புது வரவு :
Home » , , , » டி.என்.பி.எஸ்.சி - குரூப் 2 வினாத்தாள் அவுட் ஆனதா? பரபரப்பு

டி.என்.பி.எஸ்.சி - குரூப் 2 வினாத்தாள் அவுட் ஆனதா? பரபரப்பு

        வணக்கம் தோழர்களே.. நேற்று நடந்த குரூப் 2 தேர்வை எழுதிவிட்டு அதற்கான வினா விடைகளை தேடிக் கொண்டிருப்பீர்கள். சென்ற மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வின் விடைகளை அன்று இரவே வெளியிட்ட தேர்வாணையம் குருப் 2 க்கான விடைகளை இன்னும் வெளியிடவில்ல.

        நேற்றைய தேர்வு எளிமையானதாக இருந்ததா அல்லது கடினமானதாக இருந்ததா என்பதைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்..

       இன்று ஒரு முக்கிய செய்தியைக் காண்போம்..

       குரூப் 2 வினாத்தாள் முன்னமே வெளிவந்துவிட்டதா? என்ற அதிர்ச்சியுடன் கூடிய பரபரப்பு தேர்வு எழுதியவர்கள் மட்டுமில்லாது அனைவரிடமும் காணப்படுகிறது. இது குறித்த செய்தி நேற்றே வெளியானது..

        நேற்று நடந்த தேர்வில் 3631 பணியிடங்களுக்கு 6.5 லட்சம் பேர் தேர்வை எழுதி உள்ளனர். அனைவருமே தங்களுக்கு வ்சேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் தேர்வை எழுதியிருக்கிறார்கள்.

        விடைகள எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலையில் வினாத்தாள் வெளியாகிவிட்டது என்ற அதிர்ச்சியில் நிறைய பேர் உறைந்து போய்விட்டார்கள். நன்றாக தேர்வெழுதியிருக்கும் பல மனம் உடைந்து போய்விட்டார்கள்..



வினாத்தாள் வெளியானதா?

         சென்னை உள்ளிட்ட மாநகரங்களையும் சேர்த்து மொத்தம் 2003 தேர்வு மையங்களில் தேர்வுகள நடைபெற்றன.அந்த தேர்வை தமிழ்நாடு முழுவது உள்ள 2003 மையங்களையும் அரசு வீடியோ செய்திருந்தது. தேர்வு எழுதுபவர்கள் செல்போன், வாட்ச் முதலியவற்றைக் கூட தேர்வு கூடத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தேர்வு மிகச்சிறந்த முரையில் அனைத்து பகுதிகளிலுல் நடைபெற்றது. ஆனால் ஈரோட்டில் தான் வினாத்தாள் வெளியானதாக செய்தித்தாளில் செய்திகள் வெளியாயின..

        ஈரோட்டில் தேர்வு எழுத வந்த பெண்ணிடம் வினாத்தாளுக்கான நகல் முன்னமே இருந்தது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஈரோடு சி.ஏச்.ஐ பள்ளியில் தேர்வெழுத வந்த மற்ற மாணவர்கள் அந்த நகல் வினாத்தாளை காலையிலேயே அப்பெண்ணிடம் பார்த்திருக்கிறார்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.

         இது குறித்து தேர்வாணைய தலைவர் திரு நடராஜ் அவர்கள் பத்திரிக்கைகு அளித்த பேட்டியில் 'தேர்வுக்கு முன்பே வினாத்தாள் வெளியானது உண்மையல்ல.இந்த சம்பவம் குறித்து இது பற்றி ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.விசாரணையின் முடிவில் தான் என்னால கருத்து தெரிவிக்க முடியும் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

                                                                                                                               குழப்பத்துடன்,
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

5 comments:

  1. அப்படி ஒன்றும் நடந்திருக்காது என்று நம்புவோம்!

    ReplyDelete
  2. Unmai than Madhu enna seithalum thavaru nadanthu kondu than irukkerathu...... Unmai, Nermai, Sathiyam nam nattukku porunthadhu.....
    by- Muthuraj........

    ReplyDelete
  3. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வினாத்தாள் வெளியானது என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியிருக்க வாய்ப்பு உள்ளது. டி.என்.பி.எஸ்.சி.யில் அடுத்து என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒன்று குறிப்பிட்ட பகுதியில் நடந்த தேர்வினை ரத்து செய்வார்கள் அல்லது ஒட்டுமொதத்தமாக தேர்வினையே ரத்து செய்வார்கள். என்ன நடக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

    ReplyDelete
  4. தேர்வு முடிந்து உங்களுக்கு நன்றி சொல்ல ஓடி வந்த எனக்கு இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தி தொலைக் காட்சியில் காத்திருந்தது.
    இருப்பினும் அப்படி ஒரு வாய்ப்பு இருந்திருக்க முடியாது என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

    ReplyDelete
  5. Madhu Sir, TNPSC GROU 2 EXAM CANCEL SEITHU VITTATHAGA SUN TV SEITHIYEL PAARTHEN....

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com