புது வரவு :
Home » , , » 'துப்பாக்கி' வெடிக்குமா -அம்மணியும் சின்ராசும்

'துப்பாக்கி' வெடிக்குமா -அம்மணியும் சின்ராசும்


"மாமோவ்"
            டி.வி.எஸ். 50 யை நோக்கி சென்ற சின்ராசுவை அழைத்தாள் அம்மணி.

"ஏ..அம்மணி"

"அப்படியே உங்க அக்கா பையன் அங்கமுத்து இருந்தா அத்தை கூப்பிடுறான்னு ஒரு சொல்லு சொல்லிப்போட்டு போங்க மாமோவ்"

"எதுக்கு அம்மணி..அவன் இந்நேரம் இங்கிருக்கமாட்டானே"

"ஏன்..எங்க போயிருப்பான்..இன்னைக்கு பள்ளிக்கோடம் லீவுதானங் மாமா"

"இன்னைக்கு பள்ளிக்கோடம் லீவுதான் அம்மணி..நாளைக்கு நோம்பி..விஜய் படம் ரிலீஸ் வேற..அதுக்கு விஜய் ரசிகர் மன்றத்துக்கார பசங்க எல்லாம் தியேட்டர்ல கட்டவுட் கட்டப் போயிட்டாங்களே..அவனுங்களோட இவனும் போயிருப்பான்"

"ஏனுங்க மாமா.இது கம்பியூட்டர் காலம், இன்னைக்கு இருக்கிறதெல்லாம் படிச்ச பசங்க, நாட்டையே புரட்டிப்போடுவானுங்கன்னு சொல்லிக்கறாங்க.. இவனுங்க இன்னமுமும் சினிமா ரசிகனுக்கு போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருக்கிறானுங்களே.. படம் ரிலீஸ் ஆனா பட்டாசு வெடுச்சுக்கிட்டும் இருக்காங்களே எப்புடி? பட்டிக்காட்டு பசங்க பின்ன எப்படி இருப்பானுங்க.. என்னங் மாமா நான் சொல்றது?

"அட இங்கக்கூட பரவாயில்ல அம்மணி..படிச்சவங்க நிறைய இருக்குற மெட்ராஸ்ல போயி பாரு.. அங்கதான் கட்டவுட்டெல்லாம் வச்சு மாலை போட்டு பால் அபிஷேகமெல்லாம் பண்றாங்களாம்.. அதுக்கென்ன சொல்றே.. சரி விடு அம்மணி.. நமக்கென்ன போச்சு..தே அம்மணி விஜய் நடிச்ச துப்பாக்கி படம் 9 ந்தேதியே ரிலீசுன்னு சொன்னாங்க.. இன்னுமா ரிலீஸாகலை"


"ஆமா மாமா.. அந்த துப்பாக்கி படம் ஆரம்பச்சதிலிருந்து ஏகப்பட்ட பிரச்சனைங்க.. மொதல்ல விஜயோட அப்பா படத்தை தயாரிக்க ஆரம்பிச்சார்.. அப்புறம் டைரக்டர் முருகதாஸ் கேட்ட சம்பளத்தைக் கேட்டு அவர் மிரண்டு போக கலைப்புலி தாணு தயாரிக்க ஆரம்பிச்சார்.அப்புறம் அவர்கிட்டயும் பணம் பற்றாக்குறை ஏற்பட படத்தை நிறுத்திப்போடாம விஜய் தன்னோட பணத்தை இறக்கி படப்பிடிப்பை நடத்தச் சொல்லி ஒரு வழியா படத்தை முடிச்சாங்கன்னு சொல்றாங்க.. அதுமட்டுமில்லாம இடையில் டைட்டில் பிரச்சனை வேற. கள்ளத்துப்பாக்கிக்கூட சண்டை போட்டு ஒரு வழியா துப்பாக்கி ஜெயிச்சு 9 ம் தேதி ரிலீஸ் ஆக இருந்துச்சு.. என்ன பிரச்சனையோ.. அதுவும் நடக்கலை. நாளைக்குக்குத்தான் ரிலீஸ் ஆகுது"

" துப்பாக்கி சுடுற சத்தம் பெருசா கேக்குமா?

"அது தெரியாது மாமா.. ஆனா படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு மாமா. உலகம் முழுவதும் 1000 பிரிண்டுக்கு மேல போடப்போறாங்களாம்.. சென்னையில மட்டும் 35 தியேட்டர்ல போடப்போறாங்க மாமா.. அதுமட்டுமில்லாம எப்பவும் இல்லாத அளவுக்கு மும்பை பக்கம் மட்டும் 100 பிரிண்ட் போடுறாங்களாம். ஏன்னா மும்பையில தான் படத்தை எடுத்திருக்காங்க.. அங்கிருக்கிற தமிழர்கள் படத்தைப் பாக்க ரொம்ப ஆர்வம் காட்டுறாங்களாம். முருகதாஸ்க்கு ஹிந்தி ரசிகர்களும் இருக்காங்களாம்"

"ஆமா அம்மணி பெரிய செட்டப்பு வேற"

"ஆமா மாமா ஹாரிஸ் ஜெயராஜு இசையமைச்சு இருக்காரு..பாட்டெல்லாம் பட்டைய கிளப்புது.. விஜயோட ஆட்டத்துக்கும் குறைவு இருக்காது.. சண்டைக்காட்சியும் ரசிகர்களுக்கு விருந்தா இருக்கும்.. அதான் ஏகப்பட்ட கிராக்கி இந்தப் படத்துக்கு..

"என்னமோ அம்மணி நீ சொல்றத பாத்தா ரஜினி படம் ரிலீஸ் ஆகுற மாதிரி இருக்கு.. பெரிய நடிகருங்க படம் வரிசையா தோத்துக்கிட்டே வருது.. துப்பாக்கியாவது ஜெயிக்குதான்னு பார்ப்போம்..சரி அம்மணி வேற எந்த பெரிய நடிகருங்க படமும் நாளைக்கு வரலையா?"

"என்ன மாமா..இப்படி கேட்டுப்புட்டீங்க.. சிம்பு காதுல விழுந்திடப்போவுது.. சிம்புவும் பெரிய நடிகருன்னு சொல்றாங்க..அவரு நடிச்ச படம் போடா போடி நாளைக்குத்தானே ரிலீஸ"

"அட நம்ம சரத்குமார் குமாரு பொண்ணுதான அம்மணி ஜோடி"

"ஆமாங்க மாமா அந்தப்பொண்ணேதான்.."

"அந்தப்படத்தை ரெண்டு மூணு வருஷமா எடுத்துட்டு இருந்தாங்க..இப்பத்தான் ரிலீஸ் பண்ண நேரம் கெடைச்சிருக்குது போல"

"ஆமாங்க மாமா.. ஆனா எந்த ஒரு பரபரப்பும் இல்லாம படம் ரிலீஸ் ஆகப்போகுது.. பார்ப்போம்.. எந்த படம் வசூலை வாரிக்குவிக்குதுன்னு.. ஆனா,துப்பாக்கி படத்துக்கு சரியான போட்டி எந்தப் படமும் இல்லை..அதனால வசூலை வாரிக்குவிக்கும்ன்னு சொல்றாங்க.. பாப்போம்"

"சரி அம்மணி.. நான் வயக்காட்டுப் பக்கமா போயிட்டு அப்படியே பையனுக்கு துப்பாக்கியும் கொள்ளுபட்டாசும் வாங்கிட்டு வந்துடுறேன்.."

"ஏனுங் மாமா நம்ம பையனுக்கு 12 வயசு.. இன்னுமா கொள்ளுபட்டாசு வாங்கிட்டு வர்றேங்குறீங்க.. அவன் லட்சுமி வெடிதான் வேணுமின்னு போன வாரமே சொல்லிப்போட்டான்.. அதனால மாத்தி வாங்கிட்டு வாங்க.. மறந்தாப்ல கொள்ளுப்பட்டாசும் துப்பாக்கியும் வாங்கியாந்தீங்க, நீங்கதான் கட்டாந்தரையில உக்காந்து ஒவ்வொண்ணா வெடிக்கோணும் சொல்லிப்போட்டேன்"

 "சரி அம்மணியோவ்"

              என்ற சின்ராசு தனது டி.வி.எஸ் 50 யை ஸ்டார்ட் செய்தபடி சிரித்தான்..
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

11 comments:

 1. நீங்கதான் கட்டாந்தரையில உக்காந்து ஒவ்வொண்ணா வெடிக்கோணும் சொல்லிப்போட்டேன்"
  >>
  இப்ப கட்டாந்தரை ஏதுங்க அம்மணி?! பாவம் சின்ராசு! மறாந்து போய் கொள்ளு பட்டாசை வங்கி வந்துட்டா என்ன பண்ணுவாரோ?!

  ReplyDelete
 2. தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ இத்தீப திருநாளில் எல்லாம் வல்ல இறைவனை வேணிடிக்கொள்வதோடு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களையும் சொல்லிக்குறேன் சகோ!

  ReplyDelete
 3. இந்த கால பசங்க எங்க துப்பாக்கிய வெடிக்குதுங்க.

  துப்பாக்கி படம் பார்க்க ரெடியா இருக்குங்க.
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  அம்மணி என்ன பட்டாசுங்க வெடிப்பாங்க. (நம்ம அம்மணி)

  ReplyDelete
  Replies
  1. அம்மணியே பட்டாசாத்தானே வெடிக்கிறாங்க..

   Delete
 4. சூப்பர்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. விஜய்யை ரொம்ப பிடிக்குமோ...?

  குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete

 6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com