வணக்கம் பதிவர்களே!சென்னையில் நாமெல்லாம் ஒன்று கூடி சந்தித்து பேசி மகிழ இன்னும் இரண்டு வாரங்களே இருக்கிறது.ஊர்,இனம்,மதம்,புதிய பதிவர்,பிரபல பதிவர் போன்ற பிரிவினையைத்தாண்டி நாமெல்லாம் தமிழ் வலைப்பதிவர் என்ற முறையில் சென்னையில் சந்தித்து பேசி மகிழலாம் என்ற நோக்கோடுதான் சென்னையில் பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் ஆகஸ்டு மாதம் 19 ம் தேதி பதிவர் சந்திப்பு நடத்தலாமென முடிவு செய்யப்பட்டிருந்து .அந்நாளில் ரம்ஜான் பண்டிகை வருவதால் இசுலாமியத் தோழமைகளும் கலந்து கொள்ளும் வண்ணம் ஆகஸ்டு 26 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
முதலில் நாம் சந்திக்கும் இடமாக மாணவர் மன்றத்தை தேர்வு செய்திருந்தோம்.ஆனால் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட பதிவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் பதிவர்களின் வசதி குறித்து மாற்று இடம் குறித்த தேடல் அவசியம் ஆனது.
இதற்கு முன்னதாக 29.7.2012 ஞாயிறு சென்னை கே.கே.நகரிலுள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் முதற்கட்ட ஆலோசனை நடத்தினோம்.அதில் தேதி மாற்றத்தை குறித்தும் மாற்றிடம் தேடுவது குறித்தும் சந்திப்பை பெரிய அளவில் நடத்துவது குறித்தும் ஆலோசனை எடுக்கப்பட்டது.
இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் 5.8.2012 ஞாயிறு டிஸ்கவரி புத்தக நிலையத்திலேயே நடந்தது.அதில் ஒன்று கூடி சந்திப்பு நடக்ககூடிய இடத்தை முடிவு செய்தோம்.
பொருளாதார பிரச்சனையை எப்படி கையாளுவது என்பதை குறித்தும் நல்ல முடிவுக்கு வந்தோம்.சென்னை பதிவர் அனைவரும் பங்கிட்டு கொள்வதாக உறுதி எடுத்துக் கொண்டோம்.
இதற்கிடையில் வெளியூர் பதிவர்கள் தங்கும் இடம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மூத்த பதிவர்களுக்கான பாராட்டுவிழா குறித்து பேசப்பட்டது.யாரெல்லாம் மூத்த பதிவர் என வரையறுக்கப்பட்டது.முடிவில் 60 வயதை தாண்டி பதிவெழுதிக் கொண்டிருக்கும் பதிவர்களே மூத்த பதிவர்கள் என முடிவு செய்யப்பட்டது.
விழாவிற்கு வருகைதரும்படி மூத்த பதிவர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
வெளியூரில் இருந்து வருகை தரும் தோழர்கள் எங்களுக்கு முன்கூட்டியே சென்னை வரும் நேரத்தை குறிப்பிட்டு சொன்னால் தங்குவதற்கு இடம் தயார் செய்யப்படும்
வெளியூர் தோழர்களுக்கு உபயோகப்படும் வகையில் சனி இரவு ஆறு மணியிலிருந்து ஞாயிறு காலை 9 மணிவரைக்கும் அறை ஏற்பாடு செய்யப்படும்.
ஒரு நாள் முழுவதும் விழா நடக்க இருப்பதால் மதிய உணவு வழங்கவும் மற்ற வசதிகள் செய்யவும் ஏற்பாடாகி வருகிறது.எனவே சந்திப்பிற்கு வரும் தோழர்கள் முன்கூட்டியே தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
விழாவிற்கான அழைப்பிதழும் நிகழ்ச்சி நிரலும் வரும் இரண்டொரு நாளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்..
நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் நான், மெட்ராஸ் பவன் சிவக்குமார், வீடு திரும்பல் மோகன்குமார், மின்னல் வரிகள் பாலகணேஷ், கவிதை வீதி சௌந்தர், பட்டிக்காட்டான் பட்டிணத்தில் ஜெயக்குமார், கரைசேரா அலை அரசன், தென்றல் சசிகலா, டி.என்.முரளிதரன், புலவர் இராமானுசம், கேபிள் சங்கர், ஆரூர் மூனா செந்தில், பிலாசபி பிரபாகரன், அஞ்சாசிங்கம் செல்வின், டீக்கடை சிராஜுதீன் போன்றோர் கலந்து கொண்டோம்.
உடல் நிலை சரியில்லாததால் சென்னைபித்தன் ஐயா கலந்து கொள்ளவில்லை.

வெளியூரில் இருப்பவர்கள் பார்த்து ரசிக்கும் வண்ணம் புகைப்படங்களுடன் வெளியிட்டது அழகு. (ஒவ்வொண்ணுக்கும கீழ கமெண்ட் குடுத்திருக்கலாம்ல கவிஞரே...) ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு கொண்ட அனைவரின் ஆர்வமும் உற்சாகமும் மறக்க இயலாதது. இளைஞனான என்னை சின்னப் பையனாவே ஆக்கிடுச்சே! ஹி... ஹி...
ReplyDelete//இளைஞனான என்னை சின்னப் பையனாவே ஆக்கிடுச்சே! ஹி... ஹி...//
Deleteஹி ஹி ஹி
சீனு சிரிக்கிற சத்தம் கேட்குதா..
Deleteமிகச் சிறப்பாக சந்திப்பு நடைபெறும் என்பதை
ReplyDeleteசென்னைப் பதிவர்களின் திட்டமிட்ட செயல்பாடுகள்
உறுதி செய்து போகிறது
நாங்கள் பங்கு கொள்ள கிடைக்கும் வாய்ப்பை
ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறோம்
பகிர்வுக்கு நன்றி.
விழா சிறக்க வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்கு நன்றி..
Deletetha.ma 3
ReplyDeleteஆரம்பக் கட்டங்களைக் கேட்கவே அருமையாய் உள்ளது மிகவும் ஆவலாய்...
ReplyDeleteஎங்கே இருக்கிறீர்கள் சீனு தொடர்பில் வாருங்கள்..
Deleteசிறப்பான முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteநான் இருபதோ ஹைதரபாத்...என்னால் வர முடியுமா என்று தெரியல சார்..வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாய் வருகிறேன்..
ReplyDeleteசிறப்பாக அமையும்... சந்தேகமில்லை... வாழ்த்துக்கள்... நன்றி... (TM 7)
ReplyDeleteவர இயலாமல் போனது வருத்தமாக இருக்கிறது. உங்கள் விரிவான பகிர்வும் ,படங்களும் ஆறுதல்.
ReplyDeleteதகவல் தெரிந்துகொண்டேன்.
ReplyDeleteநன்றி.
வாழ்த்துக்கள்.
//முடிவில் 60 வயதை தாண்டி பதிவெழுதிக் கொண்டிருக்கும் பதிவர்களே மூத்த பதிவர்கள் என முடிவு செய்யப்பட்டது.//
ReplyDeleteஇது என்னங்க நியாயம்? 60 வயசு சின்னப் பசங்களையெல்லாம் மூத்த பதிவர்னு சொல்றது சரியாப் படலீங்க.
உங்கள் அனைவரது முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே..
ReplyDeleteநன்றி அனைவரின் ஒத்துழைப்புடன் விழா சிறப்பாக நடக்கும் என நம்புகிறேன்
ReplyDeleteசிராஜுதீன் போட்டோல ஹீரோ மாதிரி இருக்காரே.
ReplyDeleteஇச்சந்திப்பில் அதிகம் பேசி பல்வேறு ஆலோசனைகள் தந்த பிரபாகரனை 'தனியாக' கவனிக்குமாறு விழாக்குழுவை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்!!
ReplyDeleteஆறாவது போட்டோவில் அசந்து தூங்கும் ஆரூர்.முனாவை 26 ஆம் தேதி மறக்காமல் எழுப்பி விடவும்.
ReplyDeleteஎல்லாருக்கும் எனது வாழ்த்துகள், பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துகள் கவிஞரே...!
ReplyDeleteசிறப்பான சந்திப்பு இடம்பெற எனது வாழ்த்துக்கள்.திட்டமிட்ட நிகழ்வு,நிச்சயம் சிறப்பாக அமையும்.அடுத்த பதிவில் சந்திப்போம்.
ReplyDeleteபதிவர் சந்திப்பிற்காக முயற்சி எடுத்து, எல்லாவற்றையும் திட்டமிட்டு நடத்திக்கொண்டு இருக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி! விழாவில் கலந்துகொள்ள, விழா நாளை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன். பதிவர் சந்திப்பின் ஆலோசனைக்கூட்டம் பற்றி விரிவாக புகைப்படங்களோடு வெளியிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! விழா இனிதாக நடைபெற வாழ்த்துக்கள்!.
ReplyDeleteபடமும் தொகுப்பும் அருமை
ReplyDeleteசா இராமாநுசம்
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் பாஸ்
ReplyDeleteநல்லதொரு குழு அமைப்பு மகிழ்ச்சி எழுத்துக்கு கிடைத்த மரியாதை என கொள்ளுகிறேன் ....வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் ......தமிழின் பெருமை உலகறிய செய்யுங்கள்
ReplyDeleteநல்லது..
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபொடியனையும் உங்களோடு சேர்த்து கொண்டமைக்கு என் நன்றிகள் சார்
ReplyDelete