புது வரவு :
Home » , , , » TNPSC - பகுத்தறிவுக் கவிஞர் பாரதிதாசன்

TNPSC - பகுத்தறிவுக் கவிஞர் பாரதிதாசன்

இயற்பெயர்: சுப்புரத்தினம் 

பெற்றோர்:  கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள்

மனைவி:  பழநி அம்மையார்

பிறப்பு: ஏப்ரல் 29, 1891 

ஊர்: புதுவை 

அமூகப் பங்களிப்பு: கவிஞர்,திரைப்பட பாடலாசிரியர்,அரசியல்வாதி

இறப்பு: ஏப்ரல் 21 1964 (அகவை 72) 


சிறப்புப் பெயர்கள்:

பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர்,இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ்,
பூங்காட்டுத் தும்பி 

 வாழ்க்கைக் குறிப்பு:

 புதுச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

படைப்புகளில் சில:

பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
பாண்டியன் பரிசு (காப்பியம்)
எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
குடும்ப விளக்கு (கவிதை நூல்)
இருண்ட வீடு (கவிதை நூல்)
அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
இசையமுது (கவிதை நூல்)

திருக்குறளின் பெருமையை விளக்கி, பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது.

பாரதிதாசனின்  சிறந்த தொடர்கள்:

'இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!'

'எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!'

தமிழுண்டு தமிழ் மக்க ளுண்டு - இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு'

'தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு! '

“ எங்கள் தமிழ் உயர்வென்று

நாம் சொல்லிச் சொல்லித்

தலைமுறைகள் பல கழித்தோம்

குறை களைந்தோமில்லை ”

“நம்பிக்கை உள்ளவனிடம் எல்லாம் உண்டு
“நம்பிக்கை இல்லாதவனிடம் ஒன்றுமில்லை”

“நாஞ்சிலம், ராட்டையும் நாட்டின் ஈரல்கள்”

“தமிழை என்னுயிர் என்பேன்”

“பாரடா உன் மாநில சமூகத்தை”

“கல்வியில்லா பெண் களர்நிலம் போன்றவள்”

“தொண்டு செய்வாய் தமிழுக்கு
துறைதோறும், துறைதோறும்”


Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com