புது வரவு :
Home » , , , , » ஏமாற்றத்தை அளித்ததா குரூப் 4 தேர்வு?..

ஏமாற்றத்தை அளித்ததா குரூப் 4 தேர்வு?..

        வணக்கம் தோழர்களே.. நேற்று நடந்த குருப்  4 தேர்வை பற்றியான சிறப்பு பதிவுதான் இது. நேற்று வினாத்தாளை வாங்கிய அனைவரின் முகத்திலும் ஒருவித குழப்பம் படர்ந்ததாக தகவல்.காரணம்,வழக்கத்திற்கு மாறாக வினாத்தாள் அமைக்கப்பட்டிருந்தது தான்.முதல் முறையாக தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வு எளிதாக இருந்தது என்றே சொல்கிறார்கள். இரண்டாம் முறை மூன்றாம் முறை தேர்வு எழுதியவர்களே கடினம் என்கிறார்கள்.
      
       முந்தைய தேர்வுத்தாள்களையும் அதில் கேட்கப்பட்டிருந்த வினாக்களின் அடிப்படையிலேயே இத்தேர்வுக்கும் மாணவர்கள் தயாராகி இருந்தனர். ஆனால் இந்த தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் அரசு கொடுத்திருந்த ப்ளூ ப்ரிண்டையும் தாண்டி வந்திருப்பதாக தேர்வை எழுதிய பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

        பொதுவாக குரூப் 4 குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் பொதுத்தமிழ் பகுதியில் எளிதாக 90 வினாக்களுக்கு மேல் சரியாக எழுதிவிடுவார்கள்.அதாவது

1)அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்

5  வினாக்கள்

                   7.5
2)ஓரெழுத்து ஒரு மொழி 
5  வினாக்கள்

                   7.5

3)பெயர்ச்சொல்லின் வகையறிதல்
5  வினாக்கள்                     7.5

 4)வேர்ச்சொல்லை கண்டறிதல்
5  வினாக்கள்                     7.5

5)வேர்ச்சொல் மூலம் வினைமுற்று,பெயரெச்சம்,
வினையாலணையும்பெயர்,வினையெச்சம்,தொழிற் பெயர் போன்றவற்றை கண்டறிதல்
5  வினாக்கள்                     7.5

6)சொல்லும் பொருளும்(பொருத்துக)
5  வினாக்கள்                      7.5

7)ஒலி வேறுபாடு அறிதல்
5  வினாக்கள்                      7.5

8)ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்சொல் அறிதல்
5  வினாக்கள்                      7.5

9)எதிர்ச்சொல் அறிதல்
5  வினாக்கள்                      7.5

10)பொருந்தாச்சொல்லைக் கண்டறிதல்
5  வினாக்கள்                      7.5

11)இலக்கண குறிப்பறிதல்
5  வினாக்கள்                      7.5

12)பிரித்தெழுதுதல்
5  வினாக்கள்                      7.5

13)பிழை திருத்தி எழுதுதல்
5  வினாக்கள்                      7.5

14)சொற்களை வரிசைப்படுத்தி சொற்றொடரை கண்டறிதல்
5  வினாக்கள்                      7.5

15)வாக்கிய வகைகள் அறிதல்
5  வினாக்கள்                      7.5

16)தன்வினை,செய்வினை,பிறவினை வாக்கியங்களை அறிதல்
5  வினாக்கள்                      7.5

17)விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்
5  வினாக்கள்                      7.5

18)எதுகை,மோனை,இயைபுத் தொடைகள் கண்டறிதல்
5  வினாக்கள்                      7.5

19)உவமைக்கேற்ற பொருள் அறிதல்
5  வினாக்கள்                      7.5

20)நூல்களும் நூலாசிரியர்களும்
5  வினாக்கள்                      7.5
                                                                
                                           மொத்தம்
100 வினாக்கள்    150 மதிப்பெண்கள்

       மேற்கண்ட பட்டியலின் படிதான் இதுவரையிலும் பொதுத்தமிழ் பகுதியில் வினாக்கள் கேட்கப்பட்டு வந்தன.இதை அடிப்படையாக வைத்துதான் டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன.பொதுத்தமிழ் மொழிப்பயிற்சி புத்தகங்களும் வெளியிடப்பட்டன.ஒரு பிரிவின் கீழ் 5 வினாக்கள் வீதம் வரும்.

          இதை எதிர்பார்த்து இதற்கு தயாராகிச் சென்ற மாணவர்கள் பொதுத்தமிழ் வினாக்களைப் பார்த்து சற்று மனவருத்தம் அடைந்திருக்கிறார்கள். வினாத்தாள் முற்றிலும் மாறுபட்டிருந்தது.முன்பெல்லாம் பொதுத்தமிழ் பகுதியை ஒரு மணி நேரத்தில் முடித்துவிடும் மாணவர்களுக்கு இந்த முறை இரண்டு மணி நேரம் தேவைப் பட்டது.அதனால் சிலர் 3 மணிநேரம் போதாமல் தவித்திருக்கிறார்கள்.

          பொதுத்தமிழில் கேட்கப்பட்ட சில வினாக்கள் எந்த பிரிவின் கீழ் கேட்கப்பட்டது,வினா எந்தப் பாடத்தில் இருந்து கேட்கப்பட்டது எனத் தெரியாமல் குழம்பிபோய் இருக்கிறார்கள்.

         பொதுத்தமிழ் பகுதி இந்த முறை தரமானதாக இருந்தது.அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இப்படி கேட்கப்படும் என்று மாணவர்களுக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தால் அதற்கு தயாராகியிருப்பார்கள்.

          பொது அறிவைப் பொறுத்தவரை தரமானதாகத்தான் இருந்தது.ஆனாலும் வழக்கமாக கேட்கப்படுவதைப் போல அல்லாமல் மிகத் தரமாக கேட்கப்பட்டிருந்தது.இலக்கண இலக்கியங்களை முழுமையாகப் படித்தவர்களுக்கு எளிமையாக இருந்திருக்கும்.புத்தக அறிவை மட்டும் வைத்துக்கொண்டு தேர்வு எழுத வந்தவர்களுக்கு சோதனை தரும்படிதான் இருந்தது.

          குருப் 4 க்கான தேர்வுத்தாள் என்று இதைச் சொல்ல முடியாது குரூப் 2 தேர்வுத்தாளைப் போலவே இருந்தது.பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்கான தேர்வில் டிகிரி அளவிற்கு வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாகவேதேர்வை எழுதியவர்களில் பெரும்பாலும் சொல்லுகிறார்கள்.

          பொருத்துக என்று தமிழில் நிறைய வினாக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.

            அறிவை பரிசோதிக்கும்படியான வினாக்கள் அதிகம் இடம் பெற்றிருக்கிறது.பொதுவாக இந்த வினாத்தாள் தரமானதாக இருந்ததெனச் சொல்லலாம்.இனிவரும் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தமிழ் இலக்கணப் பகுதிகளையும் இலக்கியப்பகுதிகளையும் முழுமையாகப் படித்தால் மட்டுமே முழு மதிப்பெண்களைப் பெற முடியும்.எனவே முடிந்ததைப் பற்றி யோசிக்காமல் வரும் தேர்வுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.
========================================================================


டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

19 comments:

  1. உபயோகமான பதிவு நன்றி கவிஞரே....!

    ReplyDelete
  2. போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் பதிவிட்டு வந்தீர்கள்.உங்கள் பதிவுகளை படித்திருந்தாலே வெற்றி பெற முடியும் என்று கருதுகிறேன்.உங்கள் பயிற்சியும் சேவையும் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
  3. ஹிட்ஸ்.., மறுமொழிகள் என்று எதை பற்றியும் கவலை படாமல் நீண்ட தூரம் பயணம் செய்து தன்னலமற்ற சேவையை வழங்கிய உங்களுக்கு... என் இதயம் நிறைந்த நன்றிகள்! வாழட்டும் மனிதம்!

    ReplyDelete
  4. எல்லோருக்கும் உபயோகப்படும்படியான நல்ல தகவல் சார். போட்டித்தேர்வுக்கு தயார் செய்வோருக்கு நிச்சயம் உதவும்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி..

      Delete
  5. பயன் மிக்க பதிவு அண்ணா...

    ReplyDelete
  6. எனக்கு என்னவோ எளிதாகதான் இருந்தது .. எதுவுமே படிக்கவில்லை ஆனால் 125 விடைகள் சரி

    ReplyDelete
    Replies
    1. அப்படியா தோழர்..நீங்கள் தேர்வை எழுதினீர்களா? மகிழ்ச்சி..அரசு கொடுத்த விடைகளில் இரண்டு தவறானது.அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்..அடுத்து குரூப் 2 விற்கு தயாராகுங்கள்..வாழ்த்துக்கள்..

      Delete
  7. //எனவே முடிந்ததைப் பற்றி யோசிக்காமல் வரும் தேர்வுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.//
    இத்தேர்வு ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும்.
    நன்று

    ReplyDelete
  8. I am BC and got 152. Is there any chance for me?

    ReplyDelete
    Replies
    1. 152 என்பது நல்ல நிலை..60 சதவீதம் வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்..
      பார்க்கலாம்..எனினும் வெற்றி பெற வாழ்த்துகள்..

      Delete
  9. BC/163.Have a chance?Pls reply sir...

    ReplyDelete
  10. 163 என்கிறபோது வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதுகிறேன்..வெல்ல வாழ்த்துகள்..

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com