தமிழர்கள் வாசிக்க வேண்டிய கட்டுரை
முந்தைய தி.மு.க ஆட்சியில் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசு மீண்டும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ்புத்தாண்டு என மாற்றி விட்ட நிலையில் உண்மையை உரக்க சொல்ல வேண்டு மென்ற நோக்கில் இக்கட்டுரையை பொது அறிவு உலகம் வெளியிடுகிறது.
சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே! சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!
அறுபது ஆண்டு கதை
"இப்போது வழங்கும் "பிரபவ' தொடங்கி "விய' ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78-இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையால் தாலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன'. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)
"அறுபது ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவத னாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது'. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன் மொழி நூல்-1940) மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.
கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை. இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.
இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள். புராணக் கதையின்படி கிருஷ்ண பரமாத்மா நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார் என புராணங்கள் கூறுகிறது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை அலசிப் பார்க்க வேண்டும்.
பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக்காட்டாக மூன்றா வது ஆண்டின் பெயரான "சுக்கில' ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்து மூன்றாவது ஆண்டான "விரோதி' எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு "குரோதி' இதன் பொருள் பழி வாங்குபவன் என்பதாகும். முப்பத்து மூன்றாவது ஆண்டின் பெயர் "விகாரி' பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான "துன்மதி' கெட்டபுத்தி என்று பொருள். இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றைக் கொண்டு வந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிலிக்கனி போல் தெரிகிறது.
ஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக் கொண்டு ஆதிக்க (ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அமைதியாகப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக் கொள்ளட்டும்; சமஸ்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக் கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக் கொள்ளட்டும்.
ஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் "எந்தச் சூழலிலும்' எந்த வடிவத்திலும் "எந்த முறையிலும்' எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின் மீது திணிக்க வேண்டாம்! தமிழர் மீது திணிக்க வேண்டாம்! காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதை எவரும் மறக்கலாகாது.
இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலிலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.
எஸ்.செல்வராஜ்,கோ.சோ.கவியரசு(மேட்டூர்)அவர்கள் 01.10.11 ல் வெளியான நக்கீரன் பொது அறிவு இதழில் எழுதிய இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து வாசிக்க கீழ்காணும் சுட்டியில் செல்லவும்..
நன்றி..
நக்கீரன் பொது அறிவு உலகம்
மதி சகோ ,
ReplyDeleteகட்டுரையில் மிகத் தெளிவாக பல நல்ல விஷயங்கள்
சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அருமை.
மீண்டும் திராவிடம் மலர்ந்தால் உழவனோடு
சேர்ந்து நானும் மிக அகமகிழ்வேன்.
அதற்காக ஆங்கில புத்தாண்டு ஆரோக்கிய வழியில்
கொண்டாடுவதையும் எதிர்க்கவில்லை நான்.
மகிழ்ச்சி சகோதரி..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteதங்களுடைய பதிவுகளில் மிக முக்கியமான ஒன்று..ஆராய்ச்சி கட்டுரை என்று கூட வைத்து கொள்ளலாம்... கொடுத்திருந்த இணைப்பையும் சொடுக்கி வாசித்தேன்...கருத்தாழம் ஏராளம்..நன்றி நண்பரே..
ReplyDeleteஅப்படியா தோழர் மகிழ்ச்சி..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteநல்ல பதிவு. அரசியல்வாதிகளையும் இலக்கியவாதிகளையும் பற்றி கவலைப்படாமல் தமிழர்களாகிய நாம் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுவோம்.
ReplyDeleteநிச்சயம் ஐயா..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Deleteஎனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteமகிழ்ச்சி தோழர்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteஅனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி தோழர்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteஅருமையான பகிர்வு நண்பரே
ReplyDeleteத ம 5
மகிழ்ச்சி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Deleteநன்றி...
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
தமிழ் புத்தாண்டு தைப் பொங்கல் வாழ்த்துக்கள்...
நன்றி...
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
தமிழ் புத்தாண்டு தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.
எனக்கு இதில் பெரிய குழப்பமே இருக்கிறது சகோ..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
இதில் குழம்ப ஒன்றுமில்லை தோழர் நம்மைத்தான் குழப்புகிறார்கள்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Deleteஅன்பின் இனிய சகோ!
ReplyDeleteதங்ககள வலை இடையில் சில நாட்களாய்
விரிய மறுத்ததே! என்ன காரணமோ தெரியவில்லை!
அருமையான விளக்கம்! இதன் பிறகாவது சிலர்
உணர்வார்களா...?
புத்தாண்டு+ பொங்கல் வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
அதை சரிபார்க்கிறேன் ஐயா.மகிழ்ச்சி உங்களுக்கும் எனது வாழ்த்துகள்..
Deleteஎனது கணிப்பின்படி தமிழக அரசின் இந்த தீர்ப்பு தவரானது. தமிழ் நாட்டில் வாழும் மொத்த தமிழர்களின் ஒரு பெரும் பகுதியினரே இந்நன் நாளை கொண்டாடுகின்றனர். மீதமுள்ள தமிழர்களிள் கிறித்துவர், இசுலாமியர் போன்ற வேற்று மதத்தினரும் மற்றும் தமிழ் நாட்டில் பல தலைமுறையிறாக வாழ்ந்து வரும் வேற்று மாநிலத்தவரும் வாழ்கின்றனர். ஆகையால், ஒரு (பெரும்) பகுதி (பூர்வீக) தமிழர்களின் பண்பாட்டு ஆதாரங்களை தன் பிரியம்போல் மாற்றும் இவ்வரசு அதே உரிமையோடு ஏனைய அனைத்து தமிழருக்கும் இதே சித்திரை மாதத்து முதல் நாள்தான் அனைவருக்கும் புத்தாண்டுத்தினம் என திறன் உண்டா? அல்லது, தமிழ் நாட்டு ஆளுனர் என்ற முறையில் மற்ற மதத்தினர்களின் விழாக்களில் இவர்களால் ஏதாவது மாற்றம் கொண்டுவர முடியுமா? குறைந்தபட்சம், மற்ற மாநில தமிழ் பழகும் இனத்தவர்களின் பண்பாட்டு விழா எதையாவது மாற்றிக் காட்ட முடியுமா? தமிழன் இளித்த வாயன் என்பதால் இப்படி ஒருதலை பட்சமாக நம்மவர்களின் பண்பாட்டு ஆதாரங்களை மனம் போனபடி மாற்றும் இந்த திமிரும் தைரியமும் தமிழ் நாட்டில் வாழும் ஏனைய அனைத்து வகை தமிழர்களின் தத்தம் புத்தாண்டு பண்பாட்டு ஆதாரங்களை மாற்றி, இனி அனைவருக்கும் சித்திரை முதல் தேதிதான் புத்தாண்டு தினம் என அறிவிக்க தைரியம் உண்டா? இது முடியாது என்றால், மற்றதும் முடியாததுமட்டும் இல்லாமல், சட்டப்படி செல்லாததும் ஆகாது.
ReplyDeleteதமிழ்ப் புத்தாண்டிற்கு தான் இந்த நிலை என்ன செய்வது?தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..
Deleteகொஞ்சம் குழப்பம்தான் !
ReplyDeleteநம்மை அரசியல்வாதிகள்தான் அவ்வப்போது குழப்பிவிடுகிறார்கள் சகோதரி..என்ன செய்வது?
Delete