புது வரவு :
Home » , » ஐய்யய்யோ..கொலைவெறி

ஐய்யய்யோ..கொலைவெறி

"மாமா மாமோவ்..எங்க போயிட்டீங்க..கயித்து கட்டில்ல மல்லாந்து  படுத்துக்கிட்டு நம்ம பையன் கொலைவெறி கொலை வெறின்னு கத்திக்கிட்டு இருக்கான்..என்ன ஆச்சு ஏதாச்சுன்னு தெரியிலயே மாமா..நேத்து நைட் தூக்கத்துலயும் இப்படித்தான் கத்திகிட்டு இருந்தான்..ஏதாவது காத்து கருப்பு அண்டியிருக்குமா மாமா..அட என்னான்னு கொஞ்சம் சீக்கிரம் வந்து பாருங்களேன்"
              என்ற அம்மணி சின்ராசிடம் ஓடிவர பேப்பரை படித்துக்கொண்டிருந்த சின்ராசு அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தான்..
"என்ன மாமா பையனுக்கு என்னமோ ஆயிடிச்சுன்னு சொல்லிட்டிருக்கேன்..நீங்க சிரிக்கிறீங்க"
''அட அறிவு கெட்ட அம்மணி பையன் மேல காத்து கருப்பு ஒண்ணும் அண்டல அவன் நல்லாத்தான் இருக்கான்""
"நல்லாத்தான் இருக்கானா..செத்த உள்ளாற வந்துதான் பாருங்களேன்..கொலவெறி கொலவெறின்னு கத்திட்டு இருக்கானா இல்லையான்னு"
''ஆமா அம்மணி நானுந்தான் கேட்டேன்..அவன் கத்துல பாட்டு பாடிட்டு இருக்கான்"
"என்னது பாட்டு பாடிட்டு இருக்கானா?என்ன மாமா சொல்றீங்க?''
''ஆமா அம்மணி..புதுசா வந்திருக்குற பாட்டு..நம்ம ரஜினி மருமகன் தனுஷில்ல"
"ஆமா"
"அவரு நடிக்க ரஜினியோட பொண்ணு டைரக்டு பண்ண கமலோட பொண்ணு அதான் ஏழாம் அறிவுல நடுச்சுதே அந்தப் பொண்ணு தனுசுக்கு சோடியா நடிக்குதாம்..அந்த படத்துக்கு தனுசே எழுதி பாடுன்ன பாட்டுத்தான் கொலவெறி கொலவெறின்னு ஒரு பாட்டு அதத்தான் நம்ம பையன் பாடிட்டிருக்கான்"
"அப்படியா நான் என்னமோ ஏதோன்னு பயந்து போயிட்டேன் மாமா.ஆனா பாட்டு மாதிரி தெரியில..ஏதோ பொன்ணுக்கிட்ட பேசுற மாதிரியில்ல இருக்கு"
"அம்மணி முன்னல்லாம் பாட்டுக்கு கவிதை எழுதுவாங்க..இப்ப காலம் மாறிப்போச்சு பேசிக்கிட்டிருக்கிற வசனத்தையே பாட்டா போட நெறய மியூசிக் டைரக்டருங்க வந்துட்டாங்க.."
"சரிமாமா மக்கள் கேட்பாங்களா"
"என்ன அம்ம்ணி இப்படி கேட்டுப் போட்ட..உனக்கு யூடூப்பு தெரியுமா?''
"யூடூப்புன்னா உழவு ஓட்டற டிராக்டரு டயருக்கு புதுசா ஒரு டியூப்பு வந்திருக்குன்னு சொன்னீங்களே அதுவா"
"அட அதில்ல புள்ள யூடியூப்புன்னா இண்டர்நெட்டுல இருக்குற ஒரு சமாச்சாரம்..எல்ல விசயமும் அதுல அடங்கியிருக்கு..புதுசா எதுவந்தாலும் அதுல பாக்கலாம்..அந்த யூடூப்புல இந்த பாட்டத்தான் போன வாரத்துல லட்சகணக்கான பேரு டவுன்லோடு பண்ணினாங்களாம்"
"அப்படியா ஆச்சர்யமா இருக்கே? சரி மாமா தனுசு ஏதோ பொம்பள புள்ளைகள பத்தி தப்பா சொன்னாருன்னு ஒரு சேதி வந்துச்சே இந்த பாட்டுதானா"
"ஆமா அம்மணி"
"அந்த படத்தோட பேரு என்ன மாமா"
"மூணுன்னு சொன்னாங்க"
"மூணு நாலுன்னு வக்கிறத்துக்கு பதிலா கொலவெறின்னே வச்சுட்டு போலாம்"
"ஏன் அம்மணி பையன் பாட்டு பாடினத்துக்கே என்ன ஆச்சு ஏதாச்சுன்னு பதறி போயிட்டியே..தன் பையன் நுரையீரல்ல் கட்டியிருக்குன்னு தெரிஞ்ச யுவ்ராஜ்சிங்கோட அம்மா எவ்வளவு வேதனை பட்டிருப்பாங்க"
''ஆமா மாமா அத நெனச்சா மனசுக்கு கஸ்டமாத்தான் இருக்கு..சிகிச்சை எடுத்தா சரியாப் போயிடுமாம்..அந்த தம்பிக்காக நானும் ஆண்டவன வேண்டிக்கிறேன்''
''இங்கப் பாரு அம்மணி தமிழ்நாட்டுல 20 சுகாதார நிலையம் கட்டுறாங்களாம்..அது நம்மூருலயும் ஒண்ணு கட்டுறதா பேப்பர்ல போட்டிருக்கான்''
''சுகாதார நிலையம் கட்டறது முக்கியமில்ல மாமா அத சுகாதாரமா கவர்மெண்டு வச்சுக்கிறதுதான் முக்கியம்..மூணு மாசத்துக்கு முன்னாடி கீழ்பாக்கம் ஹாஸ்பிடல்ல தீ விபத்து நடந்த அவசர சிகிச்சை பிரிவயே இன்னும் சுத்தம் பண்ணாம வச்சிருக்காங்க''
"வாஸ்தவமான பேச்சு அம்மணி" 
"அத வுடுங்க மாமா மழ ஒரு அளவுக்கு ஓயுதாமா"
"ஆமாமா நாளைக்கெல்லாம் கொறஞ்சிடுமாம்..தாமிர பரணி ஆத்துல வெள்ளம் போகுதாம்..அப்புறம் ஊட்டியில நெலச்சரிவு..மெட்ராசுல ரோடெல்லாம் தண்ணியாம்"
''ஆமா மாமா போன வருசத்த விட இந்த வருசம் அதிகமா மழ வரும்ன்னு சொல்றாங்க.."
 "சரி மாமா மணி ஒன்பது ஆகப்போது சீக்கிரம் போய் மோட்டரப் போடங்க ஒரு மணிநேரம் நெல்லங்காடு பாயட்டும்..பத்து மணிக்கு கரெண்ட கட் பண்ணினா அப்பறம் மூனு மணிக்குதான் வரும்''
"ஆமாம் புள்ள"
     என்ற சின்ராசு எழுந்து மோட்டார் ரூமை நோக்கிப்போனான்.

என்ன அன்பரே..படிச்ச விசயம் பிடிச்சிருந்தா உங்களோட கருத்தை பதிச்சுட்டு மறக்காம வாக்க பதிவு பண்ணுங்க..இது இன்னும் நாலு பேரை போய்ச்சேரட்டும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

17 comments:

  1. வணக்கம் சார் ..
    மண் மனம் கமழும் உரையாடலில் உலக நிகழ்வுகளை
    கொஞ்சம் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் ..
    கொலைவெறி கேட்டேன் ... இவர்களின் கொலைவெறி வரிகளில் கொஞ்சமும் , வலிமையான தமிழில் நிறையவும் தெரிகிறது ...

    ReplyDelete
  2. கலந்துரையாடல் பாணியில் அருமை

    ReplyDelete
  3. கர்ருத்துக்கு நன்றி..
    /அரசன்/ரஹீம் கஸாலி/

    ReplyDelete
  4. மின் தடையை இவ்வளவு நாசுக்காய் உள்ளே நுழைச்சு கலக்கிட்டீங்க

    ReplyDelete
  5. பதிவை முடிக்கலாம்ன்னு நினைக்கும்போது நம்ம வீட்டுல மின்வெட்டு அதான் அதையும் சேர்த்து பதிய வேண்டியதாப்போச்சு தோழரே..

    ReplyDelete
  6. உரையாடலோடும், நகைச்சுவையோடும்,மின்(வே)ட்டையும் சேர்த்து ஒரு அற்புதமான பதிவு.. கலக்கல்..

    ReplyDelete
  7. கருத்துக்கு நன்றி கருன்..

    ReplyDelete
  8. நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. உண்மைதாங்க தற்போது வரும் பாடல்கள் தனியாக பாடினால் பயந்து ஓடக்கூட சூழ்நிலைதான் ஏற்படும் பேர்ல..

    அழகான உரையாடல்...


    சுகாதர நிலையங்கள் எல்லா இடங்களிலும் இப்படித்தான் இருக்கிறது இன்னும் கொஞ்சம் சீர்பெற்றால் நன்றாகத்தான் இருக்கும்...

    ReplyDelete
  10. அரசு ஆங்காங்கே சீர்படுத்தித்தான் வருகிறது..இல்லை என்று சொல்லிவிட முடியாது..சுகாதாரத்தைக் கடைபிடிக்க நோயாளிகளும் ஒத்துழைக்க வேண்டும்..

    ReplyDelete
  11. சுகாதார நிலையம் கட்டறது முக்கியமில்ல மாமா அத சுகாதாரமா கவர்மெண்டு வச்சுக்கிறதுதான் முக்கியம்..மூணு மாசத்துக்கு முன்னாடி கீழ்பாக்கம் ஹாஸ்பிடல்ல தீ விபத்து நடந்த அவசர சிகிச்சை பிரிவயே இன்னும் சுத்தம் பண்ணாம வச்சிருக்காங்க''

    நாட்டு நடப்பை மிகவும் சிறப்பான ஆக்கத்தின்மூலம் வெளிக்காட்டி உள்ளீர்கள் அருமை!....வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கும் என் ஆக்கங்களைப் பின் தொடர்ந்து கருத்திட்டு வருவதற்கும் .

    ReplyDelete
  12. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    ReplyDelete
  13. /அம்பாளடியாள்/திண்டுக்கல் தனபாலன்/வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  14. இங்கேயும் கொலவெறிய ...மிக்க அருமை நண்பரே..

    ReplyDelete
  15. யதார்த்தம் , யதார்த்தம் . அழகு , அருமை .

    ReplyDelete
  16. /ஸ்ரவாணி/
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    ReplyDelete
  17. அன்பின் மதுமதி - நாட்டு நடப்பினைப் பற்றிய பார்வை நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com