வணக்கம்
தோழர்களே.உண்மை இதழில் 'புதுக்கவிதையில் புரட்சிக்காரரின் வரலாறு' எனும்
பக்கத்தில் 'ஈரோட்டுச் சூரியன்' என்ற தலைப்பில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை
தொடராக எழுதி வருவது நீங்கள் அறிந்ததே.தொடரின் மூன்றாவது அத்தியாயம் 'பாட்டியின் வீட்டில் இராமன்' 16.10.2012 உண்மை இதழில் வெளியானது.உங்களுக்காக இங்கே
பகிர்ந்திருக்கிறேன்.
ஈரோட்டுச் சூரியன்- 3
பாட்டியின் வீட்டில் இராமன்
ஆண் இரண்டுபெண் இரண்டு
வெங்கட நாயக்கரின்
மனம் திளைத்தது;
மகிழ்ச்சியில்
களைத்தது;
நாயக்கரின் சிற்றன்னைக்கோ
இல்லை பிள்ளைப்பேறு;
அவரின் பசியைத் தீர்ப்பதோ
கஞ்சிச் சோறு;
இல்லையவரிடம்
பெருமளவு சொத்து;
இராமனைக் கேட்டார் தத்து;
வெங்கட நாயக்கரோ
மறுப்பு தெரிவிக்கவில்லை;
சின்னத்தாயம்மையோ
விருப்பு தெரிவிக்கவில்லை;
சிற்றன்னையின் நிலைமையை
சின்னத்தாயம்மையிடம்
எடுத்துக் கூறினார்;
பதிலுக்கு அவர் சீறினார்;
சிற்றன்னையின்
தனிமையைப் பார்!;
நம்மை விட்டால்
ஆதரவுதான் யார்?;
சின்னத்தாயம்மையின்
மனதைப் பிசைந்தார்;
அவர் மெல்ல
இசைந்தார்;
தத்தாகக் கொடுக்க
மறுப்பைச் சொல்லுங்கள்;
ஆயினும் அவர் வீட்டில்
வளர்க்கச் சொல்லுங்கள்;
நாயக்கரின் சிற்றன்னை
இராமனைத் தூக்கிச் சென்றார்..
அவரது மனம் மகிழ்ந்தது;
பின் நெகிழ்ந்தது;
தாய்ப்பால் வேண்டி
இராமன் அழுத போதெல்லாம்
பசியை ஆட்டுப்பாலே தீர்த்தது;
பசியடங்கிய இராமனின் பார்வை
பாட்டியை தாயாய்த் தான் பார்த்தது;
தமயனும்
தமக்கைகளும்-அங்கே
அறுசுவை உணவை
உண்டனர்;
புத்தாடைகள்
உடுத்திக் கொண்டனர்;
இங்கே..
அறுசுவை உணவல்ல
சிறு சுவை உணவுதான்..
பழைய சோறும்
சுண்டக்கஞ்சியும் தான்..
சுவை சுமாராய்-ஆயினும்
சுகாதாரமாய்..
தின்பண்டங்களுக்கு
திண்டாடுவார்;
கிடைத்தால் போதும்
கொண்டாடுவார்:
பாட்டியோ
பாசத்தைக் காட்டியே
பசிதனைக்கூடப் போக்குவார்;
பெற்ற மகனைப் போலவே
இராமனை நோக்குவார்;
செல்வத்தைக் காட்டி
இராமனை வளர்க்கவில்லை
அதிக செல்லத்தை ஊட்டி வளர்த்தார்..
இராமனின்
ஆறாவது வயதில்
நாயக்கர் சொல்லி
இராமனைக் கொண்டு சேர்த்தார்
திண்ணைப்பள்ளி;
தந்தையின் சிற்றன்னை
மகனுக்கும் சிற்றன்னை ஆனார்;
மகன் மேல்
அவர் வைத்த பாசங்கண்டு
சின்னத்தாயம்மை
மனம் மகிழ்ந்து போனார்;
நொறுக்குத் தீனிகளும் சிற்றுண்டிகளும் இல்லாமல் போனாலும போஷாக்கான ஆரோக்கிய உணவும் சிற்றன்னையின் பேரன்பும் வாய்த்திருக்கின்றன ஈரோட்டுச் சூரியனுக்கு. பள்ளியில் அவர் எப்படி செயல்பட்டார் என்பதை அறிய ஆவலுடன் எமது காத்திருப்பு.
ReplyDeleteஉண்மைதான் தலைவரே..தாங்கள் காத்திருப்பது மகிழ்ச்சி..
Deleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி..
Deleteதிண்ணைப்பள்ளியில் அனுபவங்களை கவிதை வடிவில் காண ஆவலுடன்.
ReplyDeleteகாத்திருங்கள்..
ReplyDeleteதிண்பண்டங்கள், சிற்றுண்டிகள் ம்ம்ம்ம்
ReplyDeleteகவிதை அருமை அண்ணா.....
மகிழ்ச்சிம்மா..
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஒரு மிக சிறந்த கவிதை பாராட்டுகள்
ReplyDeleteதீப ஒளி திருநாள் வாழ்த்துகள்...
ReplyDelete