புது வரவு :
Home » , , » டி.என்.பி.எஸ்.சி - மொத்தம் 200 வினாக்கள் - பாகம்-5

டி.என்.பி.எஸ்.சி - மொத்தம் 200 வினாக்கள் - பாகம்-5

           ணக்கம் தோழர்களே..தேர்வுக்கு விண்ணப்பித்து வீட்டீர்களா?.. இல்லையென்றால் உடனே விண்ணப்பியுங்கள்..அதை முடித்தால்தான் மேற்கொண்டு நிம்மதியாய் நீங்கள் படிக்கமுடியும் இல்லையென்றால் கவனம் சிதறும். தேர்வுக்கான நாட்கள் குறைந்து கொண்டேயிருக்கிறது. விண்ணப்பிக்கும்போது குரூப் 4 க்கு மட்டும் விண்ணப்பிக்காதீர்கள் குரூப் 8 க்கும் சேர்த்தே விண்ணப்பியுங்கள்..இரண்டுக்கும் ஒரே விண்ணப்பத்தையே பயன்படுத்தலாம்.சிலர் குரூப் 8 க்கான பணியிடங்கள் மிகக் குறைவாக இருக்கிறதே என்றெண்ணி அதை புறக்கணித்துவிடுவார்கள்.அப்படி செய்யாமல் இரண்டுக்கும் சேர்த்து விண்ணப்பியுங்கள்.ஆனால் ஒன்று.. இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில்தான் நடக்கும்.அதாவது எப்பவும் போல காலையில் குரூப் 4 தேர்வு நடக்கும் குரூப் 8 க்கும் சேர்த்து விண்ணப்பத்தவர்களுக்கு தொடர்ந்து மதியமும் தேர்வு நடக்கும்.இந்த இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்ணை வைத்தே குரூப் 8 ன் முடிவுகள் இருக்கும்.

         சரி தோழர்களே..படிக்க ஆரம்பித்து விட்டீர்கள்..ஆனால் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா..பெரும்பாலும் முதல் முறையாக தேர்வு எழுதும் தோழர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.அந்த குழப்பத்தை நிவர்த்தி செய்துவிடலாம்.

          மதியம் என்ன தேர்வு என்று கேட்கிறீர்களா..அது முற்றிலும் இந்து மதம் பற்றியவை.அதைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

           தேர்வுக்கான வினாத்தாள் 200 வினாக்களைக் கொண்டு இருக்கும் .ஒவ்வொரு வினாவுக்கும் ஒன்றரை மதிப்பெண்கள்..ஆக மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நீங்கள் தேர்வை எழுத வேண்டும்.

பாடத்திட்டம்

பொதுத்தமிழ்  100 வினாக்கள்
பொது அறிவு  100 வினாக்கள்

             இது பொதுவான பாடத்திட்டம் ஆகும்..பொதுத் தமிழில் எதைச்சார்ந்த பகுதிகள் பொது அறிவில் எதைச் சார்ந்த பதிவுகள் என விளக்கமாக அடுத்த பதிவில் சந்திப்போம்..

           பொது அறிவில் நமக்கு ஒருவேளை மதிப்பெண்கள் குறையும் பட்சத்தில் நமக்கு கைகொடுப்பது பொதுத் தமிழ்தான்..ஏனென்றால் பொதுத் தமிழில் சுலபமாக 100 வினாக்களுக்கும் விடையளிக்க முடியும் .இதற்கு நாம் பள்ளிகளில் படித்த தமிழ் இலக்கணங்களை மறக்காமல் இருக்கவேண்டும். அவ்வளவுதான்.இலக்கணம் என்ற உடனே பயந்து விடவேண்டாம்.நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானதாக இருக்காது.மொழிப்பயிற்சி என்று அதைக் குறிப்பிடலாம்.மொழிப்பயிற்சி வினாக்கள் தான் அதிகம் வரும்..அதை அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.


           பொது அறிவை பொறுத்தவரை நாம் இத்தனை நாட்கள் படித்ததும் இப்போது படித்துக் கொண்டிருப்பதும் தான்.ஆகவே படித்ததை நினைவு கூர்ந்து பார்ப்பதும் இனி படிப்பதை மறக்காமல் இருப்பதும் மிக அவசியமானதாகும் .
இது குறித்து விளக்கங்கள் அடுத்த பதிவில் இடுகிறேன்.

         பொதுத்தமிழில் 100 வினாக்களையும் சரியாக எழுத விரும்புபவர்கள் 6 ம் வகுப்பிலிருந்து 10 வகுப்பு வரையிலான தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்களை படித்தால் போதுமானது.

         அதேபோல பொது அறிவில் நிறைய மதிப்பெண்களைப் பெற 6 ம் வகுபிலிருந்து 10 வகுப்பு வரையிலான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட புத்தகங்களை கட்டாயம் வாசிக்க வேண்டும்.
 

          இது பொதுவான பாடத்திட்டம் ஆகும்..பொதுத் தமிழில் எதைச்சார்ந்த பகுதிகள் பொது அறிவில் எதைச் சார்ந்த பதிவுகள் என விளக்கமாக அடுத்த பதிவில் சந்திப்போம்..

          சரி தோழர்களே..பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு வினாக்க்கள் எந்தெந்த பகுதியில் இருந்து கேட்க்கப்படும் என்று விளக்கமாக நாளைய பதிவில் பார்ப்போம்..
==========================================================================
   பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்கள் பயனடையட்டும்.

==========================================================================
                                                                                                                                             அன்புடன்




இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

4 comments:

  1. வணக்கம் நண்பரே,
    நலமா?
    நீண்ட இடைவெளி...
    விடுமுறையில் இருப்பதால்
    வலைப்பக்கம் வரமுடியவில்லை..
    பொறுத்தருள்க..

    பயனுள்ள தகவல்கள் பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே..

    ReplyDelete
  2. அனைவருக்கும் பயனுள்ள பதிவு .

    ReplyDelete
  3. ம்ம்ம்ம்ம் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் பாடத்தை படிக்கிறீகளோ இல்லையோ. அண்ணாவின் இந்த அறிவுரையை படித்திட்டு போங்க வெற்றி உண்டு

    ReplyDelete
  4. ellarukum vazhlthukkal

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com