எல்லாம்
முடிந்துவிட்டது என்று
அவன் நினைக்கும்போதுதான்
எல்லாம் ஆரம்பிக்கிறது..
சின்னதாகப் பேசுகிறான்
பெரிதாக பொருள்படுகிறது..
பெரிதாக பேசுகிறான்
சிறிதாகவே பொருள்படுகிறது..
இழப்பதற்கு
ஒன்றுமில்லை என்று
அவன் நினைக்கும்போதுதான்
நானிருக்கிறேன் என்று
அவ்வப்போது
ஞாபகப் படுத்துகிறது
அவன் உயிர்.
போராடினால் உண்டு
பொற்காலம் என்பதை
வேத வாக்காக
எடுத்துக் கொண்டவன்
அவ் வாக்கியத்தின் அர்த்தம்
அறியாமலேயே போய்விடுகிறான்..
ஓடிக் கொண்டேயிரு
இலக்கை அடையலாம்
யாரோ சொல்ல
ஓட ஆரம்பித்தவன்
ஓடிக் கொண்டேயிருக்கிறான்..
இலக்கை மறந்துவிட்டான்..
வாழ்ந்து முடிந்தவர்கள்
வரிசையாய்
சென்றுகொண்டே இருக்கிறார்கள்
இவன் எப்படி வாழப்போகிறான் என
சில பேரை பரிதாபமாக பார்த்தபடி..
ஆனால் ஒன்று
பலமுறை
செத்தவனுக்கு
ஒரே ஒரு முறையாவது
வாழ வேண்டும் என்ற
வேட்கை
வேகமெடுக்கவே செய்கிறது..
azhakaana kavithai!
ReplyDelete// வாழ்ந்து முடிந்தவர்கள்
ReplyDeleteவரிசையாய்
சென்றுகொண்டே இருக்கிறார்கள்
இவன் எப்படி வாழப்போகிறான் என
சில பேரை பரிதாபமாக பார்த்தபடி..//
எத்தனைப் பொருள் பொதிந்த வரிகள்!
உண்மைகள்!
தங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும்
தனக்கெனத் தனித் தகுதி பெற்றவை!
அதில் ஐயமிலலல!
சா இராமாநுசம்
என்ன அருமையான வரிகள். பலமுறை செத்தவனுக்கு ஒருமுறையேனும் வாழ வேண்டுமென்ற வேட்கை வேகமெடுக்கவே செய்கிறது... இந்த வரிகளை இன்னும் அசை போட்டு ரசித்தபடி இருக்கிறேன். சிறு இடைவெளிக்குப் பின் வந்தாலும் நிறைவான பா வழங்கினீர் கவிஞரே...
ReplyDeleteநிறைய அர்த்தங்கள் பொதிந்த வரிகள்
ReplyDeleteஅசத்தல் கவிதை சார்
//எல்லாம் முடிந்துவிட்டது என்று
ReplyDeleteஅவன் நினைக்கும்போதுதான்
எல்லாம் ஆரம்பிக்கிறது.//
உண்மைதான்.
இதைத்தான்‘இது முடிவின் ஆரம்பம் அல்ல. ஆரம்பத்தின் முடிவு’என்று காலம் சென்ற சர்ச்சில் சொன்னதாக நினைவு.
கவிதைக்குப் பாராட்டுக்கள்!
செமையான வரிகள் பாஸ்!
ReplyDelete//அதிலும் இந்த வரிகள்
ஓடிக் கொண்டேயிரு
இலக்கை அடையலாம்
யாரோ சொல்ல
ஓட ஆரம்பித்தவன்
ஓடிக் கொண்டேயிருக்கிறான்..
இலக்கை மறந்துவிட்டான்..//
எனக்கு மிகப் பிடிச்சிருக்கு!
தோல்வியை ருசித்தவனுக்கே வெற்றியின்
ReplyDeleteசுவையை ருசிக்க ஆசை இருக்கும் என்பதை
அழகாக சொல்லும் வரிகள்...
ஆனால் ஒன்று
ReplyDeleteபலமுறை
செத்தவனுக்கு
ஒரே ஒரு முறையாவது
வாழ வேண்டும் என்ற
வேட்கை
வேகமெடுக்கவே செய்கிறது
>>>>
அந்த வேகத்துலதான் அவன் வாழ்க்கையே அடங்கியிருக்கு சகோ
ஒவ்வொன்றும் அருமையான வரிகள். அர்த்தமுள்ளவை...
ReplyDeleteஇன்று
ReplyDeleteஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ
ஆனால் ஒன்று
ReplyDeleteபலமுறை
செத்தவனுக்கு
ஒரே ஒரு முறையாவது
வாழ வேண்டும் என்ற
வேட்கை//
தோல்விக்கு பின் வெற்றி போல உற்சாக மூட்டும் வரிகள் அருமை சகோ .
போராடினால் உண்டு
ReplyDeleteபொற்காலம் என்பதை
வேத வாக்காக
எடுத்துக் கொண்டவன்
அவ் வாக்கியத்தின் அர்த்தம்
அறியாமலேயே போய்விடுகிறான்..
சொல்ல வார்த்தைகள் இல்லை
அருமையான கவி அண்ணா
அருமையான கவிதை - விசயமுள்ள கவிதை
ReplyDeleteவாழ்ந்து முடிந்தவர்கள்
ReplyDeleteவரிசையாய்
சென்றுகொண்டே இருக்கிறார்கள்
இவன் எப்படி வாழப்போகிறான் என
சில பேரை பரிதாபமாக பார்த்தபடி..//அருமையான கவி
ஆழமான வரிகள் சகோதரா.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
ஃஃஃஃஃஞாபகப் படுத்துகிறது
ReplyDeleteஅவன் உயிர்.ஃஃஃஃ
அதன் பெறுமதியை உணர்ந்ததால் தான் வாழ வேண்டியிருக்கிறது சகோ..
//ஓட ஆரம்பித்தவன்
ReplyDeleteஓடிக் கொண்டேயிருக்கிறான்..
இலக்கை மறந்துவிட்டான்..//
அனுபவித்து எழுதியிருக்கீங்கண்ணே..! கவிதை அசத்தல்..!:)