தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ஒரு காலத்தில் சிம்மசொப்பனமாக விளங்கிய சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் குறித்து உலகிற்கு தெரியா பல செய்திகளுடன் அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தயாராகி இன்று வெளியாகியிருக்கும் படம் வனயுத்தம். சர்ச்சைக்குரிய கதைகளை தேர்வு செய்து, அதை படமாக்கும் இயக்குனர்களில், ஒருவர் ஏ.ஆர்.ஆர் ரமேஷ். ஏற்கனவே, "குப்பி, போலீஸ் குவார்ட்டர்ஸ் போன்ற படங்களை இயக்கிவர். அப்படங்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தின.இந்நிலையில், வீரப்பன் கதையை மையமாக வைத்து, "வனயுத்தம் படத்தை, தற்போது இயக்கியுள்ளார்.
இதில், வீரப்பனாக நடிக்கும் கிஷோர் அவ்வேடத்திற்கு பிரமாதமாக பொருந்தியிருக்கிறார். போலீஸ் அதிகாரி விஜயகுமாராக அர்ஜுனும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமியும் நடித்துள்ளனர்.இவர்களோடு லட்சுமி ராய் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்..இதில், சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக பிரச்னை எழுந்ததால், இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. கோர்ட் உத்தரவுப்படி, சில காட்சிகளை நீக்கி விட்டு, தற்போது, இந்த படத்தை வெளியிடவுள்ளனர். கர்நாடகா-தமிழகம் என, இரு மாநில போலீசாரையும், ஒரு காலத்தில் ஆட்டுவித்த, வீரப்பனின் கதை என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.2004 ல் சுடப்பட்ட வீரப்பனை இப்படத்தின் வாயிலாக மீண்டும் காணலாம்.
'களவாணி' வெற்றியை அடுத்து தொடர்ந்து விமல் ஏறுமுகத்தில் இருக்கிறார்.வரிசையாக அவரது படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்தவரிசையில் விமல் ஓவியா மீண்டும் இணைந்த 'சில்லுன்னு ஒரு சந்திப்பு' இன்று வெளியாகியிருக்கிறது.மெட்ராஜ் எண்டர்பிரைஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘சில்லுன்னு ஒரு சந்திப்பு’. இதில் நாயகனாக விமல், நாயகிகளாக ஓவியா, தீபாஷா நடிக்கின்றனர். நீண்ட இடைவேளைக்குப்பிறகு முக்கிய பாத்திரத்தில் சாருஹாசன் வருகிறார். மனோபாலா முதன் முறையாக ரோபோ, மேஜர் என இரட்டை வேடத்தில் தோன்றுகிறார். அவருடைய நகைச்சுவையும் படத்தில் எதிர்பார்க்கலாம்.இப்படத்தை ரவிலல்லின் இயக்கியிருக்கிறார்.
சில்லுன்னு ஒரு சந்திப்பைப் பற்றி அவர் கூறும்போது, விமல் இதுவரை நடித்திராத முற்றிலும் புதிய கேரக்டரில் இதில் வருகிறார். விமல், ஓவியா ஜோடி பொருத்தம் சிறப்பாக அமைந்துள்ளது.தீபாஷா, ஓவியா இருவரும் கேரக்டர் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்து கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளனர்.கமலஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். படத்தின் கதையை கேட்டதும் இப்படத்தில் நடிக்க சம்மதித்தார்.
இந்தப் படத்தின் பாடல்கள் ஓரளவு ஹிட்டாகியிருக்கிறது.இன்று வெளியாகும் ஒரே காதல் படம் இது.காதலர் தினம் கொண்டாடும் ஜோடிகள் பெரும்பாலும் இந்தப் படத்தைப் பார்க்கவே விரும்புவார்கள்..
படங்களின் முன்னோட்ட பகிர்வு சிறப்பு! நன்றி!
ReplyDeleteநன்றி!
Deleteதளத்துல அதகளம் பண்ணியிருக்கீங்க ....வடிவமைப்பு ரெம்ப பிரமாதம் .....
ReplyDeleteஅப்படியா..மகிழ்ச்சி சுப்பு..
Deleteவணக்கம்.தங்களது பிளாக்கை எதிர்பாராதவிதமாகத்தான் சந்திக்க நேர்ந்தது.
ReplyDeleteதங்களது எழுத்து நடை சிறப்பாகவே இருக்கிறது.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்
அன்போடு வரவேற்கிறேன் ஐயா..மிக்க மகிழ்ச்சி..
Delete