வணக்கம் தோழர்களே!
சென்ற மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் விடைகளை அன்று இரவே வெளியிட்ட தேர்வாணையம் குருப் 2 க்கான விடைகளை இன்னும் வெளியிடவில்லை என சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.அப்போதே தெரிந்து விட்டது. தேர்வில் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது என்று.
சென்னை உள்ளிட்ட மாநகரங்களையும் சேர்த்து மொத்தம் 2003 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன.அந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் உள்ள 2003 மையங்களையும் அரசு வீடியோ செய்திருந்தது. தேர்வு எழுதுபவர்கள் செல்போன், வாட்ச் முதலியவற்றைக் கூட தேர்வு கூடத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தேர்வு மிகச்சிறந்த முறையில் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது. ஆனால் ஈரோட்டில் தான் வினாத்தாள் வெளியானதாக செய்தித்தாளில் செய்திகள் வெளியாயின..
ஈரோட்டில் தேர்வு எழுத வந்த பெண்ணிடம் வினாத்தாளுக்கான நகல் முன்னமே இருந்தது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஈரோடு சி.எஸ்.ஐ பள்ளியில் தேர்வெழுத வந்த மற்ற மாணவர்கள் அந்த நகல் வினாத்தாளை காலையிலேயே அப்பெண்ணிடம் பார்த்திருக்கிறார்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்வாணைய தலைவர் திரு நடராஜ் அவர்கள் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் 'தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானது உண்மையல்ல.இந்த சம்பவம் குறித்து இது பற்றி ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.விசாரணையின் முடிவில் தான் என்னால கருத்து தெரிவிக்க முடியும் என்று கூறியிருந்தார் அதைத். தொடர்ந்து விசாரணை நடந்தது.
இறுதியில் வினாத்தாள் வெளியானதை ஒப்புக்கொண்ட தேர்வாணையம் நேற்று நடந்த இந்த தேர்வை ரத்து செய்வதாக இப்பொழுது அறிவித்துள்ளது.
கடுமையான பாதுகாப்பையும் மீறி எப்படி வினாத்தாள் வெளியானது என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று நடந்த இத்தேர்வை ரத்து செய்த தேர்வாணையம் இதே தேர்வை வேறொரு தேதியில் நடத்த திட்டமிட்டிருக்கிறது.
தேர்வு நடக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வினாத்தாள் வெளியானதால் தேர்வை நன்றாக எழுதியிருந்தும் ஏமாற்றமடைந்த லட்சக்கணக்கானோர் இப்போது நிம்மதியடைந்திருக்கிறார்கள்..
அறிந்துகொண்டேன்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
தேர்வுக்கு கட்டின கட்டணத்தை திருப்பி தருவார்களா ? ?
ReplyDelete