பல பெயர்களைப் பெற்றவள்
நாற்றம் பிடித்தவள் என
நல்லவரெனத் தங்களை
சொல்லிக் கொள்பவர்கள்
சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்-அவளை
வாசம் பிடிக்க வருபவர்கள்
வரிசையாய் வந்து கொண்டேயிருக்கிறார்கள்..
ஈருடலும்
சந்தோஷிக்கவேண்டிய
சம்பிரதாயம்தான் அது..
ஓருடல் சந்தோஷிக்கிறதா
எனத் தெரியவில்லை..
சம்பிரதாயம்
சதா நடந்து கொண்டேயிருக்கிறது-அந்த
சம்பிரதாயமே சம்பாதித்துக் கொடுக்கிறது..
வியர்வை சிந்தி உழைக்கும் பணமே
உண்ணும் உணவை செரிக்கும்
என்பதென்னவோ அவளுக்கும்
தெரிந்திருக்கிறது..
தன் உடலில் சிந்திய வியர்வையைப் பார்த்து
நானும் உழைத்திருக்கிறேன் என்று
உறுதியாக நம்பிக் கொள்கிறாள்..
உடல் சிந்திய வியர்வையா..
உடல் சிந்திய கண்ணீரா..
அவளுக்கே வெளிச்சம்..
உடலது பலமுறை
சந்தோசிக்கிறது..
மனமது ஒருமுறையாவது
சந்தோஷிக்கிறதா?!..
வினாக்குறியும்
ஆச்சர்யக்குறியும் இங்கே
ஜோடி சேர்ந்து நிற்கின்றன..
உண்டான ஊதியத்தை
சரியாகக் கொடுக்கும் சுகவாசி,
அதன்மூலம் தானொரு
யோக்கியன் என நிரூபிக்கிறான்..
இல்லாளை விடுத்து
அடுத்தாளை அடைபவன்
அயோக்கியன் எனத் தெரிந்தும்
தெரியாததைப் போலவே காட்டிக்கொள்கிறான்..
அவளைப் போற்றும் வாடிக்கையாளன்
அவள் பெயர் சொல்லி
செல்லமாய் அழைத்தாலும்
அவளைத் தூற்றும் வாடிக்கையாளன்
பல பெயர்களைச் சூட்டியிருக்கிறான்..
பல பெயர்களுக்கு சொந்தக்காரி..
உடலை கட்டிலில் கிடத்திவிட்டு
பாவப்பட்ட மனமது
எங்கேயோ போய்விடுகிறது..
ஓருடல் ஓருடலை
உதறித் தள்ளிய பிறகே
மனமது கூடு திரும்புகிறது..
அதற்கென உண்டாக்கப்பட்ட
இயந்திரமாகத்தான் உடலது
இயங்கிக் கொண்டிருக்கிறது..
ஆற்றல் தீரும் வரை
இயந்திரம் இயங்கத்தான் செய்யும்..
வயிற்றுப் பசிபோக்க- பலரின்
உடற்பசியைத் தீர்க்க வேண்டிய கட்டாயம்..
குடும்ப சுமை இறக்க-பல
குடும்பத் தலைவர்களை
சுமக்க வேண்டிய நிர்பந்தம்..
ஆடம்பர வாழ்க்கைக்கு
அடித்தளம் அமைக்கத் தன்னையே
அடித்தளமாக்கிக்கொள்கிற அவலம்..
இன்னும் பல தலைப்புக்களில்
இது பலவகைப்படுகிறது..
இளமை முதுமையோடும்
முதுமை இளமையோடும்
கூட்டணி அமைக்கிறது..
புணர்ச்சி விதி
இங்கே தவறாகிப் போகிறது..
இதுவும் ஒரு பிழைப்பா
என யாரும் கேட்டுவிட முடியாது..
சமூகம் பாலியல் தொழில் என்றே
இதனை வகைப்படுத்துகிறது..
--------------------------
இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பை 'க்ளிக்' செய்யுங்கள்..
உண்மையில் என்னை நெகிழ வைத்தது அண்ணா...
ReplyDeleteசொல்ல வார்த்தையில்லை....
இதை பற்றி மேலும் பேசவும் எண்ணமில்லை மொதத்தத்தில் யாவரும் படிக்க வேண்டிய கவிதை...
கவிதை நெகிழ வைத்ததா..வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா..
Deleteஉடலை கட்டிலில் கிடத்திவிட்டு
ReplyDeleteபாவப்பட்ட மனமது
எங்கேயோ போய்விடுகிறது..
ஓருடல் ஓருடலை
உதறித் தள்ளிய பிறகே
மனமது கூடு திரும்புகிறது..
அதற்கென உண்டாக்கப்பட்ட
இயந்திரமாகத்தான் உடலது
இயங்கிக் கொண்டிருக்கிறது..
ஆற்றல் தீரும் வரை
இயந்திரம் இயங்கத்தான் செய்யும்..
மிக மிக அருமையான படைப்பு
மீண்டும்மீண்டும் படித்து ரசித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ரசித்து வாசித்தீர்களா..மகிழ்ச்சி..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!..
Deleteஇந்த கவிதை சாட்டை சில ஆண்களின் முதுகில் தழும்புகளை ஏற்படுத்தும்
ReplyDeleteநிச்சயம்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete//இளமை முதுமையோடும்
ReplyDeleteமுதுமை இளமையோடும்
கூட்டணி அமைக்கிறது.
புணர்ச்சி விதி
இங்கே தவறாகிப் போகிறது.//
நெஞ்சை நெருடும் வரிகள்.
கவிதையைப் படித்ததும் மனதை ஏதோ செய்கிறது.
தாங்கள் ஆழ்ந்து வாசித்திருக்கிறீர்கள்.. மகிழ்ச்சி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteம் ...
ReplyDeleteம்..
Deleteஉடல் இசைந்து கொடுத்தாலும் மனது...? சரியான கேள்வி. இந்தரகப் பெண்களுக்காய் பரிந்து எழுதிய கேள்விகள் பலரது மனதில் முள்ளாய் உறுத்தும். அருமை கவிஞரே...
ReplyDeleteநிச்சயமாய் தோழரே..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!..
Deleteநியாயமான பல கேள்விகளை நயமாக நாசூக்காக எடுத்துரைக்கும் நல்ல கவிதை இது.
ReplyDeleteவிடையறியவே முடியாத சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.
அழகாக அமைதியாக அருமையாக அருவருக்க முடியாதபடி எழுதியுள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து ரசித்து வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி
Deleteஐயா..
//நாற்றம் பிடித்தவள் என
ReplyDeleteநல்லவரெனத் தங்களை
சொல்லிக் கொள்பவர்கள்
சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்//உண்மை தான் அன்பரே
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரேம்!.
Deleteதரமான படைப்பு நண்பரே.. அருமை
ReplyDeleteநன்றி நண்பரே..
Deletevethanai!
ReplyDeletepuriya vendiya kavithai ..
arumai!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனி!.
Deleteநெருப்ப இருக்கு வரிகள் பலரையும் சுடும்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனசாட்சி.
Deleteகுமுறல்கள்
ReplyDeleteஆம்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!.
Deleteசொல்லவந்த செய்தியை சொல்லியுள்ள விதமும்-அவள்
ReplyDeleteசோகமுடன் உடல்பசியை தீர்ப்பவளாய் நிதமும்
அள்ளவரும் நீரானாள் ஆண்களுக்கு அந்தோ-பெரும்
அல்லல்பட்டு உணர்வற்று உள்ளமிக நொந்தோ
வெள்ளமென கண்ணீரில் வாழுமவள் அவலம்-இங்கே
விளக்கமுடன் கவிதையிலே கண்டமனம் துவளும்
தெள்ளரிய புலமைதனை பாவடிவில் கண்டேன்-இன்பத்
தேன்சுவையை அடிதோறும் திகட்டாது உண்டேன்
சா இராமாநுசம்
-
கவிதை வாசித்ததும் தங்கள் மனதில் தோன்றியவற்றை கவிதை நடையிலே
Deleteகருத்தாக பதிவு செய்திருக்கிறீர்கள்..மகிழ்ச்சி ஐயா..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!.
இளமை முதுமையோடும்
ReplyDeleteமுதுமை இளமையோடும்
கூட்டணி அமைக்கிறது..
புணர்ச்சி விதி
இங்கே தவறாகிப் போகிறது..
இதுவும் ஒரு பிழைப்பா
என யாரும் கேட்டுவிட முடியாது..
சமூகம் பாலியல் தொழில் என்றே
இதனை வகைப்படுத்துகிறது..
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நருக்கென தைக்கும் வரிகள்.
அப்படியா சசி.. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!..
Deleteசொல்ல எடுத்த விடயத்தைச் சொல்லி இருக்கும் விதம் அருமை. பாராட்டுக்கள் மதுமதி.
ReplyDeleteமகிழ்ச்சி சகோ..தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..
Deleteஆழமான கருத்துக்கள்.பொருத்தமான தலைப்பு.
ReplyDeleteநன்றி ஐயா..உங்களின் கருத்துக்கும் வருகைக்கும்..
Deleteதனியறையில் அவளுடன் களிக்கும் எவனும்,பொது இடத்தில் அவளைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்வானா?மாட்டான்.ஏனெனில் அவள் பொது மகள்!
ReplyDeleteசிறப்பான கவிதை
அந்தக்காலம் முதல் இந்த காலம் வரை தொடரும் இந்த தொழில் ... மாறுவது எப்போது...? கொடுமை சார்... பகிர்வுக்கு நன்றி... (10)
ReplyDeleteஇதில் எந்த வரியினைப் பிரித்தும் இது அருமை என்று சொல்ல முடியாத நிலையில் நானிருக்கிறேன் நண்பரே...
ReplyDeleteஇது வரிகளாக இல்லாமல் ஒரு காட்சியாக மனதில் நின்று ஒரு சமூகப் பார்வையை பார்வையாளன் மனதில் நிறுத்துகிறது.அகம் புறம் இரண்டையும் கையாண்டுள்ளீர்கள் இந்த கவிதையில்...
ஒரு முறை நா.காமராஜரின் ஒரு கவிதை (வரிகள் மறந்துவிட்டது )படித்த நியாபகம் வருகிறது.
அருமை
ReplyDeleteவார்த்தைகளில் விழிக்க செய்திருகிறீர்கள்
உறங்குவது போல நடிக்கும் சமூகத்தை
வரி வரியாய் சாட்டையில் அடித்தது போல
வலிக்கத்தான் செய்யும் மறைவில் நிற்கும் மனிதர்களுக்கு
அவளின் உப்பை தின்றுவிட்டு
அவளையே எச்சிலை ஆக்கும் கள்ள மனம்
நிச்சயம் ஒரு நாள் வெட்ட வெளிச்சத்திற்கு வரும்
ஊரார் உமிழ
எனக்குள் உறங்கிய எழுச்சி கவியை
எல செய்கிறது உங்கள் வரிகள்