புது வரவு :
Home » , , , » மக்கள் நலன் காக்கும் 'இரும்பு பெண்மணி' முதல்வர் ஜெயலலிதா

மக்கள் நலன் காக்கும் 'இரும்பு பெண்மணி' முதல்வர் ஜெயலலிதா

          சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுக்கு எதிர்ப்பு. பாராளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண இன்று அனைத்துக் கட்சி கூட்டம் என்று தொலைக்காட்சி செய்தி வாசித்துக்கொண்டிருக்க அதைப் பார்த்துக்கொண்டிருந்த சின்ராசு திரும்பி அம்மணியைப் பார்த்தான்.
" கேட்டியா அம்மணி"

"ஆமாங் மாமா.. இந்தப் பிரச்சனையப் பத்தி பாராளுமன்றத்தில் 184 வது விதியின் கீழ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேணும்ன்னு பாராளுமன்றம் கூடின அந்த ரெண்டு நாளும் எதிர்கட்சிங்க கோரிக்கை வச்சாங்க மாமா.. இதனால கூட்டம் நடத்த முடியாம ஒரே அமளி ஆகிப்போச்சாம்..  இதுக்கு ஒரு முடிவு தெரியற வரைக்கும் நாங்க ரெண்டு சபையையும் நடத்த வுட மாட்டோம்ன்னு எதிர் கட்சிங்க சொல்லுதுங் மாமா.. ஏற்கனவே நெலக்கரி சுரங்க பிரச்சனைக்காக பிரதமர் பதவி விலகணும்ன்னு  எதிர்கட்சிங்க குளிர்கால கூட்டத்தொடர நடத்த விடாம பண்ணின மாதிரி இப்பவும் ஆயிடப்போவுன்னு அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்னைக்கு கூட்டி பாராளுமன்றத்தை அமைதியா நடத்தறதப் பத்தி பேசப்போறாங்களாம்.. இதைப் பத்தி கூட்டணி கட்சிகளோடவும் பேசச் சொல்லி குலாம் நபி ஆசாத்துக்கிட்ட கலைஞர் கூட வலியுறுத்தியிருக்கிறாராம்"

"சரி.. எல்லாம் கூட பேசி நல்லதா ஒரு முடிவெடுக்கட்டும்.. ஏ அம்மணி முன்னாள் பிரதமர் குஜ்ரால் ஏதோ சீரியஸா இருக்குறதா சொல்றாங்களே"

"ஆமாங் மாமா.. அவருக்கும் வயசாயிடுச்சில்ல.. இப்ப 92 வயசாம்.. போன வருசமே கிட்னி கெட்டுப்போச்சாம்.. அப்பிருந்தே ஆஸ்பத்திரியிலதான் இருப்பாரு போல.. இப்ப அவருக்கு மூச்சு வுட முடியல்யாம்.. செயற்கை சுவாசந்தான் கொடுத்திட்டு இருக்காங்களாம்.கவலைக்கிடமா இருக்குறதா பேசிக்கிறாங்க மாமா"
"அடடா..ம்...அம்மணி நம்ம அன்னகசாரே கூட இருந்தாரே ஒருத்தரு"
"அரவிந்த கெஜ்ரிவாலா"
"கெஜ்ரிவாலோ வஜ்ரவேலோ.. அவரு ஏதோ புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்காராமே"

"ஆமாங் மாமா.. ஏற்கனவே கட்சி ஆரம்பிக்கிற விசயத்துலதான் அன்னாகசாரேவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் பிரிவினை ஏற்பட்டுச்சு.. இவரு பிரிஞ்சு வந்து 'ஆம் ஆத்மி' ன்னு ஒரு கட்சி ஆரம்பிச்சுட்டார்.வர்ற எலெக்‌ஷன்ல போட்டி போடுறாராம்'
"அவரு போட்டி போடட்டும் அம்மணி தப்பில்ல.. யாரு ஓட்டு போடுறதாம்"
"அதைப் பத்தி அவருதான் மாமா கவலைப்படோணும்..நமக்கென்ன வுடுங்க.."
"ஆமா அம்மணி..அதுவும் சரிதான்"
                என்ற சின்ராசு வானத்தை அண்ணார்ந்து பார்த்தான்.அதைப் பார்த்த அம்மணி,

"ஏனுங் மாமா,, மேல என்னத்த பாக்குறீங்க"

"அதில்ல அம்மணி இன்னைக்கு கனமழை பேயுன்னு டி.வி ல சொன்னாங்க.. அதுக்கான் அறிகுறியே இல்லையே"

"ஐயோ மாமா.. கனமழை பேயும்.ஆன இங்கில்லை மதுரை திருநெல்வேலி பக்கமாம்.. ஒழுங்கா சேதியக் கேட்டாத்தானே"

"அப்படியா அதானே பாத்தேன்.. சரி அம்மணி.. நம்ம முதலமைச்சரை மக்கள் நலன் காக்கும் "இரும்பு பெண்மணி' ன்னு யாரோ சொன்னாங்கன்னு சொன்னியே"

"ஆமா மாமா.. நம்ம சட்டமன்ற வைரவிழா புகைப்படக் கண்காட்சிய பாக்கறதுக்கு ஐஸ்லாந்து நாட்டு நாடாளுமன்ற தலைவர் நாலு பேர்த்தோட வந்தாராம்.நம்ம சபாநாயகர் தனபாலு சுத்திக்காட்டியிருக்காரு.. அப்போ தொட்டில் கொழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம்ன்னு அம்மாவோட திட்டங்களையெல்லாம் எடுத்துச் சொல்லியிருக்காரு.. அதுமட்டுமில்லாம வறுமைங்கற பேச்சுக்கே இடம் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டை மாத்த "தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்" ஆவணத்தை அம்மா வெளியிட்டிருக்காங்க.. நீங்க அடுத்தமுறை இங்க வரும்போது இந்தத் தொலைநோக்குத் திட்டத்தோட பயன்பாட்டை நேரடியா பாப்பீங்கன்னு எடுத்துச் சொல்லியிருக்கார்..இதைப் பத்தின புகைப்படங்களைப் பார்த்து முடிச்சதுக்கப்புறம் ஐஸ்லாந்து நாடாளுமன்ற குழுவோட தலைவர் ஜோகன்ஸ்பர்க் தமிழ்நாட்டோட முதலமைச்சர் ஜெயலலிதா மக்கள் நலன் காக்கும் 'இரும்பு பெண்மணி' அப்படின்னு புகழ்ந்தாராம்..

"அப்படியா.. புது திட்டமும் நல்லாத்தான் இருக்குது..பார்ப்போம்"

"அப்புறம் மாமா..இங்கிலாந்துக்கு எதுப்பா மொத ஆட்டத்துல ஜெயிச்சமில்ல"

"ஆமா.. ரெண்டாவது ஆட்டத்துல தோத்து போயிட்டமா?

"எப்படிங் மாமா..சரியா சொன்னீங்க"

"இவுங்க ஆடுன லட்சணத்தைதான் நானும் பாத்தனே.."

"ஆமாங் மாமா.. கம்பீர் மட்டும்தான் ஏதோ தாக்குப்புடிச்சு ஆடுறானாரு.. மத்தவங்க எல்லாம் சொதப்பிப்போட்டாங்க மாமா"

"அடுத்த ஆட்டத்துல ஜெயிச்சா போவுது வுடு.. சரி அம்மணி  மத்தியான சோத்துக்கு வூட்டுக்கு வந்தாலே நேரம் போறது தெரிய மாட்டேங்குது.. நான் வயலுக்கு போறேன்.. நீ கன்னுக்குட்டிக்கு தண்ணி காட்டிப்போட்டு சீக்கிரம் வந்து சேரு"
                என்ற சின்ராசு எழுந்து  வீட்டை விட்டு வெளியே வந்தான்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

13 comments:

  1. seythikal thokuppu -

    mikka nantri!

    ReplyDelete
  2. தலைப்பு பார்த்து கடுப்பு ஆச்சு ..உள்ளே படிச்சதும் அது குறைஞ்சு போச்சு ..

    ReplyDelete
  3. இரும்பு பெண்மணி கரண்டு குடுப்பாரா ?????

    ReplyDelete
    Replies
    1. கொடுப்பார் என்று நம்புவோம்..

      Delete
  4. நான் என்னவோ கெஜ்ரிவால் சொன்னாருன்னு நெனச்சேன் ...ம் அதன பார்த்தேன்

    ReplyDelete
    Replies
    1. அதுக்குத்தான் தலைப்புச் செய்தியை மட்டும் படிக்காதீங்கன்னு சொல்றது..

      Delete
  5. இரும்பு மின்சாரம் முதலில் தரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. தருவார்கள் என்று நம்புவோம்..

      Delete
  6. தலைப்பு அருமை! சின்னராசுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. அவுங்க ரெண்டு பேரும் நல்லாதான் நியுஸ் பேசிக்கறாங்க.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com