புது வரவு :
Home » , , , » டி.என்.பி.எஸ்.சி - முற்காலச் சோழர்களும் அவர்களின் வீழ்ச்சியும்

டி.என்.பி.எஸ்.சி - முற்காலச் சோழர்களும் அவர்களின் வீழ்ச்சியும்

வணக்கம் தோழர்களே.. முறகாலச் சோழர்கள் குறித்தும் அவர்களின் வீழ்ச்சி குறித்தும் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான்.கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே.இவன் இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான்.கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே, தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது.காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும்.உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை விளங்குகிறது.இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.

முற்காலச் சோழர்கள்
இளஞ்சேட்சென்னி
கரிகாலன்
நெடுங்கிள்ளி
நலங்கிள்ளி
கிள்ளிவளவன்
கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கண்ணன்
பெருநற்கிள்ளி

முற்காலச் சோழர்களின் வீழ்ச்சி

கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் சோழரிடையே அதிகாரப் போட்டிகள்[மேற்கோள் தேவை] வலுப்பெற்றதால் அவர்கள் வலுவிழந்த நிலையில் இருந்தனர். இவ்வாறு சோழர் வலுவிழந்ததைப் பயன்படுத்தி 'களப்பாளர்' அல்லது களப்பிரர் எனப்படும் ஒரு குலத்தவர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சியை மையமாகக் கொண்டிருந்த சோழநாட்டின் பகுதி களப்பிரர்களிடம் வீழ்ச்சியடைந்தது. சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். கி.பி நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பல்லவ மன்னன் சிம்மவிட்டுணு களப்பிரர்களிடமிருந்து இப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பல்லவர்களுடைய ஆட்சிக்காலத்திலும் சோழர்கள் சிற்றரசர்களாக ஆங்காங்கே ஆட்சி செய்து வந்தனர். எனினும், பண்டைய சோழநாட்டின் பெரும்பகுதி, பல்லவர்களுக்கு அடங்கிய முத்தரையர்களினால் ஆளப்பட்டு வந்தது.களப்பிரர் ஆட்சி காரணமாக சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், சோழ இளவரசர்கள் சிலர் தமிழகத்தை விட்டு வெளியேறித் தெலுங்கு, கன்னட நாடுகளுக்குச் சென்று குடியேறி ஆட்சியை நிறுவினார்கள். இவர்கள் ரேனாட்டுச் சோழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.இவ்வாறு சென்ற சோழர்கள் கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் மாவட்டங்களில் குடியேறி 'ரேனாண்டு சோழர்கள்' என்று சிறப்புப் பெற்று விளங்கினர். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர்.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com