உறங்கிப்போக
முயற்சிக்கிறேன்..
கண்கள்
கதவைத்திறந்து கொள்கிறது..
-------------------------------
தனிமையில்
படுக்கும்போதுதான்
எனக்கு முன்னதாக
என் படுக்கை பரிதவிக்கிறது..
-------------------------------
தலையணையை
உன்னுருவமாய் பாவிக்கிறேன்.
அது அஃறிணை என்று
அவ்வப்போது நிரூபிக்கிறது..
--------------------------------
என்னோடு நீ
இல்லாத இரவுகள்
விண்ணோடு
விண்மீன் இல்லாத
இரவாய் வெறிச்சோடி கிடக்கிறது
உன் விரலது தீண்டாமல்
முயற்சிக்கிறேன்..
கண்கள்
கதவைத்திறந்து கொள்கிறது..
-------------------------------
தனிமையில்
படுக்கும்போதுதான்
எனக்கு முன்னதாக
என் படுக்கை பரிதவிக்கிறது..
-------------------------------
![]() |
வெள்ளை ரோஜாவும் சிகப்பு ரோஜாவும் |
உன்னுருவமாய் பாவிக்கிறேன்.
அது அஃறிணை என்று
அவ்வப்போது நிரூபிக்கிறது..
--------------------------------
என்னோடு நீ
இல்லாத இரவுகள்
விண்ணோடு
விண்மீன் இல்லாத
இரவாய் வெறிச்சோடி கிடக்கிறது
-----------------------------
உன் விரலது தீண்டாமல்
நான் தான் வாடிப்போய்விட்டேன்
என் விரலது தீண்டலில்
நீ வாங்கிக்கொடுத்த ரோஜா
இன்னமும் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறது
--------------------------------------------
தனிமையை
தரிசிக்கும்போதுதான்
என் கண்களுக்கும்
தூக்கத்திற்குமான தூரம்
எவ்வளவு என்று
எண்ணிப் பார்க்க முடிகின்றது..
--------------------------------------------
நீயில்லாத அறையில்
மின்விசிறிகூட
விருப்பமில்லாமல்தான்
சுற்றிக்கொண்டிருக்கிறது..
என் நினைவுகள்
விருப்பப் பட்டுத்தான்
உன்னைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன..
---------------------------------------------
அணைந்து போக
ஆசைப்படும்
என் அறை விளக்கும்-உனை
அணைத்துக்கொள்ள
ஆசைப்படும்
இந்த அழகுச் சிலைக்கும்
இந்த இரவு
இலவசமாகவே ஏமாற்றத்தை
அள்ளித் தந்தது...
---------------------
நாளை
இரவு வரும்..வரலாம்..
இன்று இறந்துபோன இரவு
நாளை உயிர்த்தெழ வாய்ப்பில்லை..
--------------------------------------------
--------------------------------------------
நீயில்லாத அறையில்
மின்விசிறிகூட
விருப்பமில்லாமல்தான்
சுற்றிக்கொண்டிருக்கிறது..
என் நினைவுகள்
விருப்பப் பட்டுத்தான்
உன்னைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன..
---------------------------------------------
அணைந்து போக
ஆசைப்படும்
என் அறை விளக்கும்-உனை
அணைத்துக்கொள்ள
ஆசைப்படும்
இந்த அழகுச் சிலைக்கும்
இந்த இரவு
இலவசமாகவே ஏமாற்றத்தை
அள்ளித் தந்தது...
---------------------
நாளை
இரவு வரும்..வரலாம்..
இன்று இறந்துபோன இரவு
நாளை உயிர்த்தெழ வாய்ப்பில்லை..
--------------------------------------------
காதல் மிக அழகாக த்னனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. ரசனைமிக்க வரிகள். ந்ன்று!
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
காதலில் விழுந்துட்டீங்களா
ReplyDelete"இன்று இறந்துபோன இரவு
ReplyDeleteநாளை உயிர்த்தெழ வாய்ப்பில்லை"
>>>>
மாப்ள இதான் டாப்பு!
''...நீயில்லாத அறையில்
ReplyDeleteமின்விசிறிகூட
விருப்பமில்லாமல்தான்
சுற்றிக்கொண்டிருக்கிறது..
என் நினைவுகள்
விருப்பப் பட்டுத்தான்
உன்னைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன..''
தனிமையின் காதலான விபரணம் சிறப்பு. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
சகோ ஒரிரு வரியை மட்டும் சுட்டி மறுவரியை தாழ்த்த மனம் ஒப்பவில்லை...
ReplyDeleteமீண்டும் ஒரு முறை எனது தளம் வந்து எனது சைட் பாரை பார்க்கவும் எனக்கு இதை விட தங்களுக்கு பரிசு தர வழியில்லை..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வன்னியின் முதல் பதிவருடன் நடந்த ஒரு விபரீதச் சந்திப்பு
விரகதாபத்தை விரசமின்றி அழகுறச் சொல்லியது அருமை.
ReplyDeleteமது,
ReplyDeleteகாதல் அழகானது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDelete/கணேஷ்/நண்டு@நொரண்டு/ராஜீ/விக்கி/கோவைக்கவி/அம்பலத்தார்/சத்ரியன்/
/ம.தி.சுதா/
ReplyDeleteஎன் எழுத்துகள் தங்களுக்கு பிடித்ததில் மன மகிழ்கிறேன்.மற்ற பதிவர்கள், தங்கள் தள வாசகர்கள் என பார்க்கும் வண்ணம் தங்கள் தளத்தில் இடம் ஒதுக்கி என்னை முன்னிலைப்படுத்தி பதிவுலகுக்கு அறிமுகப்படுத்துவீர்கள் என எதிர் பார்க்கவில்லை..என் எழுத்தின் மீதும் என் மீதும் காட்டிய அன்பிற்கு நன்றி தோழர்.
இனிய வரிகள் கவிஞரே..
ReplyDeleteதோழர்,, மிகவும் ரசித்தேன்..
ReplyDeleteஎந்த வரிகளை மேற்கோள் இடுவது........ அனைத்தும் அழகான வரிகள்...
ReplyDeleteஉங்கள் கருத்துக்காக
காதல் - காதல் - காதல்
அனைத்தும் அருமை ரசித்தேன் நண்பரே
ReplyDeleteகவிதை கலக்கல்
ReplyDeleteநன்றி..
ReplyDeleteகோவி/கருன்/எனக்குப்பிடித்தவை/சி.பி/M.R/
அழகான காதல் வரிகள்....
ReplyDelete//நீயில்லாத அறையில்
ReplyDeleteமின்விசிறிகூட
விருப்பமில்லாமல்தான்
சுற்றிக்கொண்டிருக்கிறது..//
அழகு வரிகள்!
நாளை
ReplyDeleteஇரவு வரும்..வரலாம்..
இன்று இறந்துபோன இரவு
நாளை உயிர்த்தெழ வாய்ப்பில்லை..
அருமை .
தனிமையை
ReplyDeleteதரிசிக்கும்போதுதான்
என் கண்களுக்கும்
தூக்கத்திற்குமான தூரம்
எவ்வளவு என்று
எண்ணிப் பார்க்க முடிகின்றது..
வினோதமான கற்பனை. அருமை நண்பரே....