ஓரெழுத்து ஒரு மொழி
சென்ற பாகத்தில் அகர வரிசையில் எழுதுவது எப்படி என்பதை பார்த்தோம்.இன்று பார்க்கப்போவது ஓரெழுத்து ஒரு மொழியைக் கண்டுபிடிப்பது எப்படி?
பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் நாம் ஏற்கனவே பார்த்தது போல ஓரெழுத்து ஒரு மொழி என்ற பகுதியிலிருந்து 5 வினாக்கள் கேட்கப்படலாம்.
தமிழில் உள்ள 247 எழுத்துகளில் நன்னூல் சூத்திரப்படி 42 எழுத்துக்களுக்கு மட்டும் தனித்த பொருளுண்டு..அவற்றில் ஏதாவது ஐந்து எழுத்துக்களைக் கொடுத்து அதற்கான பொருள் என்ன என்பதைப் போல வினா அமையும்.
முந்தைய தேர்வுகளில் இந்த 42 எழுத்துக்களில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்பட்டன.ஆனால் இப்போது நடைபெறும் தேர்வுகளில் அந்த 42 எழுத்துக்களையும் தாண்டி வினாக்கள் கேட்கப்படுகின்றன.
நன்னூல் சூத்திரப்படி தனிப் பொருளைத் தரும் 42 எழுத்துக்களைக் காண்போம்..
உயிர் எழுத்துகள்:
ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ
'க' வரிசை:
கா,கூ,கை,கோ
'ச' வரிசை:
சா,சீ,சே,சோ
'த' வரிசை:
தா,தீ,தூ,தே,தை
'ந' வரிசை:
நா,நீ,நே,நை,நோ
'ப' வரிசை:
பா,பூ,பே,பை,போ
'ம' வரிசை:
மா,மீ,மூ,மே,,மை,மோ
'வ' வரிசை:
வா,வீ,வை,வௌ
'ய' வரிசை:
யா
பெரும்பாலும் நெடில் இனத்தில் வரும்.குறில் இனம் என்று பார்த்தால் உயிர் மெய் எழுத்துக்களான 'நொ' மற்றும் 'து' போன்றவை ..
மேற்கண்ட 42 எழுத்துக்களும் நன்னூல் குறிப்பிடப்படுபவை.
சரி தோழர்களே மேற்கண்ட எழுத்துக்களுக்கான பொருளையும் நன்னூலில் குறிப்பிடப்படாத சில ஓரெழுத்து ஒரு மொழிகளையும் நாளைய பதிவில் காணலாம்.
நன்றி..
-------------------------------------------------------------------------------------------------------------
பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்கள் பயனடையட்டும்.
-----------------------------------------------------------------------------------------------------------
இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
ReplyDeleteபயனுள்ள தகவல் தொடருங்கள் .
ReplyDeleteதொடருங்கள் .., தொடர்கிறோம் ..!
ReplyDeletemmmmmmmmmm ம்ம் பயனுள்ள நல்ல தகவல்
ReplyDeleteஅண்ணா. தொடருங்கள்.
அண்ணா ஒரு விடயம் தெரியுமா நான்
என் வலைப் பூ பெயரை மாற்றிவிட்டேன்.
நன்றி சசிகலா..
ReplyDeleteநன்றி வரலாற்று சுவடுகள்..
ReplyDeleteம்..பார்த்தேன் எஸ்தர்..அழகாயிருக்கு..
ReplyDeleteamazing sir thanks a lot
ReplyDelete'ம' என்னும் ஓரெழுத்திற்கு 4 options குடுதிருக்காங்க answer சொல்லுங்க அண்ணா
ReplyDelete1.இந்திரன்
2.பீமன்
3.இயமன்
4.நகுலன்