வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலை போட்டு படுத்தபடி காற்று வாங்கிக் கொண்டிருந்தான் சின்ராசு.
"மாமா.. மாமோவ்"
அழைத்துக்கொண்டே அவன் அருகில் வந்தாள் அம்மணி.
ஏ..அம்மணி டி.வி பாக்குலயா அதுக்குள்ள வந்துட்டே..மணி என்னாச்சு சரவணன் மீனாட்சி முடிஞ்சிடுச்சா?
"அது இன்னும் முடியலீங் மாமா..ஓடிட்டுதான் இருக்குது"
சொன்னவளை ஆச்சர்யமாக பார்த்த சின்ராசு,
"என்ன அம்மணி.. ஆஹா பிரமாதம் பிரமாதம்ன்னு சொல்லி, சரவணனும் அவுங்க அப்பாவும் பண்ற லூட்டிய ரசிச்சு பாப்பியே என்னாச்சு"
"ஆமாங் மாமா..எந்த டிவியில சீரியல் பாத்தாலும் ஒரே அழுகாச்சின்னு விஜய் டிவி பக்கம் வந்தேன்.அங்கப் பாத்தா இந்த சரவணன் மீனாட்சி ஓடிட்டு இருந்துச்சி.எல்லா டிவி யில வர்ற சீரியல் மாதிரி இல்லாம..இது புதுசாவும் வித்தியாசமாவும் சினிமா மாதிரி இருந்துச்சு.நல்லா ஜாலியா சரவணனும் அவுங்க அப்பாவும் பண்ற கூத்தும்,சரவணனும் மீனாட்சியும் பண்ற காதலும் நல்லாத்தான் ரசிக்கிற மாதிரி இருந்துச்சு"
"அது சரி அம்மணி ..அதுதான் எனக்கே தெரியுமே..இப்ப ஏன் சீரியல் பாக்காம எந்திரிச்சு வந்தே"
"அதைத்தான் மாமா சொல்ல வரேன்..சரி ரெண்டு பேருக்கும் கண்ணாலம் ஆயிடுச்சுன்னா கதை முடிஞ்சிடும்.இந்த கண்ணாலம் எப்படி முடியும்ன்னு பாக்கலாம்ன்னு பாத்தா கடைசியில வேணுமின்னே சரவணனை அடிச்சு வெரட்டி நடுரோட்டுக்கு தொரத்தி விட்டுட்டாங்க..மீனாட்சி மண்டபத்துல மணவறையில உக்காந்திருக்கா..அப்புறம் என்னடான்னா சினிமாவுல காட்டுற மாதிரி கட் பண்ணினா கடைசியா சரவணைனை தேடி மீனாட்சி கார் எடுத்துட்டு வர்றா..'இன்னிசை பாடிவரும் இளங்காத்துக்கு உருவமில்லைன்னு சரவணன் பாட்டு மட்டும்தான் பாடலை.' சரி அவுங்களும் கதைய முடிக்கணுமில்லன்னு பாத்தா அவுங்க ரெண்டு பேருக்கும் கண்ணாலம் ஆகியும் கதையை முடிக்காம அவுங்க அக்காளுக்கும் இவங்க அண்ணனுக்கும் லிங்க கொடுத்து போலீஸ்காரனுக்கும் அந்த கருத்த புள்ளைக்கும் லிங்க கொடுத்து மத்த டிவிக்காரங்க மாதிரி மெகா சீரியலா இழுக்கலாமுன்னு ஆசைப் பட்டு சம்பந்தமில்லாம சவ்வு மிட்டாய் மாதிரி சீரியல இழுக்குறாங்க மாமா"
"அம்மணி.."
"இருங்க மாமா அதைத்தானே சொல்லிட்டு இருக்கேன்..சரி என்னமோ போன்னு நானும் இப்பவரைக்கும் பாத்துட்டுதான் இருந்தேன்.காமெடி கலாட்டான்னு இழுத்துக்கிட்டே போகுமுன்னு நெனச்சா..அவுங்க ரெண்டு பேருக்கும் முதலிரவு நடத்தற விசயத்தையே ஒரு மாசமா காட்டிட்டு இருக்கிறாங்க.எல்லோரும் உக்காந்து குடும்பத்தோட பாக்குற சீரியல் இதுவாத்தான் இருந்துச்சு..இந்த பத்து நாளா யாரும் குடும்பத்தோட உக்காந்து இந்த சீரியல பாத்திருக்க மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். பாக்கவும் முடியாது"
"ஏன் அம்மணி அப்படி என்ன ஆச்சு "
"என்னாச்சா..ஏனுங்மாமா காது காதும் வச்ச மாதிரி நடக்குற முதலிரவை இவுங்க ஏலம் போட்டு விக்கிறாங்க.சினிமாவுல கூட முதலிரவு விசயத்தை பட்டுன்னு சொல்லி படக்குன்னு கட் பண்ணிப்போடுறாங்க..ஆனா இவுங்க அதை மட்டுமே வச்சு ஒரு மாசத்தை ஓட்டுறாங்க.அப்பா அம்மாகிட்டயே மகன் முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்றான்.அப்பா அம்மா இருக்கும்போதே மகன் பொண்டாட்டிக்கிட்ட சில்மிஷத்தைக் காட்டுறான்.கேட்டா நகைச்சுவை காட்சிங்கிறாங்க.சர்வசாதாரணமா அம்மா மகன்கிட்ட உனக்கு இன்னைக்கு டீ தரமாட்டங்க போலங்கிற மாதிரி இன்னைக்கு முதலிரவு உனக்கு நடக்காது போலன்னு ரொம்ப அசால்ட்டா சொல்றாங்க..அப்பனும் மகனும் முதலிரவை பத்தி டிஸ்கஸ் பண்ணிக்கிறாங்க.எனக்கு முதலிரவு நடக்காததுக்கு காரணமே நீதான்னு அம்மாகிட்ட மகன் சண்டைக்கு போறான்.சரவணனும் மீனாட்சியும் பேசிக்கிறது சிணுங்கிறது எல்லாம் முதலிரவை பத்திதான்.இது போதாதுன்னு மீனாட்சியோட தாய் மாமனுங்க வந்து, எந்த வெக்கமும் படாம மீனாட்சிக்கிட்ட முதலிரவ நாளைக்கு வச்சுக்குங்கன்னு சொல்றாங்க..சரவணன்கிட்ட வந்து மீனாட்சியோட மாமா, மாப்பிளை உங்களுக்கு சிட்டுக்குருவி லேகியம் இருக்குன்னு சொல்றாங்க..என்னங் மாமா இது. காதும..குசுகுசுன்னு பேசி நடத்துற விசேசத்தை இப்படி கூப்பாடு போட்டா செய்வாங்க.. இந்த சீரியல மாமனார், மருமக, அண்ணன், தங்கச்சின்னு எல்லாம் குடும்பத்தோடதான பாத்துட்டு இருக்காங்க..இப்படி வசனத்துக்கு வசனம் முதலிரவு முதலிரவுன்னு அவுங்க படுற வெட்கங்களையும் அவுங்க பண்ற சில்மிஷங்களையும் அதுக்கு தயாராகிற காட்சிகளையும் எப்படி மாமா ஒண்ணா உக்காந்து பாப்பாங்க.நல்ல சீரியல்லுன்னு நம்பிதான் எல்லாம் பாக்குறாங்க.எல்லாருடைய வீட்டுலயும் வயசுப்பொண்ணுங்க இருக்கு..எல்லாரும் இந்த சீரியல பாக்குறாங்க.. முதலிரவை சுத்தியே சீரியல் போனா பெத்தவங்களுக்கு புள்ளைங்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாதா.
என்ன கொடுமைன்னா நேத்தைக்கு சீன்ல எப்ப நமக்கு முதலிரவுன்னு உங்க மாமாக்கிட்ட கேளுன்னு சரவணன் மீனாட்சிக்கிட்ட சொல்ற மாதிரி சீனு. அதுக்கு அவ வெட்கப்பட அவுங்க மாமா கொஞ்சங்கூட கூச்சப்படாம நரி மாதிரி சிரிச்சுட்டு நாளைக்கு உங்களுக்கு முதலிரவுன்னு பல்லைக்காட்டுறார்.பக்கத்துல சரவணன் அம்மா குயிலியும் இருக்காங்க..எல்லா குடும்பத்துலயும் இப்படிதான் முதலிரவைப் பத்தி பேசிக்குவாங்களா?இதை எப்படி குடும்பத்தோட பாக்க முடியும்..பத்து வயசு பொண்ணுங்களையும் பசங்களையும் முதலிரவுன்னா என்னாங்கிற தேடலுக்கு ஆளாக்கிவிட்டுடுவாங்களோன்னு தோணுது.என்னாலயே அந்த மாதிரி வசனத்தையும் சரவணன் மீனாட்சியை சுத்தி சுத்தி வர்ற காட்சியையும் மீனாட்சி வெட்கப்படுறதையும் சகிச்சுக்க முடியலை மாமா..நம்ம பையனுக்கு பத்து வயசுதான் ஆகுது 'முதலிரவுன்னா என்னம்மா'ன்னு எங்கிட்ட கேட்கிறான்.அதனாலதான் டிவிய ஆப் பண்ணிப்போட்டு வந்துட்டேன்"
"எல்லாரும் உன்ன மாதிரிதான் யோசிப்பாங்கன்னு நெனைக்கிறியா அம்மணி"
"மாமா இது என்னோட தனிப்பட்ட கருத்துதான்.மத்தவங்க அதை ரசிச்சு கூட பாக்கலாம்"
"சரி அம்மணி உன் ஆதங்கம் புரியுது..நீ சொல்லியா சீனை மாத்திடப்போறாங்க"
"அவுங்க மாத்தினாலும் சரி மாத்தலைன்னாலும் சரி இனி அந்த சீரியலை நான் பாக்கறதா இல்லை.அப்படி பாக்கறதா இருந்தாலும் சரவணனுக்கும் மீனாட்சிக்கும் குழந்தை பிறந்ததுக்கு அப்புறந்தான் பாப்பேன்'
"அதுவரைக்கும் ஓடுங்கிறயா"
"அதான் மத்த டிவி சீரியலை பாத்து இவங்களும் ஒண்ணுமில்லாததையே ஒரு வாரம் காட்டுறாங்களே..இதை மெகா சீரியலாக்குறேன் பேர்வழின்னு இந்த சீரியலை சின்னாபின்னமா ஆக்காம விடமாட்டாங்குன்னு நினைக்கிறேன்."
என்று சொன்ன அம்மணி தலையில் அடித்துக்கொள்ள,
"அம்மா சூப்பர் சிங்கர் போட்டுட்டான்"
என்று அம்மணியின் மகன் முருகேசன் வீட்டிற்குள்ளிருந்தபடியே சத்தமிட ,
"வாங்க மாமா உங்களுக்கு புடிச்ச சூப்பர் சிங்கரு போட்டுட்டான் அதையாவது பாக்கலாம்"
சொல்லிவிட்டு அம்மணி நகர அவளை பின் தொடர்ந்தான் சின்ராசு.
நான் அந்த சீரியல் பார்ப்பதில்லை சேனல் மாற்றும்போது மீனாட்சி இருந்தால் சில நிமிடம் பார்பதோடு சரி :))
ReplyDeleteஅப்ப மீனாட்சிய மட்டும் பார்ப்பீங்க போல..
Deleteசித்தி தொடருக்குப்பின் எங்கள் இல்லத்தில் அனைத்து தொடர்களும் பார்ப்பதற்கு சுய தடை செய்துள்ளோம்! சினிமா..பாடல்கள்..செய்திகள்..விளையாட்டு இவை மட்டுமே காணலாம்!
ReplyDeleteஅனைவரும் இதை பின்பற்றலாமே!
அனைவரும் இதை பின்பற்றலாம் என்பதே என் கருத்தும்..
Deleteஅந்த சீரியல் பார்ப்பது இல்லை.. இயல்பாய் எடுக்கிறோம் என்று நம்மை போட்டுத் தாக்குகிறார்கள்...
ReplyDeleteஉண்மைதான் சீனு
Deleteஉண்மைதான் சரவணன்–மீனாட்சி தொடர் வயது வந்தோருக்கான தொடராக மாறிவிட்டது. அம்மணி சொல்வதுபோல் குடும்பத்தார் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பார்க்கும்படியாக இல்லை. இனி தொலைக்காட்சித் தொடர்களுக்கும் தணிக்கை கொண்டுவருவது அவசியம்.
ReplyDeleteஆமாம் ஐயா..
Deleteநல்லவேளை... நான் எந்த சீரியலையும் பார்ப்பதில்லை. அம்மணிதான் பாவமுங்கோ... ரொம்பவே நொந்து போயிருக்காங்கன்னு புரியுது... சீரியல்களுக்கும் சென்சார் தேவைதான் போலருக்கே...
ReplyDeleteஅம்மணி இனிமேல் பாக்க மாட்டேன்னு சொல்லியிருக்காங்க பார்ப்போம்..
Deleteஎனக்கும் சீரியல் பார்க்கும் பழக்கம் இல்லைங்க.
ReplyDeleteஅட்டே..ஆச்சர்யக்குறி..
Deleteஅம்மணியின் மனக்குமுறல் நியாயமானதுதான் ..
ReplyDeleteஎப்பவோ பார்த்த நினைவு இ ந்கில்லை ஊரில் இருக்கும்போது ஒரு சீரியலில் கருகலைப்பு என்றதன் ஆங்கில வார்த்தையை பத்து நிமிஷத்தில் இருபது தரமாது பயன்படுத்திருப்பாங்க
வளரும் பிள்ளைகளுக்கு clandestine /எக்ஸ்ட்ரா marital affair
மற்றும் polygamy blood shed murders /drugs இவற்றை நாமே வீட்டில் ஒளிபரப்பி கற்றுக்கொடுதுவிடக்கூடாது ..
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்.இதைப் போன்ற சில அன்றாட விஷயங்களால் நம்மை அறியாமலே நம் பிஞ்சுகளின் மனதில் விரும்பத்தகாத விஷயங்கள் புக காரணமாகிவிடுகிறோம்.
Deleteஎப்படி சார் இந்த தொடர் எல்லாம் (பொறுமையா) பார்க்கிறீங்க... !?
ReplyDeleteநான் பாக்கலை தலைவா..அம்மணி பாத்திருக்காங்க..
Deleteஆம் அன்பரே குடும்பத்தோடு பார்க்கையில் நெளிய வேண்டிருக்கு
ReplyDeleteசரியாச் சொன்னீங்க தோழரே..
ReplyDeleteஇசை நிகழ்ச்சிகள் தவிர எந்தத் தொடரையும் பார்ப்பதில்லை நாங்கள்! நேரமும் மிச்சம்! சிந்திக்கத் தூண்டும் பதிவு தோழரே!
ReplyDelete-காரஞ்ச்சன்(சேஷ்)
வெளிநாட்டில் இருப்பதால் இந்த தொல்லைகளிலிருந்து விடுதலை!
ReplyDeleteசெருப்பால அடிச்சா கூட நம்ம மக்கள் திருந்தாது. ஏதோ விஜய் தொ.கா பார்ப்பதால் தங்களை மேலோர் என நினைக்கின்றனர் இந்த கீழ்த்தரமான மாக்கள்.
ReplyDelete***என்ன கொடுமைன்னா நேத்தைக்கு சீன்ல எப்ப நமக்கு முதலிரவுன்னு உங்க மாமாக்கிட்ட கேளுன்னு சரவணன் மீனாட்சிக்கிட்ட சொல்ற மாதிரி சீனு. அதுக்கு அவ வெட்கப்பட அவுங்க மாமா கொஞ்சங்கூட கூச்சப்படாம நரி மாதிரி சிரிச்சுட்டு நாளைக்கு உங்களுக்கு முதலிரவுன்னு பல்லைக்காட்டுறார்.பக்கத்துல சரவணன் அம்மா குயிலியும் இருக்காங்க***
ReplyDeleteஎன்ன சொல்றது?
சீரியல் எடுக்கிறவனுக்கு வெவஸ்தை இல்லைனு சொல்லலாம்.
இல்லைனா அவன் எந்தமாரி குடும்பத்தில் இருந்து வந்தானோ? னு சொல்லலாம்..
ஒரு சீரியல் எடுத்தா, முடிக்க வேண்டிய நேரத்தில் வள வளனு இழுக்காமல் முடிக்கனும். பாப்புளர் ஆயிடுச்சுனு இழு இழுனு இழுத்தா இப்படித்தான் "இன்ஸெஸ்ட்"ல போயி முடியும்.
மேலும் படத்துல வர்ற அவங்க (ச-மீ ) குடும்பம் என்ன குடும்பமோ என்ன எழவோ, போங்க! (நம்ம குடும்பம் பழக்க வழக்கம்போல அவங்களுக்கு இருக்கனும்னு எதிர்பார்க்கூடாது பாருங்க! :) )
கேட்டால், இதுதான் கலாச்சார முன்னேற்றம்னு நம்மாளுக சொல்லுவானுக!
இதை விமர்சிச்சா, நீங்க கலாச்சாரக் காவலர் ஆயிடுவீங்க!
"ஆமா கேவலமா இருக்கு அந்த சீன்" னூ நான் பின்னூட்டம் இட்டால், "நீ ரொம்ப யோக்கியன் பாரு!" அப்படினு சொல்லுவானுக!
பிரச்சினை என்னனா, 18 + ஜோக் னு அம்மா மகளை வச்சு கேவலமா ஜோக் எழுதுறது! இங்கேதான் இவனுக லோ-க்ளாஸ்னு தெளிவா விளங்கும்! இவனுக என்ன குடும்பமோ, என்ன மாரி வளர்ந்தானுகளோ.. ஆமா ஆமா தமிழர்கள்தான்!!!
காதல், காமம் எல்லாம் சரிதான்..அதே இது ஒரு காதலன் - காதலி, கணவன் - மனைவி தனியாக இருக்கும்போது பேசுற மாரி "சூசகமாக" இருந்தால் பரவாயில்லை! குடும்பத்தை வச்சுக்கிட்டு கேவலமா ஜோக் அடிச்சுக்கிட்டு..ஆனால் இந்த மரமணடைகளுக்கு இது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. அம்மா - மகளை வச்சு கேவலமா ஜோக் எழுதுவான் - அதில் அசிங்கம் தெரியாமல். அதைப்பார்த்து நாலு அரைவேக்காடு கை தட்டுவான்! இதுதான் இன்றைய தமிழ்க் கலாச்சார முன்னேற்றம்!
அன்பின் மதுமதி - ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வது - மக்கள பார்ப்பதில்லை என முடிவெடுக்க் வேண்டும். ம்ம்ம்ம்ம்ம்ம் - வேறு வழி
ReplyDelete- நட்புடன் சீனா
நல்ல வேளை நான் இந்த சீரியல் பார்ப்பதில்லை....
ReplyDeleteஅம்மணிதான் பாவம் அண்ணா.........
இதைப் பத்தி நானும் எழுதிப் புலம்பலாம்னு இருந்தேன்... ரொம்ப அசிங்கமா இருக்கு இப்ப அவங்க பண்ற முதலிரவு அழிச்சாட்டியங்கள்...
ReplyDeleteசரவணன் கதாபாத்திரம் ரொம்ப நல்லாயிருந்துச்சு முதலில்...இப்ப என்னமோ அந்தப் பையந்தான் இந்த சீரியலின் காமெடிப் பீசாக்கிட்டாய்ங்க...
மீனாட்சி பேசுற பேச்செல்லாம் கேட்டா, நமக்கு பிபி எகிறி உடல் நலம் கெட்டுடும் போல... :-)))
இப்ப நாங்களும் பார்க்கிறதில்லை...
க்ரேட் நரேஷன்...
ReplyDeleteஎந்த தொடரையும் பார்பதில்லை!
ReplyDeleteஎன்னது? இன்னுமா அந்த சீரியல் ஓடிக்கிட்டு இருக்கு?
ReplyDeleteஅடக்கடவுளே!
dey pakradhuna parunga... ilana adangittu ponga... oorla iladha vishayathava avanga katturanga.... neenga panina adhu andharangam,.. avanga panina adhu asingama.... mudhalirava ena muzhusava katinanga.. adha pathi dhana pesinanga.... vandhutanunga nalla ilainu comment panna...
ReplyDeleteசரண்யா என்ற பெண் பெயரை பொய்யான ஐ.டி யாக வைத்துக்கொண்டு வந்து கருத்து சொல்லிச் சென்ற தோழரே..இந்தத் தளத்தில் அனைத்து கருத்துகளும் ஏற்கப்படும்.ஆனால் பொய்யான ஐ.டி மூலம் வந்து கருத்திடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது..இந்த பின்னூட்டத்தை நீக்கியிருப்பேன்..ஆனால் சரண்யா என்ற முகவரி பொய்யானது என பிறர் தெரிந்து கொள்ளட்டும் என்பதால் இதை பிரசுரித்திருக்கிறேன்.இனி கருத்து சொல்வதாக இருந்தால் சொந்த பெயரைக் கொண்ட சொந்த முகவரியில் வரவும்..பின்னூட்டம் வாயிலாக உங்களுக்கான மரியாதையை நீங்களே இழந்து கொள்ளாதீர்கள்..
Delete