வணக்கம் தோழமைகளே.. சென்னை பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க தயாராகிக் கொண்டிருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.
ஆரம்பத்தில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்த பல பதிவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்..கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட பதிவர்கள் இதுவரை சந்திப்பிற்கு வருவதாக உறுதி படுத்தியிருக்கிறார்கள்.
ஏனைய பதிவர்கள் விழாவிற்கு வருவதாக இருந்தால் கீழ்க்கண்ட அலைபேசி எண்களிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தங்களின் வருகையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்..
இந்தச் சந்திப்பை மிகவும் சிறப்பான நிகழ்வாக மாற்ற திட்டமிட்ட செயல்பட்டு வருகிறோம்.இதற்காக வாராவாரம் ஞாயிற்றுக் கிழமை மாலை வேளையில் சென்னையில் (சந்திப்பில் கலந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் பதிவர்கள்)இருக்கும் பதிவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகிறோம்.
அதன்படி எப்படியெல்லாம் செயல்படுவது என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.
விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நிகழ்த்த இருப்பதால் சென்னை பதிவர்கள் பொருளாதாரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள்.இது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.இது கட்டாயம் அல்ல.பொருளாதாரத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்பும் சென்னை பதிவர்கள் கீழ்க்கண்ட எண்களிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வெளியூரில் இருந்து வருகை தரும் தோழர்கள் எங்களுக்கு முன்கூட்டியே சென்னை வரும் நேரத்தை குறிப்பிட்டு சொன்னால் தங்குவதற்கு இடம் தயார் செய்யப்படும். வெளியூர் தோழர்களுக்கு உபயோகப்படும் வகையில் சனி இரவு ஆறு மணியிலிருந்து ஞாயிறு காலை 9 மணிவரைக்கும் அறை ஏற்பாடு செய்யப்படும்.
ஒரு நாள் முழுவதும் விழா நடக்க இருப்பதால் மதிய உணவு வழங்கவும் மற்ற வசதிகள் செய்யவும் ஏற்பாடாகி வருகிறது.எனவே சந்திப்பிற்கு வரும் தோழர்கள் முன்கூட்டியே தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இதுவரை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் நான், மெட்ராஸ் பவன் சிவக்குமார், வீடு திரும்பல் மோகன்குமார், மின்னல் வரிகள் பாலகணேஷ், கவிதை வீதி சௌந்தர், பட்டிக்காட்டான் பட்டிணத்தில் ஜெயக்குமார், கரைசேரா அலை அரசன், தென்றல் சசிகலா, டி.என்.முரளிதரன், புலவர் இராமானுசம், கேபிள் சங்கர், ஆரூர் மூனா செந்தில், பிலாசபி பிரபாகரன், அஞ்சாசிங்கம் செல்வின், டீக்கடை சிராஜுதீன் போன்றோர் கலந்து கொண்டோம்.
உடல் நிலை சரியில்லாததால் சென்னைபித்தன் ஐயா கலந்து கொள்ளவில்லை.
உடல் நிலை சரியில்லாததால் சென்னைபித்தன் ஐயா கலந்து கொள்ளவில்லை.
சென்ற வாரம் நடந்த 12.08.2012 ஆலோசனைக்கூட்டத்தில் உண்மைத்தமிழன், நான், பட்டிக்காட்டான் பட்டிணத்தில் ஜெயக்குமார், மெட்ராஸ் பவன் சிவக்குமார், கரைசேரா அலை அரசன், புலவர் இராமானுசம், டீக்கடை சிராஜுதீன், ரஹீம் கஸாலி, திடம் கொண்டு போராடு சீனு போன்றோர்கள் கூடி சில முக்கிய முடிவுகளை எடுத்தோம்.இது பற்றி வருகின்ற பதிவுகளில் தெரியப்படுத்துகிறோம்..
பால கணேஷ்,ஜெயக்குமார்,உண்மைத்தமிழன்,,புலவர்,அரசன்,வேடியப்பன்,மதுமதி |
கஸாலி,சீனு,அரசன் |
சிவக்குமார்.சிராஜ்,ஜெயக்குமார் |
ஜெயக்குமார்,உண்மைத்தமிழன்,புலவர், |
முக்கிய குறிப்பு:
இந்த மாபெரும் பதிவர் திருவிழாவை நடத்துவது சென்னை பதிவர் குழுமம் அல்ல என்பதை தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறோம். இதுவரை சென்னை பதிவர் குழுமம் என்று ஒன்றை ஏற்படுத்தவில்லை. இந்த விழாவை நடத்துவது "தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்" என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்..
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
மதுமதி - 9894124021
ஜெயக்குமார் - 9094969686
பால கணேஷ் - 7305836166
மெட்ராஸ்பவன் - 9841611301
மின்னஞ்சல் முகவரி:
kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com
இந்த ஞாயிறு கூட்டத்துக்கு வர முயல்கிறேன்
ReplyDeleteவாருங்கள்..
Deleteநான்காவது படத்தில் குறட்டை விடும் டீக்கடை ஓனர் சிராஜை 26 ஆம் தேதி காலை மறக்காமல் எழுப்பி விடவும்.
ReplyDeleteஒருவேளை மறந்துவிட்டால் ஞாபகப்படுத்தவும்..
Deleteதகவலுக்கு மிக்க நன்றி சார்... (TM 4)
ReplyDeleteவார்த்தைகளை ஹைலைட் செய்யும் போது அதற்க்கு கொடுக்கப்படும் வண்ணத்தில் சற்று கவனம் வையுங்கள்! சில நேரங்களில் சில விசயங்களை படிக்க முடிவதில்லை! புரிதலுக்கு நன்றி (TM 5)
ReplyDeleteமாற்றிவிட்டேன் நன்றி..
Delete‘சுடச்சுட’ தகவல்களைத் தந்து பதிவர் சந்திப்பு பற்றிய ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளீர்கள்.சந்திப்பை சிறப்பாக நடத்த,சிரமம் பாராது திட்டமிட்டுக்கொண்டு இருக்கின்ற விழாக் குழுவினருக்கு கோடானுகோடி நன்றிகள்! ஆகஸ்ட் 26ஐ ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅதே ஆவல் எங்களுக்கும்.
Deleteநடனசபாபதிசார் உங்கள் email ID அனுப்பவும் , pattikattaan@gmail.com
Deleteஆர்வத்துடன் வாரந்தோறும் கலந்து கொண்டு விழாக்காண ஏற்பாடுகளை செய்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅனைவரின் முயற்சியுடனும்,பங்களிப்புடனும்,விழா நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுப்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறதுவழ்த்துகள் ,
ReplyDeleteத.ம.6
ReplyDeleteBest wishes....
ReplyDeletesivaparkavi
http://sivaparkavi.wordpress.com/
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
இணைந்து கலக்குவோம் .. விழா களை கட்டுகிறது
ReplyDeleteஅரசன் உங்கள் மெயில் ஐடி அனுப்பவும் pattikattaan@gmail.com
Deleteவாழ்த்துக்கள்! சிறப்பான திருவிழா வெற்றி பெறட்டும்!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
http://thalirssb.blogspot.in/2012/08/17.html
தகவலுக்கு மிக்க நன்றி
ReplyDeletetha.ma 13
ReplyDeleteபட்டிகாட்டானை நேரா உக்காரச் சொல்லுங்கப்பா, பைசா கோபுரம் மாதிரி கோனையா உக்காந்திருக்கான்...
ReplyDeleteரம்ஜான் இருப்பதால் இந்த வாரம் கலந்துகொள்ள முடியாது. சிரமத்திற்கு மன்னிக்கவும்
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள். தளத்தின் பின்னனி நிறம் கறுப்பில் இருப்பது படிப்பவர்களுக்கு அசௌகரியத்தை உண்டாக்கும். வெள்ளையோ அல்லது வெளிர் நிறங்களோ தான் நல்லது.
ReplyDeletevaazhthukkal!
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteநாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை பொறுப்போடு நீங்கள் செய்கின்றீர்கள்! எனது மனமார்ந்த நன்றியும்,வாழ்த்துகளும்.
ReplyDeleteஅயல்நாடு செல்ல இருப்பதால் பங்குபெற முடியாத நிலை. மன்னிக்கவும்.
சென்னையில் நடைபெற உள்ள பதிவர்கள் சந்திப்புத் திருவிழா வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள். அன்புடன் vgk
ReplyDelete