புது வரவு :
Home » , » சூரியன் சுட்டெரிக்கிறான்..

சூரியன் சுட்டெரிக்கிறான்..

ஒவ்வொரு நாளும்
தொலைந்து போய்க்கொண்டேயிருக்கிறது..
தேடிப்பிடிக்கத் தெரியவில்லை..
-----------------------------------
இரவைத் தின்றுவிட்டு 
பகல் பல்லைக் காட்டுவதும்
பகலைத் தின்றுவிட்டு
இரவு இருண்டுபோவதும்
அரங்கேறிக்கொண்டுதானிருக்கிறது..
------------------------------------
நிலமது நெஞ்சு வலியால்
ஆங்காங்கே 
துடித்துக்கொண்டேயிருக்கிறது..
அறுத்துப் போடுகிறோம்-ஆனால்
சிகிச்சையளிக்கத்தான் யாரும் 
முன் வருவதில்லை..
----------------------------------
நிலத்தின் தாகத்தை மட்டும்
மழையது அவ்வப்போது
தணித்துக் கொண்டிருக்கிறது..


கலப்பிடக் காற்றுதான்
வாழ்நாள் குறைந்த
மக்களுக்கும் மாக்களுக்கும்
உயிரைப் பிச்சையாய்
போட்டுக்கொண்டிருக்கிறது..
-------------------------------------
சூரியன் 
சுட்டெரிக்கிறான்..
அக்னி சிறகுகள்
அகல கால் வைக்கஆரம்பித்துவிட்டன..
காட்டை அழித்து காற்றில் 
கார்பன்-டை-ஆக்ஸைடை கலந்த
நமக்கு கொடுக்கும் அன்பளிப்புதான் அது..
---------------------------------------
அப்பாவியாய் அனைத்தையும் 
ஆகாயம் வேடிக்கைப் பார்க்கிறது..
தொடர்பு எல்லைக்கு 
அப்பால் இருக்கும் ஆகாயத்தையும்
தொலைதொடர்புத் துறை 
தொந்தரவு செய்தபடிதான்..
-----------------------------------
உயிர்களை
உற்பத்தி செய்பவனே அவை
உயிர் வாழத் தேவையான
அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறான்..
முரண்பாடு முண்டியடிக்கிறது..
-----------------------------------
ஐம்புலனில்
ஏதோவொன்றுதான்
உயிர்களைத் தின்று
பசியாறப்போகிறது என்பதில்
ஐயம் சிறிதுமில்லை..
-----------------------------------

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

26 comments:

 1. """"உயிர்களை
  உற்பத்தி செய்பவனே அவை
  உயிர் வாழத் தேவையான
  அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறான்..
  முரண்பாடு முண்டியடிக்கிறது..''''

  எதார்த்தமான வரிகள்
  எழிலான
  எழுத்தில்
  அற்புதம்
  அன்பரே

  ReplyDelete
 2. நன்றி,,/நண்டு@நொரண்டு/ராஜகோபாலன்/

  ReplyDelete
 3. மனித அழிவிற்கு எவ்வுயிர்க்கும் அல்லாத சிந்திக்கும் விஞ்ஞான அறிவே..!சரிதானே...
  நண்பரே சிந்திக்க வைக்கும் வரிகளை அடங்கிய கவிதை

  ReplyDelete
 4. கவிதையில் அறிவியல் இந்தளவு விளையாடுவதை நான் காண நேர்ந்தது இரண்டாவது முறை என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 5. வருகைகும் வாழ்த்துக்கும் நன்றி..
  /வீடு/சூர்யஜீவா/

  ReplyDelete
 6. தாகம் நிறைந்த கவிதை... பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. அழைப்பிற்கு நன்றி தோழரே... உங்கள் வலைப்பூவில் இணைவதில் மகிழ்ச்சி...

  ReplyDelete
 8. அறிவியல் கவிதை அருமை

  //
  இரவைத் தின்றுவிட்டு
  பகல் பல்லைக் காட்டுவதும்
  பகலைத் தின்றுவிட்டு
  இரவு இருண்டுபோவதும்
  அரங்கேறிக்கொண்டுதானிருக்கிறது..

  //

  இந்த வரியை திரும்ப திரும்ப படிச்சேன்

  வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
  /சி.கருணாகரசு/மயிலன்/

  ReplyDelete
 10. அழகு கவிதை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. நன்றி
  /இரத்தினவேல் ஐயா/

  ReplyDelete
 12. தமிழ் எதைப் பற்றி வேண்டுமானாலும் அலசி ஆராயும் என்று நிரூபித்து விட்டீர்கள். விஞ்ஞானக் கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. இந்தக் கவிதைக்குள் நிறையவே ஆதங்கங்கள்.இயற்கை அழிவு பற்றியும் சூரியன் அதனால்தான் கோபம் கொள்கிறானோ என்பதாயும் அற்புதமாயிருக்கு !

  ReplyDelete
 14. கவிதையில் அறிவியல்...!!!

  நான் முதன் முதலாக படிக்கும் அறிவியல் கவிதை, வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
  /ஹேமா/நாஞ்சில் மனோ/

  ReplyDelete
 16. //உயிர்களை
  உற்பத்தி செய்பவனே அவை
  உயிர் வாழத் தேவையான
  அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறான்..
  முரண்பாடு முண்டியடிக்கிறது..//

  சுயநலமும் அறிவியல் முன்னேற்றமும் காரணம்

  ReplyDelete
 17. நன்றி..
  /சி.பி.செந்தில்குமார்/

  ReplyDelete
 18. இரவைத் தின்றுவிட்டு
  பகல் பல்லைக் காட்டுவதும்
  பகலைத் தின்றுவிட்டு
  இரவு இருண்டுபோவதும்
  அரங்கேறிக்கொண்டுதானிருக்கிறது..

  -இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தன. வித்தியாசமான, விஞ்ஞானம் கலந்த கவிதையைப் படித்ததில் மிகத் திருப்தி. ‌எப்படி உங்களைத் தவற விட்டேன்? இனி என் வருகையைத் தவறாமல் எதிர்பார்க்கலாம் நண்பா... அருமை!

  ReplyDelete
 19. உங்களது வருகைக்கு நன்றி..நிச்சயம் ஒவ்வொரு முறையும் தங்களை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 20. இன்றுதான் முதலாக தளத்திற்கு வந்தேன் தோழர்.

  தொடரவைத்துவிட்டீர்கள்.தொடர்கிறேன்.உங்கள் தொடர்தலில்

  ReplyDelete
 21. வாங்க கோகுல் உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது..

  ReplyDelete
 22. வணக்கம் மதுமதி.
  உங்களின் இக்கவிதை பூமியின் பாதிப்பை நன்கு உணர்த்துகிறது.
  என்னுடைய வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :)

  கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.

  http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_23.html

  ReplyDelete
 23. கவிதை நன்று:)

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

கணித பாடத்திட்டம்

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

காலமும் வேலையும்

எண்ணியல்

Followers

மீ.சி.ம

Popular Posts

சராசரி

Google+

Tips Tricks And Tutorials

வயது கணக்கு

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com