புது வரவு :
Home » , » புலவரின் சிலேடைக் குறும்புகள்

புலவரின் சிலேடைக் குறும்புகள்

                                                            விருந்தினர் பக்கம் 
                                                           செந்தில் கே. நடேசன்

    விருந்தினர் பக்கம் பகுதிக்கு புலவரின் சிலேடைக் குறும்புகள் பதிவை எழுதியிருப்பவர் முகநூலில் தொடர்ந்து கருத்துக்களையும் கவிதைகளையும் பதிவு செய்து வரும் அன்புத்தோழர் செந்தில் கே.நடேசன் அவர்கள்.ரு சாமான்னின் டைரிக்குறிப்பு என்த்தில் ட்டுரைளையும் காலும் காதல் சார்ந்த இமும் என்லைப்பூவில் விதைளையும் எழுதி ருகிறார்.

சிலேடைக் குறும்பு...1


    ஒரு புலவர் இன்னொரு புலவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றார்.. இருவருமே நல்ல நண்பர்கள் .. தமிழில் தேர்ந்தவர்கள்.. ஒருவருக்கொருவர் கிண்டல் செய்து கொள்வதில் சளைக்காதவர்கள்..விருந்தளித்த புலவர் தன மனைவியிடம் சொன்னார்.. 


"அய்யா சாப்பிடுமிடத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளி..."

         விருந்துக்கு வந்திருந்த புலவர் சொன்னார்... 


"ஆமாம் ஆமாம் .. அய்யா சொன்ன இடத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளியுங்கள்.."

(சாப்பிடுமிடம் //சொன்ன இடம் - - உட்கார்ந்து சாப்பிடும் இடத்தில் தண்ணீர் தெளி என்றும் ,

சாப்பிடுவதும், சொல்வதும் வாயால் தானே.. - அதனால் சாப்பிடுமிடம்/சொன்ன இடத்தில் தண்ணீர் தெளி என்றும் இரு வேறு அர்த்தங்கள் )

 -----------------------------------------------------------------------------------------------------------
சிலேடைக் குறும்புகள்...2

        ஒரு வயதான புலவர் மரணப்படுக்கையில் இருந்தார். அவருக்கு உணவாக பால் மட்டுமே கொடுக்க கூடிய நிலை. அந்த பாலை கூட ஒரு துணியில் நனைத்து வாயில் பிழிந்து விட்டுக்கொண்டிருந்தனர்..அந்த புலவரோ பாலை குடிக்காமல் வெளியே உமிழ்ந்தார்..


        அப்போது பால் கொடுத்தவர் கேட்டார்.. 


"பால் கசக்கிறதா புலவரே ..?"

        புலவர் சிலேடையில் பதில் சொன்னார்...


 "பாலும் கசக்கவில்லை... பால் நனைத்த துணியும் கசக்கவில்லை..."

(துணியும் கசக்கவில்லை- துவைக்காததால் அழுக்கடைந்த துணி அது )
---------------------------------------------------------------------------------------------------------
சிலேடைக் குறும்புகள்...3

      ஒரு புலவர் தன்னுடைய மகனுடன் மன்னரை கண்டு பாடி பரிசில் பெற சென்றார்.. மன்னரும் பாட்டில் மகிழ்ந்து பொற்காசுகளும் ஒரு பூ வேலை பாடுகள் நிறைந்த ஒரு பட்டு வஸ்திரமும் கொடுத்தார்..அந்த பட்டு வஸ்திரம் கிழிந்திருந்தது.. அதனை மன்னரோ- மற்றவர்களோ கவனிக்க வில்லை..புலவரின் மகன் அதை பார்த்தான் .மன்னரிடம் சொன்னான்... 


"மாமன்னா.. நீங்கள் கொடுத்த பட்டு வஸ்திரத்தில் பூவும், காயும், பிஞ்சும் இருக்கிறது.."

(பிஞ்சும் - கிழிந்தும் )
 --------------------------------------------------------------------------------------------------------
சிலேடைக் குறும்புகள்...4

         ஒரு புலவர் நண்பரை காண சென்றார்... பண்டிகைக்கான மறுநாள் அது... அப்போது வந்த புலவருக்கு சில வடைகளை சாப்பிட கொடுத்தார் அந்த நண்பர்.. அந்த வடைகளை எடுத்து பார்த்த புலவர் 


"வடை வேண்டாம் " என்றார்..
 

"ஒ... வடை சலித்துவிட்டதா.." 

       என கேட்டார்... புலவரும் பதில் சொன்னார்.

."ஆமாம்.. வடை சலித்துத்தான் போய் விட்டது ."

(நண்பர் கேட்டதன் அர்த்தம் - நிறைய சாப்பிட்டு விட்டதால் தகட்டிப்போய் விட்டதா..?"


         புலவரின் பதில் - கெட்டுப்போய் விட்டது (சலித்துவிட்டது ) ஏனென்றால் அது நேற்றிரவு பண்டிகைக்காக செய்த வடை )



         தோழர் செந்தில் கே. நடேசன் அவர்களை முகநூலில் தொடர இங்கே செல்லவும்..
--------------------------------------------------------------------------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

37 comments:

  1. சிலேடைக் குறும்புகள் அருமை

    ReplyDelete
  2. அனைத்தும் அருமையான சிலேடைகள் ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பர்களே...

      Delete
  3. சிலேடை குறும்புகள் அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. குறும்புகள் அருமை... அவர் தளங்களையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...tm3

    ReplyDelete
    Replies
    1. நன்றி தலைவரே..

      Delete
    2. மிக்க நன்றி திரு தனபாலன் அவர்களே... என்னுடைய தளத்திற்கு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி..

      Delete
  5. அருமையான பகிர்வு.வடை பற்றிய இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது---ஊசிப்போன வடை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே... என்னுடைய தளத்திற்கு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி..

      Delete
  6. Replies
    1. நன்றி தோழரே..

      Delete
    2. மிக்க நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே.

      Delete
  7. இரட்டை அர்த்தத்தில் பேசுவதை , இலக்கியத்தில் இரட்டுற மொழிதல் என்பார்கள். தங்கள் வலைப் பதிவின் விருந்தினர் செந்தில் கே.நடேசன் எடுத்துக் காட்டிய சிலேடைகள் நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா..மிக்க நன்றி..

      Delete
    2. மிக்க நன்றி திரு தமிழ் இளங்கோ அவர்களே... தங்கள் வாழ்த்துக்களில் நெகிழ்கிறேன்

      Delete
  8. இப்படியும் பேசலாமா என்பதனை அறிகையில் வியப்பு ..!! அருமை, மதுமதி அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள், இப்படி ஒரு பிரபல பதிவர், மற்ற திறமையானவர்களை பொறமை பாராமல் தன தளத்தில் அறிமுகப் படுத்துவது . தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி செழியன்..

      Delete
    2. அன்பு தம்பி திரு செழியன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  9. சிலேடைக் குறும்புகளை ரசித்தேன் செந்தில் அவர்களே.. வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரி சௌம்யா மது அவர்களுக்கு நன்றிகள் பல..

      Delete
  10. ரசிக்கவைத்த சிலேடைக்குறும்புகள்.....

    சாப்பிடுமிடத்தில் = உட்காரும் இடத்திலும் சாப்பிடுவது வாயால் என்பதால் அய்யா சொன்ன இடத்தில் /

    பால் கசக்கவில்லை துணியும் துவைக்கவில்லை என்ற பொருள் வருமாறு பாலும் கசக்கவில்லை துணியும் கசக்கவில்லை என்று மிக அழகாக சொல்லி இருக்கார்....

    பட்டு வஸ்த்ரம் கிழிந்து இருப்பதை காயும் பூவும் பிஞ்சும் என்று பொருள்பட சொன்னது மிக அருமை..

    வடை சலித்துவிட்டது என்பதை சாப்பிட சலித்துவிட்டது என்பதற்கும் கெட்டுப்போனதுக்கு கூட சலித்துவிட்டது என்று பொருள் பட சொன்னது மிக அருமை...

    எல்லா சிலேடைக்குறும்புகளும் மிக ரசிக்க வைத்தது....

    ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு தந்தமைக்கு மதுமதிக்கும், இந்த அழகிய சிலேடைக்குறும்புகள் எல்லோரும் ரசிக்கும்படி பகிர்ந்த செந்தில் கே நடேசன் அவர்களும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. சகோதரி மஞ்சு பாஷிணி அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்

      Delete
  11. Replies
    1. முனைவர் திரு. குணசீலன் அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  12. அருமையான சிலேடைகள

    ReplyDelete
  13. இந்த நாற்றை வாழ்த்திய மதுமதி என்ற கீற்றுக்கும், நேரம் ஒதுக்கி படித்து ரசித்து வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி என்று ஒருவார்த்தையில் சொல்லிவிட இயலாது விம்மும் என் நெஞ்சு நெகிழ்ச்சியை...

    ReplyDelete
  14. மிகவும் ரசித்து படித்தேன் நண்பரே....
    தமிழின் சுவைக்கு எல்லையே இல்லை
    என்று மீண்டும் நிரூபிக்கும் வகையில்
    நண்பர் நடேசன் அவர்களின் பதிவு அருமை....

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேந்திரன்

      Delete
  15. அப்பொழுதிலிருந்து இப்பொழுது வரை சிலேடைகளுக்கு பஞ்சமில்ல்லைதான்.

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com