சென்னை: தமிழகம் முழுவதும் 114 மையங்களில் குரூப்-2 தேர்வுகள் வரும் 12-ம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த சார் நிலை பணியில் 3,631 பேரை தேர்வு செய்வதற்கான (குருப் 2) அறிவிப்பு, கடந்த ஜூன் 13-ம் தேதி வெளியிட்டது. சப்&ரிஜிஸ்டிரர் (52), நகராட்சி ஆணையர் (14), உதவிப் பிரிவு அலுவலர் (12), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (3), முதுநிலை ஆய்வாளர் (181), கண்காணிப்பாளர்/ இளநிலை கண்காணிப்பாளர் (162), இளநிலை கூட்டுறவு தணிக்கையர் (229), வருவாய் உதவியாளர் (380) உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு நடக்கிறது.
இந்த தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 13-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு, வரும் 12&ம் தேதி நடக்கிறது. மொத்தம் 114 மையங்களில் 3,456 தேர்வு கூடங்களில் தேர்வு நடக்கிறது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in, www. tnpscexams.net ல் இருந்து பதவிறக்கம் (டவுன்லோடு) செய்து பெற்று கொள்ளலாம்.
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அன்புடன்
தொடரட்டும் உங்கள் நற்பணி
ReplyDeleteமிக்க நன்றி!
ReplyDelete