வணக்கம் தோழர்களே.. இது பதிவர் கவிதைகள் பக்கம்.இதில் என்னோடு பதிவுலகில் பயணிக்கும் பதிவர்களின் கவிதைகள் இடம்பெறும்.நம் தளத்திற்கு தொடர்ந்து வந்து வாசித்து கருத்திட்டு செல்லும் தோழர்கள் இப்பக்கத்தில் இடம்பெறும் பதிவர்களின் கவிதைகளையும் வாசித்து கருத்திட்டு உற்சாகப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.பதிவர் கவிதைகள் பகுதியில் வெளியாகும் முதல் கவிதையை எழுதியிருப்பவர் தென்றல் வலைப்பூவில் எழுதி வரும் அன்பு சகோதரி சசிகலா அவர்கள்..
சிறைக்கு வெளியே...!
வண்ணப்பூ தான் நோக்க
அதனை வட்டமிடும்
வண்டினம் கவர்ந்ததென்ன?
மதியோடை சலசலக்க
ஓடும் நதியோடையும்
அழைத்ததென்ன?
ஒற்றைக்கால் தவமிருந்து
ஓரக்கண்ணால் பார்த்து நிற்க
செதில்களால் தனை மூடி
செம்மீனும் நழுவக் கண்டேன்.
இதழ் விரித்திடவே
ஆங்கே அரவமும்
நெளியக் கண்டேன்.
எழில் மிகு காட்சியெலாம்
எண்ணத்தை கவர்ந்து நிற்க
அந்தி சாயும் கதிரவனின்
அடி பற்றிப் போகும் மாடாய்
என் பயணமும்...!
மேலும் இவரது கவிதைகளை வாசிக்க இங்கே செல்லவும்.
கவிதையை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
அருமையான பயணம் தான்...அதுவும் முதல் பயணம் ஆயிற்றே அதனால் சிறக்க வாழ்த்துகிறேன்...
ReplyDeleteஅடுத்தவரை பாராட்டுவதே அபூர்வம் இந்த காலத்துல. பாராட்டுவதோடு அவங்களோட லிங்க் குடுத்து இலவசமா விளம்பரம் வேற செஞ்சிருக்கீங்க. உங்களுக்கு பெரிய மனசு சகோ.
ReplyDeleteபுகழாரம் சூட்டியதற்கு நன்றி..
Delete/அளவுக்கதிகமாவே உங்களை புகழ்ந்தாச்சு. அதனால, அடுத்து என் கவிதைஅயை பாராட்டி பெருசா பதிவு போட்டு லிங்க் தரவும்//
அவ்வளவுதான.. பெருசா கவிதை ஒண்ண அனுப்பி வையுங்க..பதிவா போட்டு பெரிசா லிங்க கொடுத்துடுறேன்..
அளவுக்கதிகமாவே உங்களை புகழ்ந்தாச்சு. அதனால, அடுத்து என் கவிதைஅயை பாராட்டி பெருசா பதிவு போட்டு லிங்க் தரவும்.
ReplyDeleteஎன்ன சகோ யோசிக்குறீங்க ?..இவங்களுக்கு முதல்ல
Deleteஎனக்குப் பதில் சொல்லுங்க இல்லையேல் அம்பாள்
குற்றம் பெரும் குற்றமாகிவிடும் :)))))))..........(எனக்கு
ஒரு சின்னக் கற்பூரம் காணும் பக்தா !.....)
வாழ்த்துக்கள் சிறப்பாக பயணம் தொடரட்டும் .
சகோ கவிதாயினி சசிகலா அவங்க
ReplyDeleteகவிதையில் ஒரு பெஷல் என்னவெற்றால்
அது அவங்க தமிழ் மற்றும் கிராமிய சொல்லாடலும் தான்
கவிஞரின் சிறந்த கவிதை வழிநடத்தல் பணி
மிகவும் போற்றலுக்குரியது
ஆமாம் செய்தாலி..சரியாகச் சொன்னீர்கள்..
Delete///செதில்களால் தனை மூடி செம்மீனும் நழுவக் கண்டேன்./// ஆஹா...என்ன ஒரு கற்பனை !
ReplyDeleteரசித்தீர்களா?
Deleteவித்தியாசமான பகுதியை தொடங்கி இருக்கிறீர்கள்.முதல் கவிதை எழுதிய சசிகலாவுக்கு வாழ்த்துக்கள். வழக்கம்போல் சசிகலாவின் கவிதை நன்று.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே..
Deleteமிகவும் அற்புதமான கவிதை ... !!! சசிகலாவுக்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி..
Deleteபதிவர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்ட
ReplyDeleteமுதல் நூலும் திருமதி. சசிகலா அவர்களுடையதே
தங்கள் முதல் அறிமுகமும்
அவருடைய கவிதையே
அவர்கள் மென்மேலும் பல சிறப்புகளை
முதலாவதாகப் பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வருகை தந்து வாழ்த்தி சென்றமைக்கு நன்றி ஐயா..
Deleteஅந்தி சாயும் கதிரவனின்
ReplyDeleteஅடி பற்றிப் போகும் மாடாய்
என் பயணமும்...!
அழகு
ஒரு நல்ல பதிவைத் தொடங்கியுள்ளீர்கள்..உங்களுக்கும்,முதல் அறிமுகம் சசிகலாவுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி நன்றி..
Deleteசசிகலாவின் கவிதையை இப்ப தான் முதன் முதலா வாசிக்கிறேன்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ
அப்படியா..இனி தொடர்ந்து வாசியுங்கள்..
Deleteரசிக்க வைக்கும் வரிகள்... சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteசசியின் ரசிகை நான்.வாழ்த்துகள் சசி.ஊக்கம் கொடுக்கும் மதுவுக்குப் பாராட்டு !
ReplyDeleteமகிழ்ச்சி சகோ..
Deleteஅன்பின் மதுமதி - நல்லதொரு செயல் - பல பதிவர்களின் கவிதைகளை இங்கு ஒரே இடத்தில் படிக்கும் வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி - பதிவர்கள் வாய்ப்பினை பயன் படுத்தட்டும். அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவந்து வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா..
Deleteநல்ல சேவை.
ReplyDeleteதொடருங்கள்.
நன்றி தோழரே..
Deleteபகிர்விற்கு நன்றி!
ReplyDelete-காரஞ்சன்(சேஷ்)
எழில் மிகு காட்சியெலாம்
ReplyDeleteஎண்ணத்தை கவர்ந்து நிற்க-
இதுபோன்ற வார்த்தைகளை உங்களால்தான் எளிதாக பயன்படுத்தமுடியும்.நன்று
அருமையானதொரு பகுதியை ஆரம்பித்திருக்கிறீர்கள். இனி நல்ல கவிதை வாசிக்கணும்ன்னா உங்க பகுதிக்கு வந்தால் போதும் :-))
ReplyDeleteவருக தோழரே..நிச்சயம்..மிக்க நன்றி..
Deleteஇன்னும் நிறைய கவிதைகளை ஈன்றெடுக்க அன்பு சகோதரியின் வாழ்த்துகள்..
ReplyDeleteதம்பதிகள் இருவர் மனதிலும் ஒரு சிறு இடம் கிடைக்க பெற்றமையை எனது பாக்கியமாகவே கருதுகிறேன்.
Deleteசகோதரரின் செய்ல்கள் யாவும் பல பேர் வரவேற்க பாராட்டுக்குரியதாகும். அறிமுகப் பதிவாய் முன்னுரிமை வழங்கியதற்கும். அன்பாய் கரம் கோர்த்து பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் சசி கலா நன்றியை....
Deleteதங்களின் படைப்பை போலவே அற்புதமாக இருக்கிறது...
வளருங்கள் வாழ்த்துவதற்கு எண்ணில் அடங்கா பேர்கள் இங்குண்டு...
வார்த்தை ஜாலம் !
ReplyDeleteகவிஞர்களின் கவிதைகளை அறிமுகப்படுத்தும் தங்களுக்கு முதல் வாழ்த்து. கவிதாயினி சசிகலா அவர்களின் ஒவ்வொரு கவிதையையும் இரசிக்கும் இந்த இரசிகனின் வாழ்த்தைத் தெரிவிக்கவும்.
ReplyDeleteநல்ல வரிகள்... சகோ சசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. பகிர்ந்த அண்ணன் மதி அவர்களுக்கு நன்றிகள்
ReplyDelete