எத்தனை
ரூபாய் நோட்டுகள்
எரிந்துபோய்த் தெருவில்
சாம்பலாகி சவமாய்
கிடக்கிறதெனத் தெரியவில்லை..
ஒரு கணக்காளரை
நியமித்திருந்தால் ஒருவேளை
கணக்கிட்டு சொல்லியிருப்பார்..
அதுவும் இப்போது இயலாது..
இலக்கங்கள் எல்லாம்
புகையைக் கக்கியபடி
கருகிப்போய்
உருகிப்போய் கிடக்கின்றனவே...
செல்வந்தனுக்கு
செலவென்பது
எறும்பு கடித்த மாதிரி..
குடிசைவாசிக்கு-அது
தேள் கடித்த மாதிரி
அவனால் தாங்கிக்கொள்ள முடியாது..
அவர்களின் தீபாவாளி
பட்டாசு வெடிப்பது அல்ல
யாரோ வெடிக்கும்
சத்தத்தை கேட்பதுதான்..
பணத்தை செலவிட்டு
பட்டாசைப் பற்றவைத்து-அது
வானத்தில்
வண்ணக்கோலமிட்டதைக் கண்டு
செல்வந்தன்
வீட்டுப் பிள்ளை பெற்ற
சந்தோசத்தை விட-அதை
எங்கோ நின்று
கண் கொட்டாமல் பார்த்த
குடிசைவாசி குழந்தைகளின்
குதூகலம் தான்
உண்மையான
தீபாவளிக் கொண்டாட்டமாய்ப் படுகிறது.
*****
காசைக் கரியாக்குறதுன்னு சொல்லுவாங்களே, இதைத்தானாண்ணே..! நாம எப்பவும் வேடிக்கை பார்க்குற கட்சிதான்..! வெடிகிட்ட போறதுன்னாலே நமக்கு உதறும்..!;)
ReplyDelete