வணக்கம் தோழர்களே.. தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கும் தோழர்களுக்கு இந்தத் தளம் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.. பல்வேறு தலைப்புகளில் இந்தத்தளத்தில் எழுதி வந்தாலும் நீங்கள் கொடுக்கும் உற்சாகத்தாலும் பலருக்கும் பயன்படுகின்றது என்ற சந்தோசத்தாலும் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி குறித்த பதிவுகளை பதிந்து வருகிறேன்.
பொதுத்தமிழ் பகுதியில் மொழிப்பயிற்சி பகுதிகள் மற்றும் தமிழ்நாடு குறித்த பதிவுகள் முழுமையாகப் பதிவிட்டாயிற்று.அப்பதிவுகள் அனைத்தையும் தங்கள் மின்னஞ்சலில் பெற admin@madhumathi.com என்ற மின்னஞ்சலுக்கு அஞ்சல் செய்யுங்கள்.மற்ற பதிவுகள் தொடர்ந்து பட்திந்து கொண்டிருக்கிறேன்.புதிய பதிவுகளை உடனே பெற தங்கள் மின்னஞ்சலை தளத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்.
பலர் மாதிரி வினாக்கள் பதிவிட கேட்டப்படியால் இப்போது மாதிரி வினாத்தாள்களையும் பதிவிட்டு வருகிறேன்.அதன் முதல் கட்டமாக பல பத்திரிக்கைகளில் வெளியான மாதிரி வினாக்களைத் தொகுத்து பதிவிடுகிறேன்.இப்போது தினமலரில் வெளியான மாதிரி வினாக்களை வெளியிட்டு வருகிறேன்.அதை வாசிக்க விரும்புபவர்கள் இங்கே சென்று வாசிக்கவும்.
படிப்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போல நீங்களே உங்களை பரிசோதித்து பார்ப்பது முக்கியம்.எப்படி சுயமாய் உங்களை பரிசோதித்து பார்ப்பதென்றால் பல மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு நீங்களாகவே உங்களுக்கு தேர்வு வைத்துக்கொள்ளுங்கள்.பிறகு புரியும் நீங்கள் எந்தப் பாடத்தில் பின் தங்கி இருக்கிறீர்கள் என்று.அந்தப் பாடத்தை இனம் கண்டு பிடித்து அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
மாதிரி வினாத்தாள்களை வாசிக்க இங்கே செல்லவும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !