6.வாழ்க்கைத் துணை நலம்
51)
கணவனைப் புரிந்து
வருவாய் அறிந்து
இல்லறம் செய்பவளே
நல்லதோர் மனைவி;
வாழ்க்கையின் துணைவி;
குறள்-51
மனைக்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
---------------------------------------------
52)
நல்லதோர் மனைவி
அமைந்தாலே போதும்
இல்லறம் செழிக்கும்;
அதை விட சிறப்பு
வேறென்ன இருக்கும்;
குறள்-52
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
--------------------------------------
53)
நல்ல மனையாள் அமைந்தால்
அனைத்தும் சிறக்கும்;
அமையாமற் போனால்
வாழ்க்கையே வெறுக்கும்;
குறள்-53
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை..
------------------------------------
54)
கற்பென்னும் நற்பண்பே
பெண்ணிற்கு வலிமை;
மற்றதெல்லாம்
அதைவிட எளிமை;
குறள்-54
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.
---------------------------------------
55)
கடவுளை வணங்காது
கணவனை வணங்கும் பெண்
பெய்யென்று சொன்னால்
பெய்யும் மழை.
குறள்-55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
--------------------------------------
--------------------------------------
56)
கற்பையும்
கணவனையும் காத்து
ஒழுக்க நெறி பார்த்து
வாழ்பவளே பெண்;
வாழாதவள் மண்;
குறள்-56
தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்.
---------------------------------------------
57)
பெண்ணை சிறைபடுத்தி
பாதுகாப்பது சிறப்பல்ல
தன்னை முறைப்படுத்தி அவள்
காத்துக் கொள்ளலே சிறப்பு.
குறள்-57
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.
---------------------------------------
58)
இல்லறவாழ்வை
இனிதாய் பெற்ற பெண்ணே
இவ்வுலகிலுள்ள
இன்பங்களையெல்லாம்
பெறுகின்ற பெண்..
குறள்-58
பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு.
--------------------------------
59)
புகழைக் காக்கும்
மனைவி இல்லாதவன்
இகழ்பவனுக்கு முன்பு
கம்பீரமாக நடக்கத்
தகுதி இல்லாதவன்..
குறள்-59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
---------------------------
60)
நல்ல மனைவியே
இலவாழ்க்கைக்கு அழகு.
அவள் ஈன்ற பிள்ளை
அழகை அதிகரிக்கும் அணிகலன்.
குறள்-60
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
----------------------------------
மிக மிக அருமையாக
ReplyDeleteமிக மிக எளிமையாக
மிக மிகச் சுவையாக
சொல்லிப் போவது மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..
DeleteTha.ma 1
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமிகவும் அருமை மனையாளை பற்றி வள்ளுவர் கூறியதை எடுத்து சொன்னதற்கு!
நன்றி
அருமை...அருமை...
ReplyDeleteதொடருங்கள் ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..
Deleteஅருமை குரள் கவிதைகள்
ReplyDeleteபாஸ் உங்கள் தளம் ஓப்பின் ஆக கொஞ்சம் லேட்டாகுது ஒரு வேளை எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை ஒருக்கா பாருங்கள்
தெரியவில்லை தோழர் பார்க்கிறேன்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..
Deleteஅருமையான கட்டுரை.வாழ்த்துகள்.
ReplyDeleteகட்டுரை அல்ல தோழர்..அனைத்தும் குறட்பாக்கள்..
Deleteஎல்லாமே மனைவிய பற்றிய குறளாக உள்ளது. இன்னும் எனக்கு தான் கல்யாணம் ஆகவில்லை...அருமையான குறள்.புரட்சியை பற்றிய குறள் இருந்தால் பகிரவும்...
ReplyDeleteவாரம் ஒரு அதிகாரம் என எழுதிவருகிறேன் தோழர்..தொடர்ந்து வாசியுங்கள்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..
Deleteகவிஞரே... மிக எளிமையாக அழகுத் தமிழில் சொல்லி வருகிறீர்கள். மிக ரசிக்கிறேன். முடித்ததும் கண்டிப்பாக புத்தகமாக வெளியிட ஏற்பாடு செய்யவும், எனக்குத் தகவல் தரவும் உங்ககிட்ட (உரிமையோட) வேண்டுகோள் விடுக்கிறேன். நன்றி.
ReplyDeleteநிச்சயம் ஐயா.. 133 அதிகாரமும் எழுதி முடித்தவுடன் புத்தகமாக வெளியிடுகிறேன்..அந்த விழாவில் நீங்கள் இல்லாமலா..கண்டிப்பாக எந்த நிகழ்வாக இருந்தாலும் தங்களை அழைக்கிறேன்..வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி..
ReplyDeleteதிருக்குறளுக்கு மிக எளிதாக புரியும் வகையில் பதிவிட்டிருக்கீங்க. உங்கள் உழைப்புக்கு வணக்கங்கள் பகிர்விற்கு நன்றிகள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்..
Deleteஎல்லாமே அருமையான விளக்கங்கள் எனினும்
ReplyDeleteநான் மிக ரசித்தது முதலும் & முடிவும்.
பகிர்வுக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.
DeleteNaan Tirukkuralukku ethanaiyo uraigalai padithu irukkiren. Kadaisiyaga Sujatha eluthina onru ennai kavarnthathu. Ippo ungaludaiyathu. Ungal urai vithiyasamaga arumaiyaga ullathu Sir! Thodarungal. Kaaththirukkiren.
ReplyDeleteTM 10.
Thangalukkum Thangal kudumpaththaarukkum enathu Iniya Pongal Vaalthukkal Sir!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்..மகிழ்ச்சி..உங்களுக்கும் எனது தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்..
Deleteஆஹா... இது அருமையாக இருக்கிறது நண்பரே.. திருக்குறள் கவிதைகள் சூப்பர். வாழ்த்துக்கள். பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபெண்களுக்குப் புத்தி சொல்வதுபோலவும் இருக்கு.
ReplyDeleteமிக மிகச் சிறப்பு !
அன்பின் மதுமதி - அருமையான செயல் - வாழ்க்கைத் துணை நலம் - வசன கவிதையில் - பொருள் மாறாமல் - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் மதுமதி - வாழ்ழ்க்கைத் துணை நலம் பற்றி குறளாசான் கூறியதை - எளிய சொற்களால் - கவிஅதை நடையில் வடித்தமை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete''புகழைக் காக்கும்
ReplyDeleteமனைவி இல்லாதவன்
இகழ்பவனுக்கு முன்பு
கம்பீரமாக நடக்கத்
தகுதி இல்லாதவன்..'' குறளின் பொருளை அப்படியே தந்திருக்கும் அருமையான வசன கவிதைகள்