புது வரவு :
Home » , , , » டி.என்.பி.எஸ்.சி- பொதுத்தமிழ் வினாத்தாள் ஒரு அலசல்

டி.என்.பி.எஸ்.சி- பொதுத்தமிழ் வினாத்தாள் ஒரு அலசல்

         வணக்கம் தோழர்களே..சென்ற பகுதியில் பொதுத்தமிழ் பாடத்திட்டத்தைப் பார்த்தோம். பொதுத்தமிழ் பாடத்திட்டத்தைக் காண இங்கே செல்லவும்.7.7.2012 அன்று நடந்து முடிந்த குரூப் 4 தேர்வின் பொதுத்தமிழ் வினாக்களைப் பார்ப்போம்.அது மிகவும் உங்களுக்கு பயன் உள்ளதாய் இருக்கும்.

     
         நான் ஏற்கனவே கூறியது போல பாடத்திட்டம் மாறவில்லை.வினாக்களின் அமைப்புதான் மாறியிருக்கிறது.ஒவ்வொரு பிரிவின் கீழ் ஐந்து வினாக்கள் வீதம் 100 வினாக்கள் கேட்வேண்டிய இடத்தில் முடிந்த தேர்வில் வினாக்கள் எப்படி மாற்றி கேட்கப்பட்டிருக்கின்றன என பார்ப்போம்..

         பொதுவாக இந்த வினாத்தாளில் பொருத்துக என்ற பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வினாக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.இதில் அருஞ்சொற்பொருளுக்கும் நூல் நூலாசிரியருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

          1)ஓரெழுத்து ஒரு மொழியில் ஐந்து வினாக்கள் கேட்பதற்கு பதிலாக நான்கு ஓரெழுத்துக்களைக் கொடுத்து பொருத்துக என ஒரே வினாவாக கேட்கப்பட்டிருந்தது.

          2)அகர வரிசையில் எழுதுக என 5 வினாக்கள் கேட்கப்படும் ஆனால் இந்த வினாத்தாளில் இப்பகுதியில் வினாக்கள் இடம் பெறவில்லை.

          3)பெயர்ச்சொல் வகையறிதல் பகுதியில் 5 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

          4)வேர்ச்சொல்லைக் கண்டறிதல் பகுதியில் 2 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

          5)வேர்ச்சொல்லைக் கொண்டு வினைத்தொகை ,வினைமுற்று போன்றவை கண்டறிதல் பகுதியில் 2 வினாக்கள் இடம் பெற்றன.

          6)சொல்லும் பொருளும் பகுதியில் கிட்டத்தட்ட 10 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.இவ்வகை வினாக்கள் இத்தாளில் அதிகமாக கேட்கப்பட்டிருப்பது முக்கியமானதாகும்.இதில் நூலும் நூலாசியர்கள் மற்றும் சொல்லும் பொருளும் என வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

          7)ஒலி வேறுபாடு அறிதல் பகுதியில் 2 வினாக்களே இடம் பெற்றன.

          8)ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் கண்டறிதல் பகுதியில் 3 வினாக்கள் இடம் பெற்றன.

          9)எதிர்ச்சொல் அறிதல் பகுதியில் 1 வினா மட்டுமே கேட்கப்பட்டிருந்தது.

         10)பொருந்தாச்சொல்லைக் கண்டறிதல் பகுதியில் 6 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

         11)இலக்கணக் குறிப்பு பகுதியில் ஆறு வினாக்கள் கேட்கப்பட்டன.
சரியாகப் பொருந்தியுள்ளது எது என ஒரு வினாவும் இணையத் தேர்ந்தெடு என வினாவும் கேட்கப்பட்டன.

         12)பிரித்தெழுதுக பகுதியில் 6 வினாக்கள் கேட்கப்பட்டன.

         13)பிழை நீக்கி எழுதுதல் பகுதியில் 2 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

         14)சொற்களை வரிசைப் படுத்தி சொற்றொடர் அமைத்தல் பகுதியில் 2 வினாக்கள் கேட்கப்பட்டன.

         15)வாக்கிய வகை அறிதல் பகுதியில் 3 வினாக்கள் கேட்கப்பட்டன.
நான்கு வினாக்களாக கேட்க வேண்டியவற்றை பொருத்துக முறையில் கொடுத்து ஒரு வினா கேட்கப்பட்டது. கூற்று வகையில் ஒரு வினாவும் கேட்கப்பட்டது.

         16)விடைக்கேற்ற வினா தருக பகுதியில் 6 வினாக்கள் கேட்கப்பட்டன.

         17)தன்வினை,பிறவினை கண்டறிதல் பகுதியில் 3 வினாக்கள் கேட்கப்பட்டன.

         18)எதுகை மோனை அறிதல் பகுதியில் 6 வினாக்கள் கேட்கப்பட்டன.
நேரடிகாக பாடலையோ வார்த்தைகளையோ கொடுத்து கேட்காமல் மோனை என்பதன் பொருளைக் கேட்டு வினா வந்தது.பெரும்பாலும் பாலைக் கொடுத்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

         19)உவமைக்கேற்ற பொருள் தருக பகுதியில் 3 வினாக்கள் கேட்கப்பட்டன.

         20)சிறப்பு பெயரால் அறியப்படும் நூல்கள் ,
நூலாசிரியர்கள் பகுதியில் 5 வினாக்களுக்கும் மேல் கேட்கப்பட்டிருந்தன்.

          ஆகவே தோழர்களே..பாடத்திட்டத்திற்கு உட்பட்டே வினாக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.ஆனால் வழக்கமாக கேட்கும் முறையை மாற்றி சற்று யோசித்து விடையளிக்கும் விதமாக வினாக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. மேற்கண்டவையே சற்று கடினம் என்றால் குரூப் 2 தேர்வுக்கு இன்னும் கடினமான வினாக்கள் வரலாம்.ஆனால் அதற்கும் இதுதான் பாடத்திட்டம்.

           பொதுவாக மொழிப்பயிற்சி பகுதிகளையும் இலக்கணப் பகுதிகளையும் புரிந்து படித்தால் எப்படி வினா கேட்டாலும் பதில் அளித்துவிடலாம்.எனவே ஆழ்ந்து படியுங்கள் வாழ்த்துகள்..

           பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
நன்றி..
          
                                                                                                                                       அன்புடன்..



இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணைப்பை 'க்ளிக்' செய்யவும்.



டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

1 comment:

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com