வணக்கம் தோழர்களே.. பதிவர் சந்திப்பைக் குறித்த செய்திகளை விரைவில் பகிர்ந்து விட்டு அடுத்த கட்டத்திற்கு செல்லாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் பாருங்கள் உங்களுக்கு சுவையான ஒரு செய்தியை சொல்ல மீண்டும் அதே தலைப்போடு வந்துவிட்டேன்..
ஆம்..பதிவர்களே கடந்த 26.08.2012 அன்று சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பானது தமிழ் வலையுலகத்தில் நடந்த மிகப்பெரிய சந்திப்பு என்பதை எவராலும் மறுக்கமுடியாது.அது சரி எவராலும் அது மறக்கப்படக்கூடாதல்லவா.அதற்காகத்தான் காலை முதல் நடந்த நிகழ்வுகளை எல்லாம் அழகாக படம்பித்து இருக்கிறோம்.இன்னும் இரண்டொரு நாளில் அது கானொளியாக வெளியிடப்படும்.நேரலை மூலம் நிகழ்வை காண முடியாதவர்கள் இந்த காணொளி மூலம் நிகழ்வை கண்டு ரசிக்கலாம்.அத்தோடு நின்று விடாமல் அன்றைய நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நண்பர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியிட்டு வருகிறார்கள்.விழாக்குழுவின் சார்பாக இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.எனவே அவை விரைவில் வெளியிடப்படும்.இந்த புகைப்படங்களை அங்கொன்றும் இங்கொன்றும் என சிதறவிடாமல் அனைத்தையும் ஒன்று சேர்த்து மின் இதழாக வெளியிட இருக்கிறோம்.
புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள பதிவரின் பெயரோடு அவரது வலை முகவரியோடும் இருக்கும் வண்ணம் தயார் செய்யப்படுகிறது.காலம் முழுவதும் அதை நாம் அழகாக புரட்டிப் பார்த்து புரட்டிப் பார்த்து மனம் மகிழலாம்.எனவே எம்மிடம் உள்ள படங்களை தொகுத்து தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.நீங்களும் உங்களிடத்தில் இருந்த புகைப்படக் கருவியின் மூலம் பல படங்களை எடுத்திருப்பீர்கள்.அவற்றை அனுப்பி வைத்தால் அப்படங்களையும் மின் இதழில் இணைத்துக்கொள்வோம். புகைப்படங்களை kavimadhumathi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.முடிந்தால் அதில் இடம் பெற்றுள்ள பதிவரின் பெயரையும் வலை முகவரியையும் குறிப்பிடுங்கள்.இந்த மின் இதழானது விரைவில் வெளியிடப்படும்..
மகிழ்ச்சியுடன்,
நல்ல முயற்சி! வாழ்த்துக்கள்! ஆல்பம் பார்க்கக் காத்திருக்கிறேன்!
ReplyDeleteமகிழ்ச்சி..
Deleteஉண்மையில் பாராட்டப் பட வேண்டிய சிறப்பான பணியை செய்துவரும் உம் போன்றோருக்கு பாராட்டுகளும் நன்றியும் உம் பயணத்தை சிறப்புடன் தொடருக்க....
ReplyDeleteநன்றி..
Deleteநல்ல விடயம்
ReplyDeleteபாராட்டக்கூடிய விஷயம் சார்
அந்த தொகுப்பை காண எனக்கும் ஆவல் இருக்கிறது
அப்படியா மகிழ்ச்சி..
Deleteநற்செய்தி. காத்திருக்கிறேன் மின் இதழுக்காக
ReplyDeleteமகிழ்ச்சி..
Deleteகாணொளியையும் மின் இதழையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ஐயா..
Deleteசூப்பருங்கோ!
ReplyDeleteநீங்க சொன்னா சரி..
Deleteஉங்கள் முயற்சியை பாராட்டியே தீர வேண்டும் அருமை !!......
ReplyDeleteஇப்படியே தொடர வாழ்த்துக்கள் சகோ .
நன்றி சகோ..
Deleteநல்லதொரு முயற்சி.பதிவர் சந்திப்புக்கான தங்களின் உழைப்பு இன்னும் தொடர்ந்துகொண்டுள்ளது மலைக்க வைக்கின்றது.வாழ்த்துகக்ள்.
ReplyDeleteநன்றி சகோ..
Deleteநல்ல செயல்.
ReplyDeleteநன்றி சகோ..
Deleteஇன்னும் வேலைகள் தொடர்கிறதா... ஆச்சர்யப்பட வைக்கிறீங்க எல்லாரும்! விழா குழுவினருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சகோ..
Deleteரொம்ப நல்ல விஷயம் சார் ஆவலுடன் எதிர்பார்த்து
ReplyDeleteஅருமை! தொடருங்கள்!
ReplyDeleteஅசத்துங்க அசத்துங்க!
ReplyDeleteஅசத்திபுடுவோம்..
Delete
ReplyDeleteஒன்றே செய்யினும் நன்றே செய்வோம் என உணர்த்துவோம்
ஆம் ஐயா..
Delete//புகைப்படத்தில் இடம் பெற்றுள்ள பதிவரின் பெயரோடு அவரது வலை முகவரியோடும் இருக்கும் வண்ணம் தயார் செய்யப்படுகிறது//
ReplyDeleteபுதிய முயற்சி தொடருங்கள்
பதிவர் சந்திப்பு முடிந்தும் அதன் இனிமை குறையாமல் ஒவ்வொன்றும் கேட்கவே மகிழ்வா இருக்குங்க சார்
ReplyDeleteஇருக்கா..
Deleteசிறுக சிறுக அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ட பதிவர் சந்திப்பு புகைப்படங்களை இதழாக காணலாம் என்று உங்களுடைய "பதிவர் சந்திப்பு புகைப்படங்களை மின் இதழாக காணலாம் வாங்க" என்ற தலைப்பை பார்த்து ஆவலுடன் புகைப்படத்தை காணவந்தேன் ஆனால் நீங்களோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்துக்கு வரும் விளம்பரம் மாதிரி "விரைவில்" என்று போட்டுள்ளீர்கள்.விரைவில் என்பது விரைவில் இருக்கட்டும் சீரியல் போல வி.......ரை........வி.......ல் என்று இழுத்துகொண்டே நாட்களை கடத்திவிடாதீர்கள் சகோ.
ReplyDeleteவிரைவில் காணலாம் நண்பா..
Deleteமிக நல்ல முயற்சி. சீக்கிரம் வெளியிடுங்கள் தோழரே....
ReplyDeleteகட்டாயம் தோழரே..
ReplyDeleteஇதை... இதைத் தான் சார் எதிர்ப்பார்த்தேன்...
ReplyDeleteஎதிர் பார்த்து காத்திருக்கிறேன்...நன்றி மதுமதி அண்ணா
ReplyDeleteஆல்பம் பார்க்க காத்திருக்கிறேன் அண்ணா.....
ReplyDeleteசிறந்த முயற்சி பாராட்டுக்குரியது.
ReplyDeleteபாராட்டக்கூடிய விஷயம் சார்...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே,
ReplyDeleteஇந்த அல்பத்தை தரிசிக்க நானும் காத்திருக்கிறேன்.
படங்களைக் காண ஆவலோடு வந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது..
ReplyDeleteகாத்திருக்கிறேன் படங்களடங்கிய மின்னதழுக்காக....!!!
அன்பின் மதுமதி - தமிழ்ப் பதிவர்கள் திருவிழா - சிறப்பு மின்னிதழ் - விரைவினில் வெளியிட இருப்பதற்குப் பாராட்டுகள் -நல்வாழ்த்துகள் - பதிவர் சந்திப்பு நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் - இன்னும் அதே சிந்தனையில் - என்ன என்ன புதிய்தாகச் செய்யலாம் எனச் சிந்தித்து செய்து கொண்டிருக்கும் நிர்வாகக் குழுவினருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நட்புடன் சீனா
ReplyDeleteபின் தொடர்பதற்காக்
ReplyDelete