புது வரவு :
Home » , » தீண்ட மறுக்கிறார் காந்தி..

தீண்ட மறுக்கிறார் காந்தி..

                             ஹைக்கூ..


                        தீண்டாமை இன்னும்

                        தீர்ந்து போகவில்லை..

                        ஏழைகளை எப்போதும்

                        தீண்டமறுக்கிறார் காந்தி.
                         
                        
                         விடிந்தால் விருந்தாவோம்

                         என்று தெரியாமல்

                         ஊரையே எழுப்பிவிடுகிறது

                         சேவல்.. 


                                                
             
            
                        குடிசைகள் எல்லாம்

                        மூழ்கிய பிறகே

                        தூர்வாரப்படுகின்றன

                        சாக்கடைகள்.. 


                                                 

                        
                        சரிவிகித உணவு..

                        படிக்க வாய்க்கும் வாய்ப்பு

                        சாப்பிட வாய்ப்பதில்லை

                        ஏழைக் குழந்தைக்கு..


                                                                                 மனிதம் இன்னும்

                           உறங்கிக் கொண்டேதானிருக்கிறது..

                           தெரியாது போலும்

                           உதித்துக்கொண்டேயிருக்கிறான்

                           சூரியன்....

 


 
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

32 comments:

 1. குட்டிக் குட்டியாப் பூத்திருந்த கவிதை மலர்கள் ஆனந்தம் தந்தன. எல்லாமே அழகு! நன்றி + வாழ்த்துக்கள் கவிஞரே...

  ReplyDelete
 2. தொடர்ந்து முதலாவதாக வந்து வாசித்து வாக்களிக்கிறீரகள்..மிக்க மகிழ்ச்சி..நன்றி..

  ReplyDelete
 3. வருகை தந்து ரசித்ததற்கு நன்றி தோழர்..

  ReplyDelete
 4. முதல் இரண்டு 'நச்' வரிகள் !
  பின்மூன்றும் ;உச்' கொட்ட வைக்கும் பரிதாப
  நிகழ்வுகள் !
  அருமை மதுமதி !

  ReplyDelete
 5. ஆம் சகோ அழகாகச் சொன்னீர்கள்..'உச்'கொட்டக்கூடிய அம்மூன்றுக்கும் விடியல் கிடைக்கும்போதுதான் நம் நாடு வல்லரசாகுமா ஆகாதா என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்..
  அழகுற ரசித்தமைக்கு நன்றி..

  ReplyDelete
 6. பஞ்சவர்ணமாய கவிதை பூக்கள் ஐந்தும் அருமை அற்புதம்
  தொடர வாழ்த்துக்கள்
  இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
  த.ம 5

  ReplyDelete
 7. நான்கு கவிதைகளுமே அருமை என்றாலும் முதல் கவிதை மிக அருமை.
  பொங்கல் வாழ்த்துகளுடன்!

  ReplyDelete
 8. Ramani says:
  12 ஜனவரி, 2012 7:10 முற்பகல்
  பஞ்சவர்ணமாய கவிதை பூக்கள் ஐந்தும் அருமை அற்புதம்
  தொடர வாழ்த்துக்கள்
  இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
  த.ம 5

  தஙகள் வருகைக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 9. வே.நடனசபாபதி says:
  12 ஜனவரி, 2012 7:50 முற்பகல்
  நான்கு கவிதைகளுமே அருமை என்றாலும் முதல் கவிதை மிக அருமை.
  பொங்கல் வாழ்த்துகளுடன்!

  மகிழ்ச்சி ஐயா..வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 10. மிக மிக அருமை நண்பரே வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

  ReplyDelete
 12. சிறுகச் சொன்ன சிறப்பான கவிதைகள்...

  ReplyDelete
 13. கவிதை கலக்கல்...

  உங்களை சித்தாரில் சந்தித்து பேசி இருக்கிறேன்... மீண்டும் சந்திப்போம்... பொங்கலுக்கு ஊருக்கு வந்தால் நிச்சயம் அழைக்கவும்...

  ReplyDelete
 14. குட்டிக் கவிதைகள் எல்லாமே ரொம்ப நல்லாருக்கு..

  ReplyDelete
 15. ஒன்றை யொன்று வெல்லும் வகையில் அத்தனை வரிகளும் அற்புதம் சகோதரா. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkvai.wordpress.com

  ReplyDelete
 16. தீண்டாமை இன்னும்
  தீர்ந்து போகவில்லை..
  ஏழைகளை எப்போதும்
  தீண்டமறுக்கிறார்
  >>
  வித்தியாசமான கோணத்தில் சிந்திச்சு இருக்கீங சகோ

  ReplyDelete
 17. dhanasekaran .S says:
  12 ஜனவரி, 2012 10:29 முற்பகல்
  மிக மிக அருமை நண்பரே வாழ்த்துகள்.

  நன்றி தோழர்..

  ReplyDelete
 18. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

  நன்றி ஐயா.மற்ற அறிமுகங்களையும் கண்டேன்..மகிழ்ச்சி..

  ReplyDelete
 19. மரு.சுந்தர பாண்டியன் says:
  12 ஜனவரி, 2012 10:37 முற்பகல்
  சிறுகச் சொன்ன சிறப்பான கவிதைகள்...

  நன்றி தோழர்..

  ReplyDelete
 20. சங்கவி says:
  12 ஜனவரி, 2012 10:59 முற்பகல்
  கவிதை கலக்கல்...

  உங்களை சித்தாரில் சந்தித்து பேசி இருக்கிறேன்... மீண்டும் சந்திப்போம்... பொங்கலுக்கு ஊருக்கு வந்தால் நிச்சயம் அழைக்கவும்...

  நிச்சயமாய் அழைக்கிறேன் தோழர்..நன்றி

  ReplyDelete
 21. அமைதிச்சாரல் says:
  12 ஜனவரி, 2012 12:48 பிற்பகல்
  குட்டிக் கவிதைகள் எல்லாமே ரொம்ப நல்லாருக்கு..

  நன்றி தோழர்..

  ReplyDelete
 22. kavithai (kovaikkavi) says:
  12 ஜனவரி, 2012 12:59 பிற்பகல்
  ஒன்றை யொன்று வெல்லும் வகையில் அத்தனை வரிகளும் அற்புதம் சகோதரா. வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkvai.wordpress.com

  நன்றி சகோதரி..

  ReplyDelete
 23. ராஜி says:
  12 ஜனவரி, 2012 1:49 பிற்பகல்
  தீண்டாமை இன்னும்
  தீர்ந்து போகவில்லை..
  ஏழைகளை எப்போதும்
  தீண்டமறுக்கிறார்
  >>
  வித்தியாசமான கோணத்தில் சிந்திச்சு இருக்கீங சகோ..

  நன்றி சகோதரி..

  ReplyDelete
 24. அனைத்தும் அருமை பாஸ் குறிப்பாக விடிந்ததும் விருந்தாகிவிடுவோம் என்று தெரியாமல் ஊரையே எழுப்பிவிடுகின்றது சேவல் என்ற கவிதை சூப்பர்

  ReplyDelete
 25. அருமையான துளிப்பாக்கள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும்
   நன்றி தோழர்..

   Delete
 26. //சரிவிகித உணவு..
  படிக்க வாய்க்கும் வாய்ப்பு
  சாப்பிட வாய்ப்பதில்லை
  ஏழைக் குழந்தைக்கு..//

  அருமை அருமை.

  ReplyDelete
 27. அருமை, எல்லாமே வெகு அருமை.
  அருமை மட்டுமல்ல வெகு எளிமையும் கூட.
  மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. அனைத்துமே அருமை நண்பரே. இத்தனை நாள் உங்களைத் தொடர்வதில் சில பிரச்சனைகள். இன்று தான் தொடர முடிந்தது. இனி தொடர்ந்து வருவேன்.....

  ReplyDelete
 29. ஹைக்கூ அனைத்தும் அருமை...

  குறிப்பாக

  //குடிசைகள் எல்லாம்
  மூழ்கிய பிறகே
  தூர்வாரப்படுகின்றன
  சாக்கடைகள்..//

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com