எத்தனை
ரூபாய் நோட்டுகள்
எரிந்துபோய்
தெருவில்
சாம்பலாகி சவமாய்
கிடக்கிறதெனத் தெரியவில்லை..
ஒரு கணக்காளரை
நியமித்திருந்தால் ஒருவேளை
கணக்கிட்டு சொல்லியிருப்பார்..
அதுவும் இப்போது இயலாது..
இலக்கங்கள் எல்லாம்
புகையைக் கக்கியபடி
கருகிப்போய்
உருகிப்போய் கிடக்கின்றனவே...
பட்டாசை வெடித்து
ரசிக்கும் குழந்தைகளின்
மகிழ்ச்சிக்குப் பின்னால்
கந்தக பூமியில் வாழும்
பல குழந்தைகளின்
வறுமையும்
உழைப்பும் இருக்கிறது
என்று நினக்கும்போது
எங்கோ வெடிக்கும்
பட்டாசின் சத்தம்
நெஞ்சறையைத் தாக்குகிறது..
என்று நினக்கும்போது
எங்கோ வெடிக்கும்
பட்டாசின் சத்தம்
நெஞ்சறையைத் தாக்குகிறது..
அவர்களின் உழைப்பு
வெடித்து சிதற சிதறத்தான்
அவர்களின் வறுமை
அகல ஆரம்பிக்கிறது
என நினைக்கும்போது
பட்டாசாய் மனம்
வெடிக்கத்தான் செய்கிறது.
இந்த தீபாவளியும்
இந்த தீபாவளியும்
வழக்கம்போல
செல்வந்த குழந்தைகளை
சந்தோஷப்படுத்திவிட்டும்
குடிசை வாழ்
குழந்தைகளை
குதூகலப்படுத்தாமலுமே
சென்றிருக்கிறது..
செல்வந்த குழந்தைகளை
சந்தோஷப்படுத்திவிட்டும்
குடிசை வாழ்
குழந்தைகளை
குதூகலப்படுத்தாமலுமே
சென்றிருக்கிறது..
செல்வந்தனுக்கு
செலவென்பது
எறும்பு கடித்த மாதிரி..
குடிசைவாசிக்கு-அது
தேள் கடித்த மாதிரி..
குடிசைவாசிகளின் தீபாவளி
பட்டாசு வெடிப்பது அல்ல
யாரோ வெடிக்கும்
அனுபவத்தில் விளைந்த கவிதை. உண்மையில் தோய்ந்த வரிகள் மனதைத் தொட்டன. நானும் வரிக்கு வரி ஆமோதிக்கிறேன் கவிஞரின் உணர்வுகளை.
ReplyDeleteமகிழ்ச்சி தலைவரே..
Deleteகோடிகளை கொளுத்தி
ReplyDeleteகுதுகலித்து விட்டனர்
மாடிகளெல்லாம் மகிழ்ந்தபோது
குடிசையெல்லாம் இருண்டுதான் போனது
மதுமதி சொன்னது போல்
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..
Deleteநாங்கள் பட்டாசே வாங்கவில்லை...
ReplyDeleteமுடிவில் சொன்ன வரிகள் உண்மை வரிகள்... மனம் கனத்த வரிகள்...
அப்படியா.. மகிழ்ச்சி தலைவரே
Deleteஉண்மையை சொல்லும் வரிகள்! அருமை!
ReplyDeleteநிதர்சனம்...
ReplyDeleteஅண்ணா நூறு சதம் இன்றைய காலத்துக்கு ஏற்ப உரக்க சொல்லி இருக்குரிங்க அதற்காக என் நன்றி
ReplyDeleteநெற்றிப்பொட்டில் அடித்தாற்போல
ReplyDeleteஉண்மைகள் தோழர்...
பலதரப்பட்ட கோணங்களுடன்
சந்தோசங்களையும் துன்பங்களையும்
பகிர்ந்துகொண்டு சென்றிருக்கிறது
தீபாவளி....
மீண்டும் அடுத்த ஆண்டின்
துவக்கத்தை நோக்கி...
// குடிசைவாசிகளின் தீபாவளி
ReplyDeleteபட்டாசு வெடிப்பது அல்ல
யாரோ வெடிக்கும்
சத்தத்தை கேட்பதுதான்..//
சமுதாயச் சுற்று சூழலைக் கண்டு, வெடித்த பட்டாசே தங்கள் கவிதை மதுமதி!