"கலா சலா கலசலா கல்லாச கலசலா"
கலைஞர் தொலைக்காட்சியில் காக்கிச்சட்டையோடு மல்லிகா சராவத்துக்கு இணையாக சிம்பு பின்னிக்கொண்டிருக்க,கயித்துக் கட்டிலில் மல்லாந்து படுத்து ரசித்துப்பார்த்தபடி பாடலை முனகிக்கொண்டிருந்தான் சின்ராசு .
"என்னங் மாமா..பாட்டை புதுஷா பாக்குற மாதிரி ரசிச்சு பாத்துட்டு இருக்கீங்க"
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல அம்மணி..எங்காளு டி.ராஜேந்திரர் பாட்டுல்ல அதான்"
"அதுமட்டுமா.. உங்களுக்கு சிம்பு கூட பிடிக்குமே"
"ஆமா அம்மணி.. யாரு இல்லைன்னு சொன்னாங்க.. சிம்பு எந்தலைவன் படத்துல சின்னப்பையனா நடிச்சதிலிருந்தே பிடிக்கும்..என்னா ஸ்டைலு அப்பவே"
"இப்பவும் அதே மாதிரி விரலை ஆட்டிக்கிட்டேதான் மாமா இருக்காரு"
"இல்லை அம்மணி.. இப்பவெல்லாம் அப்படியில்ல விமர்சனம் எழுதுறவங்கெல்லாம் விரலைப் பத்தியே எழுதுறாங்கன்னு இப்பவெல்லாம் விரலைக் காட்டுறதையே விட்டுட்டாரு"
"ஆமா மாமா.. நீங்க சொல்றது சரிதான்.. எனக்கும் சிம்புவை பிடிக்கும்..குறிப்பா அவரோட டான்ஸ் எனக்கு ரொம்ப புடிக்குங் மாமா.. என்னமா ஆடுவாரு இல்லங் மாமா"
"ஆமா அம்மணி.. சிம்புவோட பாட்டெல்லாம் அவரோட டான்ஸூக்காவே ஹிட்டு ஆகும்.. அதுவும் டான்ஸ் சம்பந்தப்பட்ட படம் ஏதாவது கிடைச்சுதுன்னா பின்னி பெடலெடுத்துடுவார்"
"என்ன மாமா உங்களுக்கு தெரியாதா.. நாளைக்கு ரிலீஸ் ஆகப்போற 'போடா போடி' படம் டான்ஸை மையமா வச்சுத்தானே எடுத்திருக்காங்க"
"அப்படியா அம்மணி.. எனக்கு இது தெரியாதே.. அப்படின்னா நாளைக்கு படத்தைப் பாக்க சுப்பிரமணிகிட்ட சொல்லி ஒரு டிக்கெட்டை வாங்கியிருப்பனே"
"நீங்க டி.ராஜேந்தர் ரசிகர்ன்னு எனக்குத் தெரியும்..சிம்பு ரசிகர்ன்னு எனக்கெப்படி தெரியும்.. சரி விடுங்க மாமா..லீவெல்லாம் முடியட்டும். மூணுபேரும் போய் படத்தை பாத்துட்டு வருவோம்"
"சரி அம்மணி படத்தைப் பத்தி வேற ஏதாச்சும் தகவல் இருந்தா சொல்லு"
"அதான் மாமா.. நம்ம சரத்குமார் பொண்ணு வரலட்சுமிதான் கதா நாயகியா அறிமுகம் ஆகுறாப்பிடி.. படத்தோட முக்காவாசிய வெளிநாட்டுல எடுத்திருக்காங்களாம்"
"நம்மள மாதிரி ஆளுங்கெல்லாம் இப்படி படத்துல வெளிநாட்டை பாத்தாதான் உண்டு அம்மணி.. என்ன சொல்றே"
"ஆமாம் மாமா. அதுக்காக என்ன பண்றது?."
என்று சிரித்தவள் தொடர்ந்து சொன்னாள்..
"இந்தப் படத்துக்கு வெளிநாட்டு கேமராமேன் டங்கன் டெல்போர்ட் அப்படிங்கறவரு வேலை செஞ்சிருக்காராம் மாமா..அதே மாதிரி ஹாலிவுட் படத்துக்கெல்லாம் ஆர்ட் டைரக்டரா வேலைபாத்த யூட் பெர்க்குங்கறவர்தான் இந்தப் படத்துக்கு ஆர்ட் டைரக்டராம்.. படத்தோட க்ளைமாக்ஸ்ல கூட பயங்கரமான டான்ஸ் போட்டி தானாம் மாமா"
"அப்படியா.. புதுசா இருக்கே"
"ஆமாம் மாமா.. சரத்குமார் பொண்ண போட்டதுக்கே அவுங்களுக்கு நடனம் ஆடத்தெரியுங்கற காரணத்துக்காகத்தான்னு சிம்பே சொன்னாராம்.. இந்தப் படத்துல சல்சா நடனக்கலைஞரா வரலட்சுமி நடிச்சாப்பிடியாம்..இவங்க ரெண்டு பேரும் ஒரே டீச்சர்கிட்ட டான்ஸ் கத்துக்குறாங்களாம்..சிம்பு கூட என்னோட சினிமா வாழ்க்கையில இந்தப் படம் ஒரு முக்கியமானதா இருக்குன்னு சொல்லியிருக்காருங் மாமோவ்"
"ஓ..அப்படியா..வேற யாரு அம்மணி கூட நடிக்கிறாங்க?"
"ம்..நம்ம பழைய நடிகை ஷோபனா இல்ல,அவுங்க முக்கியமான கேரக்டர்ல நடிக்கிறாங்க..அதாவது அவுங்க ரெண்டு பேருக்கும் டான்ஸ் சொல்லித் தர டீச்சரா நடிக்கிறாங்களாம்"
"ஆமாமா அவுங்களும் நல்லா டான்ஸ் ஆடுவாங்களே அதனாலதான் அந்த வேஷத்தை அவுங்களுக்கு கொடுத்திருக்காங்க இல்லையா அம்மணி."
"ஆமாங் மாமா..அப்புறம் சந்தானம்,நம்ம கங்கை அமரன் பையன் பிரேம்ஜி காமெடியில நடிப்பாங்க போல இருக்கு.."
"பாட்டெல்லாம் எப்புடி அம்மணி?"
"தெரியலங்க மாமா..நான் பாட்டை கேக்கல.. பாக்கியராஜோட பாரிஜாதம் படத்துக்கு இசையமைச்சாரே தரண்,அவருதான் இசை அமைச்சு இருக்காப்பிடியாம்.. எப்படியும் பாட்டு ஹிட்டாயிடும்..இந்நேரம் ஆயிருக்கும்..நாமதான் இன்னும் கேக்கலை"
"அம்மணி நீ சொல்றதப் பாத்தா படத்தை பாக்குற ஆர்வம் அதிமாயிடுச்சு..
விஜயோட துப்பாக்கி படத்துக்கு சரியான போட்டின்னு சொல்லு.எதுக்கும் நாளைக்கு ஒரு டிக்கெட் கிடைக்குமான்னு சுப்பிரமணிக்கு போன் போட்டு கேட்டுப்பாக்குறேன்"
என்று சொன்ன சின்ராசு தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்த செல்போனை எடுத்து சுப்பிரமணிக்கு டயல் செய்தான்..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
ReplyDeleteஎன் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
மகிழ்ச்சி தோழரே..
Deleteபோடபோடி டான்ஸ் சம்மந்தபட்ட படம்ன்னு சொல்லிட்டீங்க சிம்புக்கு டான்ஸ்ல நல்லா கலக்குவார் போய் படம் பார்த்து கருத்து சொல்லறேன் தகவலுக்கு நன்றி
ReplyDeleteம்..பாத்துட்டு வந்து கருத்தைச் சொல்லுங்க..
Deleteசபாஷ்...! சரியான போட்டி...!!!
ReplyDeleteபார்ப்போம்.
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே
ReplyDeleteமகிழ்ச்சி தோழரே..
Deleteமகிழ்ச்சி தோழரே..
ReplyDeleteஉங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDelete