போடாபோடி படத்திற்கு டிக்கெட் கிடைக்காத கோபத்தில் வீட்டிற்கு வந்த சின்ராசுவைப் பார்த்து ஆர்வமாகக் கேட்டாள் அம்மணி..
"ஏனுங் மாமா.. படத்தை பாத்துப்போட்டீங்களா? எப்புடி இருந்ததுங்கோவ்"
"அட ஏ அம்மணி, டிக்கெட்டும் கெடைக்கல ஒண்ணும் கெடைக்கலை.. சுப்பிரமணிதான் நான் வாங்கித் தாரேன் வா வான்னான். ம்ஹூம்.."
"துப்பாக்கி"
"என்ன அம்மணி.. கிட்ட போக முடியுமா.. நான் என்ன வயசுப் பையனா கூட்டத்துல முட்டி மோதி சட்டையைக் கழட்டி தோள்ல மாட்டிக்கிட்டு மன்னன் ரஜினிகாந்த் மாதிரி படம் பாத்துட்டு வர்றத்துக்கு"
"சரிங்க மாமா..அப்ப அம்மாவின் கைப்பேசி பாத்துட்டு வர வேண்டியது தானே"
சொன்ன அம்மணியை புருவத்தை சுருக்கி பார்த்துவிட்டு,
"என்ன அம்மணி மக்கள் தொலைக்காட்சிய வர்றமாதிரி அம்மாவின் கைப்பேசின்னு சொல்றே"
"மாமோவ்.. அது இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்கிற புதுப்படம்.. நம்ம பாக்கியராஜ் பையன் நடிச்சது"
"அட்டட..நம்ம தங்கர்பச்சான் டைரக்ட் பண்ணின் படமா..மறந்தே போச்சு அம்மணி.. நீ முன்னமே சொல்லியிருந்தா எந்தப் படத்துக்கும் போகாம அம்மாவின் கைப்பேசிக்கே போயிருப்பேன்.தங்கர்பச்சானோட அழகி படம் இன்னும் கண்ணுல நிக்குது"
"ஆமாம் மாமா இந்தப் படமும் அழகி மாதிரியான சூப்பர் கதையாம்.. அழகிங்கற சிறுகதை மொதல்ல எழுதிட்டு அப்புறமா படமா எடுத்தாரு தங்கர்பச்சான்.. படமோ சூப்பர் ஹிட்.. அதே மாதிரி தங்கர் பச்சான் எழுதிய நாவல் தான் இந்த அம்மாவின் கைப்பேசி படம்.. தமிழ் சினிமா ஆர்வமா எதிர்பார்த்திட்டு இருக்கிற படம் மாமா இது"
"ஆமா அம்மணி.. தலைப்பே தாய்ப்பாசத்தோட இருக்கே.. இப்படி அம்மாவை தலைப்புல வச்ச காலமெல்லாம் மலையேறிப்போச்சு.. இந்தக் காலத்திலயும் அம்மாவை தலைப்புல வச்ச தங்கர்பச்சானை கட்டாயம் பாராட்டலாம்..ஏ அம்மணி இதுவும் கிராமத்துப் படம் தான் இல்லையா..டவுன்ல இருக்குறவங்க படம் பாப்பாங்களா"
"ஆமாங் மாமா கிராமத்து படம் தான்.. கிராமத்தை விட டவுன்ல இருக்குறவங்கதான் இந்தப் படத்தை அதிகமா பாப்பாங்க.. ஏன்னா அவுங்கவுங்க நெலம் புலத்தை சொந்த பந்தத்தை வுட்டுப்போட்டு டவுனுக்கு பொழைக்கபோனவங்கதானே மறுபடியும் கிராமத்தை பாக்க மாட்டமான்னு ஏங்கித் தவிக்கறவங்க இந்தப் படத்தை தவறாம பாத்து ரசிப்பாங்க"
"ஆமா அம்மணி நீ சொல்றதும் சரிதான்..சரி பாக்கியராஜ் பையன் தான் ஹீரோ.. தங்கர்பச்சான் நடிக்கிறாரா"
"என்னங் மாமா..இப்படி கேட்டுப்போட்டீங்க.. அவரு நடிக்காமலா.. அதுமட்டுமில்லாம படத்துல நடிச்ச முக்கால்வாசி பேரு புதுமுகங்களாம்.. இதுவரைக்கும் அவரு எடுத்த படங்கள்ல இருந்து இது முற்றிலும் மாறுபட்டு இருக்குமாம்"
"அப்ப என்னமோ புதுசா முயற்சி பண்ணியிருக்காருன்னு சொல்லு"
"ஆமாங் மாமா"
"ஏ அம்மணி.இவர் படமின்னாலே பாட்டெல்லாம் அருமையா இருக்குமே.. யாரு இசை?
"ஏதோ ரோகித் குல்கர்னின்னு புதுசா அறிமுகம் ஆயிருக்காராம்.. பாட்டெல்லாம் படத்தோட சம்பந்தப்பட்டு இருக்கறதால படம் ஓட ஓட ஹிட்டாயிடுங் மாமா"
"அப்ப அம்மணி இந்தப் படத்தை உடனே பாத்துட வேண்டியதுதான்"
"என்ன மாம உங்களோட ஒரே வம்பாப்போச்சு.. துப்பாக்கியைப் பத்தி சொன்னா துப்பாக்கியைப் பாக்கோணுமின்னு சொல்றீங்க.. போடா போடியைப் பத்தி சொண்ணா தியேட்டருக்கே போயிட்டு திரும்பி வந்துட்டீங்க.. இப்ப அம்மாவின் கைபேசியைப் பத்தி சொன்னா உடனே பாக்கோணுங்கிறீங்களே"
"அதான் அம்மணி எனக்கே கொழப்பம் எந்தப் படம் பாக்கலாமுன்னு"
"கொஞ்சம் பொறுங்க மாமா.. விமர்சனம் வந்துடும் அதை படிச்சுப் பாத்துட்டு எந்தப் படம் நல்லாயிருக்கோ அந்தப் படத்தை பாப்போம்"
"அதுசரி அம்மணி பேப்பர்ல விமர்சனம் வர நாலஞ்சு நாள் ஆயிடுமே"
"மாமா.. நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க.. இப்பவெல்லாம் படத்தோட மொத ஷோ முடிஞ்ச அடுத்த அஞ்சாவது நிமிஷத்துலயே பிளாக்ல விமர்சனம் எழுதிப்போடுறாங்க.. அதைப் பாத்துட்டுதான் மக்க படத்துக்கே போகுதுங்க"
"அப்படியா அம்மணி.. அதென்ன பிளக்கு"
"அது பிளக்கு இல்ல மாமா பிளாக்"
என்று ஆரம்பித்து பிளாகரைப் பற்றி சின்ராசுவுக்கு விளக்க ஆரம்பித்தாள்..
சுடச்சுட தீபாவளி படங்களின் அலசல்...
ReplyDeleteஹா ஹா! “நம்ம” உலகத்துக்கு அடுத்த வரவு சின்ராசுவா?! அவர் வரவு நல்வரவாகுக!
ReplyDeleteஆமாம்..வந்தாலும் வருவார்..
Deleteஇன்னிக்கு நம்ம ப்ளாக்ல துப்பாக்கி விமர்சனம்...
ReplyDeletehttp://schoolpaiyan2012.blogspot.in/2012/11/blog-post.html
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeletetha.ma 4
ReplyDelete