புது வரவு :
Home » , , , , , » டி.என்.பி.எஸ்.சி-பொருத்துக(சொல்லும் பொருளும்)பாகம்-22

டி.என்.பி.எஸ்.சி-பொருத்துக(சொல்லும் பொருளும்)பாகம்-22

                                                            பொருத்துக


             கொடுத்திருக்கும் சொல்லுக்கு பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து பொருத்த வேண்டும். 
            நூலின் பெயரைக் கொடுத்து அந்நூல் ஆசிரியரைத் தேடிப் பொருத்த வேண்டும்.  எனவே நிறைய சொற்களையும் அவற்றிற்கான பொருளையும் நிறைய நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் தெரிந்திருத்தல் அவசியமாகும்.
           

சொல்லும் பொருளும்     சொல்லும் பொருளும்
மாருதம் - காற்று                                           செரு - போர்
செறு - வயல்                                                   வேய் - மூங்கில்
தவ்வை - மூதேவி                                         மஞ்ஞை - மயில்
புரை - குற்றம்                                                  தீயுழி - நரகம்
தாளாண்மை - முயற்சி                               களிறு - ஆண் யானை
பிடி - பெண் யானை                                      அசவாமை - தளராமை
உகிர் - நகம்                                                       ஏதம் - துன்பம்
கூலம் - தானியம்                                           புரவி - குதிரை
மல்லல் - வளப்பம்                                        உம்பர் - தேவர்
குருசு - சிலுவை                                             மருள் - மயக்கம்
தொழும்பர் - தொண்டர்                               நறை - தேன்
அண்டர் - தேவர்                                             தொடை - மாலை
அஞ்சுமின் - கூற்றம்                                     களி - மகிழ்ச்சி
அறிமின் - அறநெறி                                      வட்டு - சூதாட்டக்கருவி
பொறுமின் - கடுஞ்சொல்                           மறு - குற்றம்
தகவு - நன்னடத்தை                                     பூதலம் - உலகம்
முண்டகம் - தாமரை                                    படி - நிலம்
கமுகு - பாக்கு                                                 பொருப்பு- மலை
மத்தமான் - யானை                                      கால் - காற்று
உழை - மீன்                                                      வாவி - குளம்
கிளைஞர் - உறவினர்                                  காளர் - காடு
சிவிகை - பல்லக்கு                                      தீம் - இனிமை
கொண்டல் - மேகம்                                     பிணிமுகம் - மயில்
தார் - மலை                                                     தரு - மரம்
புள் - பறவை                                                   விழுமம் - சிறப்பு
வரை - மலை                                                 மரை - மான்
விசும்பு - வானம்                                           நல்குரவு - வறுமை
சலம் - வஞ்சனை                                        கஞ்சம் - தாமரை
ஊற்றுழி - துன்புறும் காலம்                    நுதல் - நெற்றி
கேழல் - பன்றி                                               புனை - தெப்பம்
சோரன் - திருடன்                                        ஏறு - ஆண்சிங்கம்
பிணவு - பெண்                                              பல்லவம் - தளிர்
பொலம் - அழகு                                            நாவாய் - படகு ,கப்பல்
ஆகடியம் - ஏளனம்                                     பூதலம் - உலகம்
நன்னார் - பகைவர்                                     வித்து - விதை
நகை - சிரிப்பு                                                ஞாலம் - உலகம்
மாசு - குற்றம்                                               கோதை - மாலை
புனல் - நீர்                                                       தத்தை - கிளி
தொன்மை - பழமை                                    படை - அடுக்கு
ஓங்க - உயர                                                  பள்ளி - படுக்கை
பளு - சுமை                                                    விசை - வேகம்
வெற்பு - வந்தனை                                      குழவி - குழந்தை
வடு - தழும்பு                                                  சென்னி - தலை
பண் - இசை                                                    புள் - பறவை
நாண் - கயிறு                                                மேதினி - உலகம்
பார் - உலகம்                                                 மாறன் - மன்மதன்
சினம் - கோபம்                                             கஞ்சம் - தாமரை
புரவி - குதிரை                                              ஒழுக்கு - ஒழுக்கம்
களி - யானை                                               அன்ன - போல
மறவன் - வீரன்                                            ககம் - பறவை
யாக்கை - உடல்                                          பீழை - பழி
நலிவு - கேடு                                                தகவு - நன்னடத்தை
மாடு - செல்வம்                                          காணம் - பொன்
அனல் - தீ, நெருப்பு                                    சுடலை - சுடுகாடு
தாரம் - மனைவி                                         சாந்தம் - சந்தனமுகம்
விழைதல் - விருப்பம்                               தறு - வில்
குரவர் - ஆசிரியர்                                       கூவல் - கிணறு
சுரும்பு - வண்டு                                          சீலம் - ஒழுக்கம்
இடுக்கண் - துன்பம்                                   செய் - வயல்
துன்று - செறிவு                                           மடு - ஆழமான நீர்நிலை
கமடம் - ஆமை                                            வேணி - சடை

       மேலும் சொற்களைத் தெரிந்து கொள்ள பள்ளி தமிழ்ப் பாடநூலிலுள்ள அருஞ்சொற்பொருள் பகுதியினை வாசியுங்கள்..

          அடுத்த பதிவில் நூல்களையும் நூலாசிரியர்களையும் காணலாம்.
==========================================================================
 பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
--------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                                           அன்புடன்





பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

3 comments:

  1. படிக்கும் காலத்தில் நிறைய சொல்லுக்கு அர்த்தம் தெரிந்து வைத்திருப்பதுண்டு இப்போது எவையுமே ஞாபகத்தில் இல்லை., தொடருங்கள் தங்கள் சேவையை ..!

    ReplyDelete
  2. நீ....ண்ட நாளைக்கு அப்புறம் வெளிவருகிற பதிவு. ரொம்ப உபயோகமா இருக்கு. நன்றி. அடுத்தடுத்த பதிவுகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. பல பேர்களை ஞாபகம் வைத்து கொள்ள முடிய வில்லை.
    மன பாடம் தான் செய்ய வேண்டும் போல.paarkalaam.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com