புது வரவு :
Home » , , , » குரூப் 2 , குரூப் 4(VAO) பொதுத்தமிழ் பாடத்திட்டம்-

குரூப் 2 , குரூப் 4(VAO) பொதுத்தமிழ் பாடத்திட்டம்-

        
           இன்றைய பதிவில் பொதுத்தமிழ் பாடத்திட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
சென்ற தேர்வை எழுதியவர்களில் பெரும்பாலானோர் பாடத்திட்டம் மாறிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.பாடத்திட்டம் மாறவில்லை.அப்படி மாறியிருந்தால் தேர்வாணையம் முறையான அறிவிப்பு கொடுத்திருக்கும்.

            வினாத்தாள் அமைப்புதான் மாறியிருக்கிறது ..எனவே அதே பாடத்திட்டம்தான்.உங்களுக்காக மீண்டும் பாடத்திட்டத்தை கீழே கொடுத்திருக்கிறேன்.

1)அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல்


2)ஓரெழுத்து ஒரு மொழி 


3)பெயர்ச்சொல்லின் வகையறிதல்

 4)வேர்ச்சொல்லை கண்டறிதல்

5)வேர்ச்சொல் மூலம் வினைமுற்று,பெயரெச்சம்,
வினையாலணையும்பெயர்,வினையெச்சம்,தொழிற் பெயர் போன்றவற்றை கண்டறிதல்

6)சொல்லும் பொருளும்(பொருத்துக)

7)ஒலி வேறுபாடு அறிதல்

8)ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்சொல் அறிதல்

9)எதிர்ச்சொல் அறிதல்

10)பொருந்தாச்சொல்லைக் கண்டறிதல்

11)இலக்கண குறிப்பறிதல்

12)பிரித்தெழுதுதல்

13)பிழை திருத்தி எழுதுதல்

14)சொற்களை வரிசைப்படுத்தி சொற்றொடரை கண்டறிதல்

15)வாக்கிய வகைகள் அறிதல்

16)தன்வினை,செய்வினை,பிறவினை வாக்கியங்களை அறிதல்

17)விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடுத்தல்

18)எதுகை,மோனை,இயைபுத் தொடைகள் கண்டறிதல்

19)உவமைக்கேற்ற பொருள் அறிதல்

20)நூல்களும் நூலாசிரியர்களும்
  

                ஒவ்வொரு பிரிவின் கீழ் ஐந்து வினாக்கள் என்ற வீதம் மிக எளிமையாக வினாக்கள் கேட்கப்பட்டு வந்தன.ஆனால் சென்ற முறை அதனை கொஞ்சம் மாற்றி சில பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
                07.07.2012 அன்று நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்டிருந்த பொதுத்தமிழ் வினாக்களைப் பற்றிய ஒரு விரிவான பதிவை நாளை நான் இடுகிறேன்.எந்த வினாக்கள் எப்படி கேட்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குப் புரியும்..
நன்றி..
               பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..
            
                                                                                                                                         அன்புடன்..இப்பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை 'க்ளிக்' செய்யவும்.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com