தமிழ் பதிவர்களுக்கு 100000 பரிசு அறிவிப்பு
வணக்கம் தோழர்களே.. சென்னையில் நடக்கவுள்ள பிரம்மாண்டமான உலக வலைப்பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் நாம் எல்லோரும் இருக்கிறோம் என்பதில் ஐயமில்லை.
இந்த மாபெரும் பதிவர் சந்திப்பிற்கு வருகைதரும் முனைப்போடு நீங்களும், நீங்கள் வருகை தந்தால் உங்களை ஆர்வத்தோடு வரவேற்கும் முனைப்பில் நாங்களும் இருக்கின்றோம்..
சென்னையில் நடக்கும் பதிவர் சந்திப்பை உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து எழுதக் கூடிய தமிழ் பதிவர்களும் ஆர்மாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் தாங்கள் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம் என்ற மனவருத்தம் அவர்களுக்கு இருக்கிறது. பதிவர் சந்திப்பு சிறந்த முறையில் நடைபெற அவர்கள் வாழ்த்துகளை சொன்ன வண்ணம் இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்..
சென்னையில் நடக்கும் மாபெரும் பதிவர் சந்திப்பைப் பற்றி நாளொரு தகவலை சொல்வதாய் சொல்லியிருந்தோம் அல்லவா.
இதோ இன்றைய தகவல்
சென்னை பதிவர் சந்திப்பில் 100000 ரூபாய் மாபெரும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட உள்ளது..
அதாவது இந்த மாபெரும் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு சென்னையில் பிரமாண்டமாய் நடைபெற நமக்கு மிகவும் ஒத்துழைப்பாக இருக்கும் நிறுவனமான மக்கள் சந்தை.காம் (தொழிற்களம்,தமிழ் பதிவர்கள் திரட்டி) இந்த மாபெரும் பரிசுத்தொகையை அறிவிக்க உள்ளது.
பதிவர் வருவாயை ஈட்டும் வழிமுறைகளை குறித்து மேடையில் சந்திப்பன்று பேச இருக்கும் மக்கள் சந்தை .காம் நிறுவனர் திரு சீனிவாசன் அவர்கள் அன்றைய தினம் இந்த மாபெறும் பரிசுத்தொகை பற்றி அறிவிப்பார்.
இந்த மாபெரும் பரிசான 100000 ரூபாயை பெற விரும்பும் தமிழ் வலைப்பதிவர்கள் அனறைய நாளில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்..
காலத்தையும் நேரத்தையும் இழந்து வருவாய் இல்லாமல் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கும் தமிழ் பதிவர்களாகிய நமக்கு இந்த மாபெரும் பரிசுத்தொகை ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இப்போதைக்கு இந்த தகவலை மட்டும் சொல்லிகொள்கிறேன். இந்த மாபெரும் பரிசுத்தொகையை பற்றிய முழு விளக்கங்களை அடுத்தடுத்த பதிவில் வெளியிடுகிறோம்..
தமிழ் வலைப்பதிவர்களே! இந்த மாபெரும் பரிசுத்தொகையான 100000 ரூபாயை வெல்ல நீங்கள் தயாரா?
மகிழ்ச்சியுடன்,
ஆஹா பேரதிர்ச்சி யாக இருக்கே ..
ReplyDeleteஇன்னும் இருக்கே..
Deleteவிவரங்களுக்கு காத்திருக்கிறோம்..
ReplyDeleteமகிழ்ச்சி..
Deleteஎன்ன கேள்வி இது பரிசு கொடுத்தா வேண்டாம் சொல்ல யாராவது முன் வருவாங்களா?
ReplyDeleteஅப்ப வாஙக முயற்சி பண்ணுங்க..
Deleteசொக்கா... ஒண்ணா ரெண்டா... ஒரு லட்சம் பொற்காசுகளா... எனக்கே கெடைக்கற மாதிரி அருள் செய்டாப்பா.
ReplyDeleteபாருங்க சகோ தனிய சுருட்டீற்று ஓடப் பாக்கிறார் :)....
Deleteஎங்களால் வாழ்த்துக்கள் மட்டுமே சொல்ல முடியும் .
இனிதே இவ் நிகழ்வு நடை பெற வாழ்த்துக்கள் .மிக்க
நன்றி பகிர்வுக்கு .
ஹாஹாஹா..மகிழ்ச்சி..நன்றி..
Deleteகணேஷ் ஐயா..
Deleteசொக்கன் துணையிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்..
மதுரை சொக்கன் உங்களுக்கு கொடுத்தார் என்றால் சென்னை பித்தன் எனக்குக் கொடுக்க வேண்டும் என்பதை பகிரங்கமாக அறிவித்துக் கொள்கிறேன் வாத்தியாரே...
Deleteபுதிது புதிதாக அறிவிப்புகள் வெளியிட்டுப் பதிவர்களை உற்சாகக் கடலில் மிதக்க விடுகிறீர்கள்!
ReplyDeleteத.ம.2
நிகழ்வின் தலைப்பே திருவிழா ஆயிற்றே..
Deleteகடல் சுனாமி என்று கடலிலேயே மையம் கொண்டிருக்கும் பித்தன் அவர்களை கடற்கரைக்கு வருமாறு தாழ்மையுடன் அழைக்கிறோம்
Deleteபலப் பல ஆச்சரியங்கள்... தினம் தினம் புதுப் புது தகவல்கள்... விழா மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி சார்... (TM 3)
ReplyDeleteஇன்னும் இருக்கிறது தோழரே..
Deleteரைட்டு.
ReplyDeleteஅப்புறமென்ன தலைவரே..
Deleteபழம் எனக்குத்தான் :)
ReplyDeleteநம்பிக்கைதான் தோழரே வாழ்க்கை..
Deleteசொக்கா எனக்கில்லை எனக்கில்லை...
ReplyDeleteஉங்களுக்காகவும் இருக்கலாம்..
Deleteஇன்ப அதிர்ச்சி ..............
ReplyDeleteநிச்சயமாக
Deleteபதிவைத்தான் எல்லாரும் கட் காபி பேஸ்ட் பண்ணுவாங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, பதிவை படிக்கும்போது இந்த கமெண்ட் போடலாம்ன்னு நினைச்சுக்கிட்டே வந்தேன். என் மனசுல இருக்குற கமெண்டை அப்படியே காபி பேஸ்ட் பண்ணிட்டார் கணேஷ் அண்ணா. கணேஷ் அண்ணாவை வன்மையாக கண்டிக்கிறேன்.
ReplyDeleteவி ஆர் ஸேம் பிளட்! ஹி... ஹி...
Deleteநான் பதிலை சொல்றதுக்கு முன்னாடி தல வந்துட்டாரே..
Delete100000 எனக்கே எனக்கா ?
ReplyDeleteஉங்களுக்காகவும் இருக்கலாம்..
Deleteதினம் ஒரு அறிவிப்பா?
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஆமாம் தோழரே..
Deleteதினம் தினம் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறீர்களே! இன்னும் என்ன அறிவிப்பு தர இருக்கிறீர்கள் என ஆவலுடன் காத்து இருக்கிறேன்.
ReplyDeleteஇன்னும் சிறப்பான அறிவிப்புகள் இருக்கிறதய்யா..
Deleteபாஸ் ..நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்ப்பாடு செய்ங்க...
ReplyDeleteசெல்வின் கிட்ட கேளுங்க.
இது குறித்து அனுபவ மிக்க எனது நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்
Deleteதோழரே..செல்வினடமும் ஆலோசிக்கிறேன்..
ம்ம்ம்...கலக்கு[ கிறீ ]கிறார்கள் !
ReplyDeleteகலக்குறீர்கள் என்பதை விட கலக்குறார்கள் என்றே சொல்லலாம்..
Deleteபுதுமைகள் பல காத்திருக்கு போல..
ReplyDeleteவரவேற்கிறேன் நண்பரே...
தினம் தினம் புதுப் புது தகவல்கள்...
ReplyDelete"எங்கள வச்சு காமடி கீமெடி பண்ணலையே!"
ReplyDeleteமதுமதி சார் அப்படில்லாம் பண்ண மாட்டாரே! சூப்பர் சார்! அசத்துங்க!
தோழர்... அடுத்த விபரம் எப்போது வெளிவரும்?...
ReplyDeleteஆர்வம் மிக்க பதிவர்கள்
Arumaiyana thakaval
ReplyDeleteappudiyaaaa....
ReplyDeleteஅட
ReplyDeleteதினம் தினம் புது செய்திகள் திணறடிக்கிறது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
மனம் திருந்திய சதீஷ்
அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!
http://thalirssb.blogspot.in
பதிவர்கள் நலன் குறித்து மக்கள் சந்தை தளம் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது.... அறிய ஆவலுடன் உள்ளேன்... யார் வெற்றி பெற்றாலும் ட்ரீட் வைக்க மறந்த்ராதீங்கப்பா.....
ReplyDeleteநல்ல முயற்சி ,வாழ்த்துக்கள் நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் பதிவர்களுக்கு பயன் தரும் நிகழ்வு
ReplyDeleteஅப்படி போடு.. போடு...
ReplyDeleteபுதுப்புது பதிவை வலையா போட்டுப்
புடிக்க பாக்குறீங்களா...?
இருந்தாலும் வாழ்த்தக்கள் நட்பே.
அட்ராசக்க அட்ராசக்க பரிசு மழையும் உண்டு...நிகழ்ச்சி சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா..
ReplyDeleteதயார்தான்.சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅந்தபதிவு எது ? என்று எனக்குமட்டும் கொஞ்சம்முன்பேகூறுங்களேன்.
ReplyDeleteநல்ல விசயம்தான் . மக்கள் சந்தை.காம் ஆச்சரியத்தை கொடுக்கவிருக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇது ஒரு நல்ல முயற்சி ,நீங்கள் எடுத்த இந்த முயற்ச்சியும் வெற்றி வாகை சூடட்டும்
ReplyDelete