துப்பாக்கி படம் சூப்பரா இருக்குன்னு ஒரு நண்பர் என் நண்பரிடம் சொல்ல சார் என்ன சொல்றீங்க என்று அதிர்ச்சியாக அவரைப் பார்த்துக் கேட்டார் எனது நண்பர்..ஆமா சார் படம் பாத்தேன் நல்லாதான் இருக்குது என்று அவர் சொல்ல,இங்கப்பாருங்க நல்லா இருக்கா நல்லாத்தான் இருக்கான்னு நண்பர் கேட்க அவர் பதிலே பேசவில்லையாம்..
சரி அத விடுங்க துப்பாக்கி விமர்சனத்துக்கு வருவோம்.நேத்து அதிகாலை மூன்றரை மணிக்கே தியேட்டருக்கு போய் படத்தை பாத்துட்டு 10 மணிக்கே சுடச்சுட ஆரூர் மூனா செந்தில் விமர்சனம் போட்டதிலிருந்து இப்ப வரைக்கும் விமர்சன பதிவுகள் வந்துகிட்டே இருக்குது...
ஒரு தரப்பினர் படம் நன்றாக இருக்கிறது தோல்வியில் இருக்கும் விஜய்க்கு இந்தப் படம் வெற்றிப்படம்தான் என்று சொல்லுகிறார்கள். ஆகா படம் பட்டையைக் கிளப்புது என்று கண் மூடித்தனமாக விஜய் ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியேறும்போது இலவச விளம்பரம் செய்கிறார்கள்..
படம் ஓ.கேதான் எந்தப் படமும் இதுக்கு போட்டியில்லாதனால படம் ஓடும் என்று சிலர் சொல்கிறார்கள்.. அர்ஜூன்,விஜயகாந்தெல்லாம் எப்பவோ பண்ணிட்டு போனதையெல்லாம் இப்ப விஜய் பண்ணிக்கிட்டு இருக்காரு என்று வழக்கமாக எல்லாத் தமிழ்ப்படங்களையும் கலாய்க்கும் அன்பர்கள் இப்படி கலாய்க்கொண்டிருக்கிறார்கள்..
படம் சுமார்தான் தான் சார் இது வெறும் ரசிகர் கூட்டம் இன்னும் ரெண்டு நாள் கழிச்சுப் பாருங்க தியேட்டர் காலியாயிடும் என்று போகிற போக்கில் சிலர் சொல்லிக்கொண்டு போகிறார்கள்.படம் நன்றாக இருந்தாலும் கூட நன்றாக இல்லையென்று விஜய் படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் பிரச்சாரம் செய்யும் அஜீத் ரசிகர்கள் ஒரு பக்கம்.
ஆனாலும் வலைப்பூக்களில் சொல்லியுள்ள விமர்சனங்களின் படி படம் மோசம் போகவில்லை என்பது தெளிவாகவேத் தெரிகிறது.சாதாரண கதையாக இருந்தாலும் முருகதாஸின் திரைக்கதை படத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கிறது என்றே விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
கைவசம் இருக்கும் பத்து டியூன்களையே மீண்டும் மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
பொதுவாக பார்க்கும்போது பிரபல நடிகர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் இந்த வேளையில் பல தடைகளைத்தாண்டி துப்பாக்கி வெளியாகியிருப்பதால் இந்தப் படமும் தோல்வியைத் தான் தழுவும் என்று சிலர் சொன்ன ஆரூடம் பொய்த்து போயிருக்கிறது என்பது உண்மை.
ரசிகர் பலம், தீபாவளி என்று பல காரணங்களால் தியேட்டரில் கூட்டம் என்று வைத்துக்கொண்டாலும் கூட படத்தைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் சூப்பர் என்று சொல்லாமற்போனாலும் மோசம் என்று யாரும் சொல்லிவிடவில்லை. அந்த வகையில் இந்தப் படம் வெற்றி வரிசையில் தான் சேரப்போகிறது.
அதேபோல பத்திரிக்கை,இணைய விமர்சனங்கள் சூப்பர் என்று சான்றிதழ் கொடுத்த படங்கள் அனைத்தும் வசூலைக் குவித்துவிடவில்லை. மோசம் என்று விமர்சனம் செய்த அனைத்துப்படங்களும் தோல்வியைத் தழுவிவிடவுமில்லை.
முந்தைய மூன்று விஜய் படங்களைக் காட்டிலும் இந்தப் படம் விஜய்க்கு வெற்றிப்படம்தான்..
ஃபேஸ்புக், ட்விட்டர் கலாய்ப்புல இருந்து விஜய் தப்பிச்சுட்டாரா?!
ReplyDeleteஅது எனக்கு தெரியாதுங்கோவ்..
Deleteஎப்படியோ வந்த தீபாவளி படங்களில் துப்பாக்கி தான் நன்றாக வெடித்துள்ளது...
ReplyDeleteஆமாம் தலைவரே..
Deleteஉண்மைதான்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவாங்க தலைவரே..
Deleteஇந்நாள் மலரும் திருநாள் போல்
ReplyDeleteஎந்நாளும் திகழ்ந்திடவே - நானும்
எம்பெருமான் அருள்வேண்டி வாழ்த்திகிறேன்
இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்...
மகிழ்ச்சி தோழரே..
Deleteபதிர்வகளின் விமர்சனம் என்றும் சோடை போனதில்லை என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது...
ReplyDeleteஉண்மைதான் தோழரே..
Deleteசுறுக்கமாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி
ReplyDeleteவாங்க சகோ..
Deleteவணக்கம் தோழர்....
ReplyDeleteநலமா??
துப்பாக்கி வெற்றிபெற வாழ்த்துக்கள்..
என்னங்க தோழரே..நான் படம் எடுத்த மாதிரி சொல்றீங்க..
Deleteகவிஞரே இது அநியாயம்,, அக்கிரமம், அராஜகம். காசு குடுத்து படம் பார்க்காம, பலர் விமர்சனம் படிச்சிட்டும், சொந்தமா தோனுனதை நண்பர் பேசிக்கிட்டதா சொல்றதும்.... அத வச்சி ஒரு பதிவை தேத்துறதும்.... ஒரு கவிஞருக்கு அழகா...:-))))
ReplyDelete#எப்படியெல்லாம் ஒரு கமெண்ட்ட தேத்த வேண்டியிருக்கு :-))))
ஹாஹாஹா..உங்களுக்கென்ன படம் பாக்கணும் அவ்வளவுதானே..எப்ப கூட்டிட்டு போறீங்க..சொல்லுங்க வரேன்..அப்புறம் வந்து பாட்டுக்கொரு பதிவு, திரைக்கதைக்கொரு பதிவு, சண்டைக்காட்சிக்கொரு பதிவுன்னு பதிவா போட்டுத்தாக்கலாம்..
Deleteவிடுங்க கவிஞரே, ஆங்கிலப்புத்தான்னு, தவறுச்சினா தப்புங்கல் தினம்னு , டி-வி-ல முதன்முறையாகனு சொல்லி போடாமலா போக்கப்போறாய்ங்க....
Deleteஅப்ப பார்த்துட்டுச் சுடச்சுட விமர்சனம் எழுதிப்புடலாம் :-))))
#நம்ம கிட்டையே பணம்பறிக்கப் பார்க்கிறாரே....:-)))