எழுதிய 'நீ வைத்த மருதாணி' நூலும் வெளியாகியிருக்கிறது.இந்நூலும் கண்காட்சியி விற்பனைக்கு கிடைக்கும்.
கண்ணதாசன்(கவியாழி)
தோழர் கண்ணதாசன் 'கவியாழி' என்ற வலைப்பூவில் எழுதி வருபவர். தன் வலைப்பூவில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 'அம்மா நீ வருவாயா..அன்பை மீண்டும் தருவாயா' என்ற பெயரில் நூலாக தொகுத்திருக்கிறார்.இந்நூலை மணிமேகலை பிரசுரம் தனது அரங்கில் 13.01.13 ஞாயிறு மாலை 2.00 மணிக்கு வெளியிட இருக்கிறது.பதிவர்கள் அனைவரும் அந்நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள்.
பதிவுலகம் சார்பாகவும் பதிவர்கள் சார்பாகவும் மேற்கண்ட பதிவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளலாம்.
மேற்கண்ட புத்தகங்கள் அனைத்தும் வலைப்பூவில் எழுதப்பட்டு பின் அச்சாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக தனியாக வாழ்த்துகளைச் சொல்லுவோம்.
மேற்கண்ட பதிவர்கள் தவிர இன்னும் சில பதிவர்களின் புத்தகங்களும் விற்பனைக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.முறையான தகவல் இல்லாததால் அவற்றை பகிரவில்லை.
பதிவர்களே புத்தக திருவிழாவில் கலந்துகொள்ளுங்கள்.விழாவை சிறப்பியுங்கள்.
(பொங்கல் விழாவைக் கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்லவிருப்பதால் (ஈரோடு) நான் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்ள இயலாது என்பதையும் இத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்)
// 31 வது புத்தகக் கண்காட்சி //
ReplyDelete36 வது புத்தகக் கண்காட்சி !
புத்தகம் வெளியிடும் பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்...
தமது புத்தகங்களை புத்தகக் கண்காட்சியில் வெளியிடும் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிவரங்களுக்கு நன்றி!
very useful message. i wish Mr.Kaviyali Kannadasan sir to publish his poem book.
ReplyDeleteசக பதிவர்களை வாழ்த்தி பதிவு எழுதிய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி. பொங்கல் திருநாளைக் கொண்டாடக் கிளம்பியிருக்கும உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினருக்கும் என இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் கவிஞரே.
ReplyDeleteநிச்சயம் நூல் வெளியிடும் பதிவர்களை மனமார பாராட்டுகிறேன், வாழ்த்துக்கள்.. புத்தக கண்காட்சியை தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக பிரிந்து வாடுகிறேன்.. கனடாவில் தமிழ் புத்தக கண்காட்சி ஏதுமில்லை. :(
ReplyDeleteஅனைத்து தோழமைகளுக்கும் இனிய வாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..
ReplyDeleteபுத்தகம் வெளியிடும் அனைத்து நட்புகளுக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteமகிழ்ச்சி தரும் செய்தி
ReplyDeleteபதிவுக்கு மனமார்ந்த நன்றி
புத்தகம் வெளியிடும் நமது பதிவுலகத் தோழர்கள்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
tha.ma 4
ReplyDeleteநானும் வர முயற்சிக்கிறேன்.
ReplyDeleteதோழருக்கு வணக்கம்,
ReplyDeleteவாசகர்கள் நூலை வாங்கி வாசித்து கருத்துரைக்க வேண்டுகிறேன்.
நன்றிங்க நண்பரே நன்றிங்க.கடந்த இரண்டு நாளா எனது மடிக்கணினி மக்கர் பண்ணியதால் உங்களுக்கு நன்றி உடனே சொல்ல முடியவில்லை தங்களின் தலைப்பான வெற்றி நிச்சயத்தின் மூலம் வாழ்த்தியமைக்கு நன்றி.
ReplyDeleteஉங்களுக்கும்,வீட்டம்மாவுககும்,மஞ்சரிக்கும் எனது உளமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பாலகணேஷ் சார், சத்திரியன் சார், கருணாகரசு சார் கவியாழி கண்ணதாசன் சார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் மதுமதி - ஏற்கனவே மறுமொழி இட்டதாக நினைவு - மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறதா ? மட்டுறுத்துக - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteஎனக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனதை நினைத்து
ReplyDeleteவருத்தமாத்தான் இருக்குது.....
என்னோட அன்பு வாழ்த்துக்கள் அனைத்து நண்பர்களுக்கும்...
இன்று வெளியிடும் புத்தகம் ஒரு விதையாக உருவாகட்டும்...
நாளை விருட்சமாக இன்னும் பல புத்தகங்கள் உருவாகட்டும்....
புத்தகம் வெளியிடும் பதிவுலகத் தோழர்கள்
ReplyDeleteஅனைவருக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteபுத்தகம் எழுதி வெளியிடும் நண்பர்களுக்கு என் வாழ்த்துகள்.
ReplyDeleteமென்மேலும் புத்தகங்கள் பல எழுதி புகழ்பெறவும் வாழ்த்துகள். :-))
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete