'உண்மை' இதழில் நான் எழுதும் 'ஈரோட்டுச் சூரியன்' தொடர் ஆரம்பம்
வணக்கம் தோழமைகளே.. நேற்றைய பதிவில் பின்னூட்டங்களின் வாயிலாகவும் மின் அஞ்சல் வாயிலாகவும் அலைபேசி வாயிலாகவும் திருமண நாள் வாழ்த்துகளைச் சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
இன்றைய பதிவின் மூலம் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்.நம் தளத்தில் "ஈரோட்டுச் சூரியன்" எனும் தொடரை ஆரம்பித்து அதிலே புதுக்கவிதை வாயிலாக வெண்தாடி வேந்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுத ஆரம்பித்தேன்.இரண்டு அத்தியாயங்களை எழுதியதோடு அந்த தொடரை தொடர்ந்து எழுதவில்லை.அந்தொடரை மிகவும் ரசித்து வாசித்த தோழர்கள் ஏன் தொடரை நிறுத்திவிட்டீர்கள் தொடர்ந்து எழுதலாமே என கேட்டு வந்தனர்.
அந்த தொடரை தொடர்ந்து வலையில் எழுதாமல் போனதிற்கான காரணத்தை சொல்லி விடுகிறேன்.ஆமாம் தோழர்களே வலைப்பக்கத்தில் எழுத ஆரம்பித்த ''ஈரோட்டுச் சூரியன்" தொடரை ஈரோட்டுச் சூரியனால் ஏற்படுத்தப்பட்டு மாதமிருமுறை வெளியாகும் "உண்மை" இதழில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
இதில் உச்சக்கட்ட மகிழ்ச்சி என்னவென்றால் ஐயாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'உண்மை' யில் தொடரின் முதல் அத்தியாயம் வெளியாகியிருப்பதுதான்.மாதம் இரண்டு முறை வெளியாகும் இந்த இதழில் இந்தத் தொடர் "புதுக்கவிதையில் புரட்சிக்காரரின் வாழ்க்கை வரலாறு"
என்னும் பகுதியில் "ஈரோட்டுச் சூரியன்" என்னும் தலைப்பில் தொடர்ந்து வெளியாகும்.இந்தத் தொடரின் முதல் அத்தியாயமான 'அம்மையும் அப்பனும்' பகுதியை புத்தகம் வாயிலாக வாசிக்க இயலாத தோழமைகள் இங்கே சுட்டி மின்னிதழ் வாயிலாக வாசிக்கலாம்.
வேங்கட நாயக்கர்
நல்ல காளை;
செய்ததென்னவோ
நல்ல காளை;
செய்ததென்னவோ
தச்சனுக்கு கையாள் வேலை;
சின்னத்தாயம்மைக்கு
கல் சுமக்கும் வேலை;
அம்மைக்கு ஓரணா
அவருக்கு ஈரணா
இதுதான் கூலி;
இருவரும் யோசித்தனர்
ஓர் நாழி;
சேர்த்த செல்வத்தில்
மாட்டுவண்டி வாங்கினர்..
மாடுகள் வாங்கி பூட்டினர்;
வாடகைக்கு ஓட்டினர்;
வருவாய் உயர்ந்தது..
இருவாய் மலர்ந்தது;
இன்னுமோர் விடியல்
புலர்ந்தது;
மாடுகளை விற்றனர்;
மளிகைக் கடை பெற்றனர்;
ஆள் வைத்து நெல் குத்தி
அரிசிக் கடை ஆரம்பம்;
அக்கடை கொடுத்தது
பேரின்பம்;
பெரியாரின் பெற்றோர் (வெங்கட நாயக்கர்-சின்னத்தாயம்மை) |
உழைத்ததை
உள்ளூர் வாரச்சந்தைக்கு
கொண்டுபோய் சேர்க்க
உழைப்பு இவர்களை
செல்வத்திடம்
கொண்டு போய் சேர்த்தது;
தாயம்மை
சுத்தமாக பொருளைச் செய்தது
நாயக்கர்
மொத்தமாக விற்பனை செய்தது
மளிகைக் கடையை
மண்டிக்கடையாக்கியது..
தினக்கூலி
வண்டிக்காரனாகி
மளிகைக் கடைத் திறந்து
பின்னதைத் துறந்து
மண்டிக்கடைத் தொடங்க,
செல்வம் நீராய் ஊறின;
இருவர் தம் வாழ்க்கை
மாறின;
உழைப்பாலே
உயர்ந்தோம் என்று
உணராமல்
திருமாலே உயர்த்தினார்
என்றுதான் நம்பினர்..
பெரியாரின் தந்தை (வெங்கட நாயக்கர்) |
வைணவ பக்தி
இருவரையும் ஆட்கொண்டது..
திருமாலிடம் உருகினர்;
பக்தியைப் பருகினர்;
இருவருக்கும் எழுந்தது
அறம் புரியும் எண்ணம்;
தினம் புரியும் வண்ணம்;
திருப் பணியெனக் கருதி
ஒரு பணியென செய்தனர்..
தாயம்மை தாயானார்..
குழந்தைகள்
இரண்டு பிறந்தன;
இடைவெளி விட்டு
இரண்டும் இறந்தன;
இன்பத்தை
தொலைத்தனர்;
துன்பத்தில்
திளைத்தனர்;
பத்துவருட காலம்
வாரிசுக்கான வாசல்
திறந்திடவில்லை;
மனமது வருத்தப்பட
மறந்திடவில்லை;
இருவர் தம் மனதில்
எழுந்தன துயரம்;அது
ஏழு பனை மர உயரம்;
பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மை |
பாகவதர்களுக்கு
பணிவிடை செய்தும் பலனில்லை;
ராமாயணங்கேட்டும் பயனில்லை;
திருமாலை
திருநாளாய்க் கொண்டாடியும்
தினமும் விரதமிருந்தும்
தாயம்மை தாயாகவில்லை..
இறைவனிடம் வேண்டினால்
குழந்தை பிறக்கும் என்பது
மூடத்தனமென்று எடுத்துச் சொல்ல
அப்போது அங்கே யாருமில்லை..
தாயம்மை என்பது
பேருக்கு மட்டும்தானா..
உண்மையாகாதா..
ஏக்கம் அவரை
அரவணைத்தது..
துன்பம் துணக்கு வந்தது..
அடுத்த ஆண்டிலேயே
அழகிய ஆண் குழந்தையை
தாயம்மை ஈன்றெடுக்க
ஈரோடே இனித்துப் போனது;
அக் குழந்தையின் பெயர்
கிருஷ்ணசாமி என்று ஆனது;
அக் குழந்தையின் பெயர்
கிருஷ்ணசாமி என்று ஆனது;
---------------------------------------
(ஈரோட்டு சூரியன் உதிக்கும்)மகிழ்ச்சியுடன்
வாழ்த்துகள். தொடருங்கள் தங்கள் பணியை.
ReplyDeleteமகிழ்ச்சி சகோ..
Deleteவாழ்த்துக்கள் தோழரே
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தோழரே....
ReplyDeleteமிக்க நன்றி தோழரே..
Deleteமிக்க மகிழ்ச்சி
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் சார்
கண்டிப்பாக தோழரே..
Deleteநேற்று திருமண வாழ்த்துக்கள் இன்று தொடருக்கான வாழ்த்துக்கள். சீக்கிரத்தில் மிகச் சிறந்த பாடல்களைத் தரும் பாடலாசிரியாகவும் வர வாழ்த்துக்கள்
ReplyDeleteமகிழ்ச்சி தோழர்..மிக்க நன்றி..
Deleteபுதிய தொடருக்கு வாழ்த்துகள் !
ReplyDeleteஅப்புறம் ...கவிஞரே : உங்கள் போட்டோ குமுதம் இதழில் பார்த்தேன். மற்ற கவிஞர்களுடன் சேர்ந்து எடுத்தது மிக மகிழ்ச்சி
அப்படியா பார்த்தீர்களா?மகிழ்ச்சி..
Deleteவாழ்த்துகள் கவிஞரே!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா..
Deleteமிகவும் சிறப்பான மகிழ்வு தரும் செய்தி வாழ்த்துக்கள் தொடருங்கள்.
ReplyDeleteமதுமதி,
ReplyDeleteஉங்கள் சமுதாயத் தொண்டுக்கு எனது வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் நண்பரே! உங்கள் பயணம் தொடரட்டும் இனிமையாக!
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteஅன்பின் மதுமதி - உண்மை இதழில் ஈரோட்டுச் சூரியன் தொடரால வெளி வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதாங்கள் கொண்ட மகிழ்ச்சிக்கும் தாங்கள் தந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா..
Deleteதொடரட்டும் அண்ணா உங்கள் எழுத்துப் பணி..........
ReplyDeleteவாழ்த்துகள் தோழர். அய்யாவின் வரலாறு எல்லா வடிவங்களிலும் தமிழர்களை அடையவேண்டும். முதன்முதலாக தந்தை பெரியாரை நான் காமிக்ஸ் வடிவில் வாசித்தேன். அய்யாவின் நூற்றாண்டு விழாவுக்கு தமிழக அரசு குழந்தைகளுக்காக வெளியிட்டிருந்த நூல் அது. புதுக்கவிதை வடிவில் அவரது வரலாறு எழுதப்படுவது அவசியமான பணி. மீண்டும் வாழ்த்துகிறேன்.
ReplyDelete//அய்யாவின் வரலாறு எல்லா வடிவங்களிலும் தமிழர்களை அடையவேண்டும்.//
ReplyDeleteநிச்சயம் தோழரே..இன்றைய தலைமுறை ஐயாவைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடுதான் இதை ஆரம்பித்திருக்கிறேன்.உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி..
நன்றி..
ReplyDeleteவாழ்த்துகள்.....
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
வாழ்த்துக்கள் சார்..
ReplyDelete
ReplyDeleteபகலவனின் பாதையை
பாமரரும் தொடர
இகலோகம் வாழ்விக்க
இன்னலுற்ற ஈவெரா க்கு
புகழாரம் சூட்டியே
பாதை தொடருவோம்