புது வரவு :
Home » , , , , » கதை படித்தேன்;ரசித்தேன்-'மின்னல் வரிகள்' கணேஷ்

கதை படித்தேன்;ரசித்தேன்-'மின்னல் வரிகள்' கணேஷ்

                வணக்கம் தோழர்களே..இந்த மாதம் நான் எழுதிய இரன்டு குடும்ப நாவல்களைப் படித்துவிட்டு கருத்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வரும் இணைய தோழர்களுக்கு என் நன்றி..
               மாத நாவல் உலக நட்சத்திரங்களான ராஜேஷ்குமார், சுபா, இந்திராசௌந்திரராஜன்,பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோரது நாவலைப் படித்துதான் நானும் எழுத ஆரம்பித்தேன்.மாலைமதியில்(குமுதம்) 2001ம் ஆண்டு 'வந்துவிடு காயத்ரி' என்ற க்ரைம் நாவல் எனது முதல் நாவல் நந்தினியில் வெளியான 'அன்பென்ற மழையிலே' எனது 10 வது நாவல்..(இடையில் சில வருடங்கள் எழுதவில்லை)
           இந்த நாவல்கள் வெளியான மறுநாளே அதை வாசித்துவிட்டு  ராஜேஷ்குமார்,சுபா,இந்திரா சௌந்திரராஜன் , பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களோடு சேர்ந்து பணிபுரிந்தவரும் அவர்களின் நண்பருமான 'மின்னல் வரிகள்' எனும் வலைப்பூவில் எழுதி வரும் திரு.கணேஷ் அவர்கள் கதைகள் பற்றிய அவரது கருத்தை எழுதி மின் அஞ்சல் வாயிலாக அனுப்பி இருந்தார்.அது எனக்கு இன்னும் எழுத உற்சாகம் ஊட்டுவதாய் இருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

            அன்பி்ற்குரிய மதுமதி அவர்களுக்கு,

          அழகிய நந்தினி, நந்தினி ஸ்பெஷல் ஆகிய இதழ்களில் வெளிவந்த உங்களின் நாவல்களைப் படித்தேன்; ரசித்தேன். துவக்கம் முதல் இறுதி வரை தொய்வின்றி படிக்கும் ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையில் அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்.

'அன்பென்ற மழையிலே'

           நாவலைப் பொறுத்தமட்டில் அத்தனை கதாபாத்திரங்களும் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இயல்பான மனிதர்கள் என்பது ஒரு ப்ளஸ். நாவல் முழுமையும் அவர்கள் பேசும் வசனங்கள் மிகமிக இயல்பாக, சரளமாக அமைந்திருப்பது மற்றொரு ப்ளஸ். அகல்யாவின் அப்பாவும், அம்மாவும் 'மகனிடம் இருக்க முடியவில்லை, மருமகளால் பிரச்சனை' என்று சொல்லிக் கொண்டு வரும் அந்த இடத்திலேயே அவர்கள் மகளைத் திருத்துவதற்காகப் போடும் நாடகம் இது என்பதை ஊகித்து விட்டேன் நான். நிறைய நாவல்கள் படித்ததால் வந்த 'பழக்க' தோஷமோ என்னவோ...?  
            அம்மாவும், அப்பாவும் வந்து சேர்ந்தபின், கணவன் பூபாலன் அவர்கள் இங்கேயே இருககட்டும் என்றபின் அகல்யாவுக்குள் ஏற்படும் மனப் போராட்டங்களை நீங்கள் எழுத்தில் வடி்த்திருந்த விதம் அருமை. அங்கே ஸ்கோர் பண்ணியிருக்கிறீர்கள். அஞ்சனா சொல்லுகிற 'தண்ணிய அள்ளி அள்ளி ஊத்தாம பாட்டி மாதிரி மெதுவா ஊத்து, முகத்துக்கும் உடம்புக்கும் சேர்த்து சோப் போடாத, முதுகில கீறாத' என்பன போன்ற விஷயங்கள் மிக நுணுக்கமானவை. குடும்பத்தின் சீனியர் சிட்டிசன்களுக்கும், பிஞ்சுகளுக்கும் ஏற்படும் உறவில் இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்து எழுதியிருப்பது ரசனையைக் கூட்டுகிறது.

''உறவுகள் ‌தொடர்கதை'

         இந்த நாவலை என் நண்பர் ராஜேஷ்குமார் பாணியில் மூன்று ட்ராக்குகளில் கொண்டு சென்று திரிவேணி சங்கமமாக கிளைமாக்ஸில் ஒன்று சேர்த்திருக்கிறீர்கள். மகளிர் விடுதி நடத்தும் கோதையம்மாள் கதை, கல்யாணம் செய்து கொண்ட கல்யாணியின் கதை, முகுந்த- நர்மதாவின் காதல் கதை என்று மூன்று ட்ராக்குகள் துவங்கும் இடத்திலேயே எப்படி லிங்க் கொடுப்பீர்கள் என்று யோசிக்க ஆரம்பிதேன். 
         20 வருடமாக விடுதி நடத்தி வரும் கோதையம்மாள், நர்மதாவும், முகுந்த்தும் இளைஞர்கள் என்பதால் இவற்றில் லின்க் இருக்கும், கல்யாணியின் கதை ப்ளாஷ் பேக்தான் என்று எண்ணியே படித்து வரும் போது கல்யாணிக்குப் பெண் குழந்தை பிறந்தது என்று வரும் கட்டத்தில் இவர்களின் தொடர்பை சரியாக ஊகித்து விட்டேன். (இதை நான் ஜம்பமடித்துக் கொள்வதற்‌காகச் சொல்லவில்லை. ரா.கு. இந்த மாதிரி 3 ட்ராக் கதை எழுதும் போதும் பலமுறை பாதியிலேயே கண்டுபிடிக்க முயன்று, சரியாக கண்டுபிடித்து மகிழ்ந்ததுண்டு. 'கெட்ட' பழக்கம் இப்பவும் விடலை.) ஆனால் முகுந்தின் அம்மா கல்யாணியின் தோழி என்று நீங்கள் தந்திருந்த ட்விஸ்டை நான் ஊகிக்காததால் மிக ரசிக்க முடிந்தது. இயல்பான சுப முடிவிற்கு அது உறுதுணையாக இருந்ததையும் மிக ரசித்தேன். 
                அதேபோல நாவலின் துவக்கத்தில் அந்தக் காதலர்கள் ஊட்டியில் 'புன்னகை மன்னன்' கமல் போல சூஸைட் பாயிண்டில் குதித்து தற்கொலை செய்து கொள்ள வந்திருக்கிறார்களோ என்பது போல தோன்ற வைத்து, பின் மாற்றிக் காட்டிய சாதுர்யமும் ரசிக்க வைத்தது. காதலர்களின் உரையாடல் மிகச் சரளமாக இருந்தது. (உங்களுடையது லவ் மேரேஜோ?)

             மொத்தத்தில் வாசக நிலையிலிருந்து பார்த்தால் இரண்டு கதைகளுமே ஏமாற்றம் அளிக்கவில்லை. படிக்கும் சுவாரஸ்யத்திற்குக் குறைவின்றி, நல்ல ரசனையை அளித்தன. 

              மதுமதியின் நாவல்கள் என்றால் தைரியமாக வாங்கிப் படிக்கலாம் என்ற எண்ணம் சராசரியான வாசகனுக்கு நிச்சயம் இந்தக் கதைகளைப் படித்ததும் எழும். அது உங்களின் வெற்றி.

             நிறையக் கவிதைகள், கொஞ்சம் க்ரைம், இப்போது ஸோஷியல் நாவல் என்று கலக்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுடன்
கணேஷ்(மின்னல் வரிகள்)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
         ஓர் இரவில் இரண்டு கதைகளையும் வாசித்து முடித்து காலையில் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு பத்து நிமிடங்கள் கதைகளைப் பற்றி உரையாடி என்னை வாழ்த்திய புலவர் இராமாநுசம் ஐயா அவர்களுக்கும் மின் அஞ்சல் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் பாராட்டிய அனைத்து தோழர்களுக்கும் நன்றி.. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வலையுலக நட்புகளுககு ஒரு மகிழ்வான அறிவிப்பு

          ரும ஆகஸ்ட் 15 (புதன்) சுதந்திர தினத்தன்று சென்னையில பதிவர் சநதிப்புக்குத் திட்டமிடப்பட்டுளளது, புலவர் ச.இராமாநுசம் அவர்கள் தலைமையில், திரு,சென்னைப பித்தன் அவர்கள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நிகழ இருககிறது, கவிதை பாடுபவர்கள் கவியரங்கத்தில் கவிதை பாடலாம், மற்றையோர் தங்களுக்குப பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் (சுவாரஸ்ய அனுபவம். நகைச்சுவைத் துணுக்கு போன்றவை) பேசலாம்.இவை பற்றிய விரிவான அறிவிப்பு இனி வரும் நாட்களில் வெளிவரும். 
முழுக்க முழுக்க நமக்கான இந்த நிகழ்ச்சிக்கு அவசியம் வருகை தரும்படி அனைவரையும வேண்டுகிறோம். நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் தங்களின் வருகையை 98941 24021 (மதுமதி), 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938 (சென்னைப் பித்தன்), 90947 66822 (புலவர் சா,இராமானுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்..

இத்தகவலை நட்புகள் அனைவரும் தங்கள் பதிவுகளில் வைத்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறோம்.
=================================================================
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

15 comments:

  1. Replies
    1. அப்படியா ..சிறப்பு.

      Delete
  2. வணக்கம் சார்
    திரு கணேஷ் சார் வாசித்தேன்
    கணேஷ் சார் உண்மையுள் ஒரு சிறந்த ரசிகன்
    ஒரு நல்ல ரசிகனால் மட்டுமே ஒரு படைப்பின் ஆழத்தை உணரமுடியும்

    கணேஷ் சார் கருத்து மிக்க ஆவலை தூடுகிறது
    என்னைப் போன்றவகள் உங்கள் கவிதைக்கு ஏற்கனவே நல்ல ரசிகர்கள்
    உங்கள் கதையை வாசிக்க ஆவலாக இருக்கேறேன் சார்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி தோழர்..

      Delete
  3. எழுத்தை மிக ரசித்து நான் எழுதிய விமர்சனக் கடிதத்தை அனைவருடனும் நீங்கள் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி கவிஞரே. புலவரின் படிக்கும் வேகம் அசாதாரணமானது. அனைவராலும் இயலுமா என்ன...

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் மகிழ்ச்சியே..அனைவராலும் இயலாத விசயம்தான்.கதை வாசித்து விமர்சனம் தந்தமைக்கு மிக்க நன்றி..

      Delete
  4. தரமான ரசனை மிக்கவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தரமான விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா.!

    ReplyDelete
  5. மின்னல் வேகத்தில் படித்து மிக அருமையாக
    விமர்சனம் செய்துள்ள மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுக்கு
    மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  6. திரு கணேஷ் அவர்கள் தங்களுடைய இரண்டு நாவல்களைப் படித்துவிட்டு எழுதியிருந்த பதிவை நானும் படித்தேன். சிறப்பாக நூல் மதிப்பு செய்து இருந்தார். நல்ல நாவல்களைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அறிமுகம் அருமை எனினும் எனக்கு கவலைதான் அண்ணா எனக்கு புத்தகம் கிடைக்கவில்லையே... இந்தியாவரும் நண்பர்களிடம் சொல்லிவிட்டுள்ளேன் கொண்டு வந்தால் சந்தோஷம்.....

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு... தில்லியில் கிடைக்க வழியில்லை.... சென்னை வரும்போது தான் வாங்க வேண்டும்.....

    பதிவர்கள் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள். ஆகஸ்ட் மாதம் சென்னை வர முயற்சிக்கிறேன்....

    ReplyDelete
  9. கணேஷின் விமரிசனம் படித்த பின் புதினங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுதியாகிறது.தொடர்ந்து சிறப்பான படைப்புகள் தர வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. தங்களது இரு நாவலுக்குமான கணேஷ் Sir அறிமுகம் மிக மிக அருமை! நாவலை படிக்க ஆர்வமாய் இருக்கிறது! வாழ்த்துக்கள் Sir!

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com