/கொக்கரக்கோ/
அம்மணியும் சின்ராசும்
வாசலில் போட்டிருந்த கொடியில் துவைத்த துணிகளை காயவைத்துக்கொண்டிருந்தாள் அம்மணி,
"ஏங்கண்ணு புள்ளைங்களுக்கு தீபாவளி நோம்பிக்கு துணிமணி எடுத்துட்டீங்களா"
அவளுக்கு பின்னால் சத்தம் கேட்க,திரும்பிப்பார்த்தாள்.அம்மணியின் பெரியம்மா அருக்காணி நின்றிருந்தார்..
"இன்னும் இல்ல பெரிம்மா..மச்சாண்டாரு பையன் மெட்ராஸ்ல இருக்கான்.அவன் வரும்போது சரவணா ஸ்டோர்ல வாங்கியாரேன்னு சொல்லியிருக்கான்"
"அப்படியா அம்மணி.."
"ஆமா பெரிம்மா..உங்க பேரன் பேத்திக்கெல்லாம் துணி எடுத்தாச்சா.இன்னும் இல்லையா?
"அந்தியூர் சந்தைக்குத்தான் போகணும் அம்மணி..உங்கண்ணனு அண்ணியும் நாளைக்கு போலாமுன்னு இருக்காங்க"
"ஏன் பெரிம்மா..இப்பெல்லாம் காலம் மாறிப்போச்சு..இன்னும் சந்தையிலேதான் துணிமணி எடுக்கணுமா? ஏன்..ஒரு எட்டு ஈரோடு டவுனுக்கு போய் நல்லத் துணியா வாங்கிக்கொடுக்கலாமுல்ல"
"உங்கண்ணன் போனா..நானா வேண்டாங்குறேன் அம்மணி..அங்கப்போனா பொழுதே போயிடும்..கூட்டமுன்னா கூட்டம்ன்னு சொன்னான்..என்ன பண்றானோ"
என்று சொல்லிவிட்டு பெரிம்மா நகர ,
"ஆமா அம்மணி ஈரோடெல்லாம் பயங்கர கூட்டமா..கோழிக்கூப்பிட போனா ராவுக்குத்தான் வரமுடியும்..அத்தனை கூட்டமாம்"
"என்ன மாமா இதுக்கே இப்படின்னா மெட்ராஸ்ல ரங்கநாதன் தெரு முச்சூடும் வெறும் மனுச தலைதான் தெரியுதான் நெலத்தையே கண்ணுல பாக்க முடியலையாம்..யாரும் நடந்து போகலையாம்..ஒருத்தர மேல ஒருத்தர் ஏறிக்கிட்டுதான் போறாங்களாம்..இன்னைக்கு பேப்பர்ல போட்டோவ போட்டிருந்தாங்களே பாக்கலை"
"காலங்காத்தல காட்டுக்கு போனேன் இப்பத்தானே வரேன்..நான் எப்படி பாக்கிறது..ஆமா மெட்ராஸ்ன்னு சொன்னவுடனே ஞாபகம் வருது, கப்பல் ஒண்ணு தரதட்டுச்சாமே அது என்னாச்சு அம்மணி மீட்டுப்புட்டாங்களா?
"இன்னும் இல்லீங் மாமா..அது ஓடுறத்துக்கான தகுதியை அக்டோபரு 1 ந் தேதியே இழந்துடுச்சாம்..அதுதான் புயல்ல மாட்டுன கப்பலை நடுக்கடலுக்கு போய் நிக்கச் சொல்லியிருக்காங்க..அதுப்படி நடுக்கடல்ல்தான் போய் நின்னிருக்கு..ஆனா அலையோட வேகத்துல கப்பலோட நங்கூரம் அந்து போய் கப்பல அலை தூக்கிட்டி வந்து கரையில போட்டுச்சாம்"
"ஏ..அம்மணி நங்கூரம் அந்து போற அளவுக்கா கப்பல் இருக்கும்?"
"அதான் மாமா அது வாய்தா போன கப்பலு கடல்ல ஓடத் தகுதியே இல்லையாம்..அதான் அந்துப்போச்சாம்..அந்தப் பஞ்சாயத்து முடியற வரைக்கும் கப்பலை அங்கிருந்து எடுக்கமாட்டாங்களாம்"
"அட அப்படியா..கப்பல் முழுசும் பெட்ரோல் இருக்குதுன்னாங்களே?"
"ஆமா மாமா..கப்பல் கவுந்து பெட்ரோல் கடல்ல கொட்டிடுச்சுன யாரும் நீந்தி தப்பிக்க முயாதுன்னுதான் அதுக்கு முன்னாடியே தப்பிக்க முயற்சி பண்ணினாங்க பாவம் அதுல ஆறு பேரை கடலு காவு வாங்கிருச்சு"
"அந்த ஏழுமலையாந்தான் அவுங்க குடும்பத்த பாத்துக்கணும்"
'ஆமாங் மாமா..ஏழுமலையான வருசப்பொறப்பன்னைக்கு தருசனம் பண்ண வேணுமின்னா 50 ரூபாய் டிக்கெட்டாம்"
"இதென்ன அம்மணி ஆச்சர்யம் 500 ரூபா டிக்கெட்டுன்னாலும் நம்மாளுக சத்தமில்லாம கொடுத்துட்டு சாமியை பாத்துட்டு வர்றத்துக்கு பழக்கப்பட்டவங்க.. லூசுல விடு"
"நாம கூட போன மாசம் தரும தருசனத்துல் ஏழுமலையானைப் பாத்து மழை வரணும் வெவசாயம் செழிக்கணும்ன்னு வேண்டிட்டு வந்தோம்"
"அதான் ஏழுமலையான் புயலைக்கொண்டு வந்து தேவைக்கு மேல மழையைக் கொட்டிட்டு போயிட்டாருங்கிறயா"
" சாமி விசயத்துல கிண்டல் பண்ணாதீங்க மாமா.. எனக்கு கெட்ட கோவம் வரும்"
"சரி அம்மணி..மழை மறுபடியும் வருமாமா"
"ம்..இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு வருமுன்னு டிவியில சொன்னாங்க மாமா.."
"--------------------------------------"
"ம்..மாமா டிவி ன்னு சொன்னவுடனே ஞாபகம் வந்ததுச்சு..ஆஹா என்ன ருசின்னு டிவியில சமையல் நிகழ்ச்சி நடத்துவாரே"
"ஆமா அம்மணி..நீ கூட பாத்துட்டு இருப்பியே"
"ஆமா மாமா அந்த ஜேக்கப் நெஞ்சு வலியில இறந்து போயிட்டாராம்.."
அம்மணி சொல்லி வருத்தப்பட,
"என்ன அம்மணி சொல்ற"
"ஆமா மாமா.சின்ன வயசு மாமா .சமையல்ல கின்னஸ் ரெக்கார்டெல்லாம் பண்ணின மனுசன்..அவரு ஆத்மா சாந்தி அடையட்டும்"
"போன மாசம் அவரு சொல்லித்தந்தபடி சிக்கன் குழம்பு வச்சேனே.. நல்லாயிருக்குன்னு சொன்னீங்களே"
"ஆமா அம்மணி..ரொம்ப வருத்தமா இருக்குது..நம்ம கையில என்ன இருக்குது எல்லாம் அவன் கையில இருக்கு"
"ஆமாங்க மாமா..சிக்கன் விலை குறைஞ்சிடுச்சு தெரியுமில்ல மாமா..கிலோ முப்பது முப்பதுன்னு கூவி கூவி விக்கிறாங்களே"
"என்ன அம்மணி சொல்றே..முந்தாநேத்து கிலோ எம்பது ரூபான்னு வாங்கியாந்தனே"
"ஆமாங் மாமா..இன்னைக்கு எல்லாம் குறைஞ்சு போச்சு.. முட்டை வெலை கூட குறைஞ்சு போச்சு.. கர்நாடகாவுல பறவை காய்ச்சல் வந்துடுச்சாம்.. அதனால கர்நாடகா,தமிழ்நாட்டுல இருந்து வர்ற கோழிகளையும் முட்டைகளையும் கேரளா தடை பண்ணிடுச்சாம்..5 கோடி முட்டைகள் 4 லட்சம் கோழிகன்னு விக்காம கிடக்குதாம்..கோடிக்கணக்குல நட்டம் வருமுன்னு நாமக்கல் கோழிப்பண்ணைக்காரங்க புலம்பிக்கிட்டு இருக்காங்க.."
"அப்படியா அம்மணி..வெலை ஏறிப்போறத்துக்குள்ள நான் போய் ரெண்டு கிலோ கோழிக்கறி வாங்கிட்டுவாரேன்..பிரியாணி செஞ்சு சாப்பிடுவோம்"
என்று சொல்லிவிட்டு சின்ராசு நகர அம்மணி புன்னகைத்தபடியே அவனைப்ப் பார்த்தாள்..அருகில் வந்த சின்ராசு,
"ஏ அம்மணி..எதோ சொம்பை தலையில மாட்டிக்கிட்ட கதையை சொல்றேன்னு சொன்ன"
"ஓ அதுங்களா மாமா.. சேலத்துல ஒரு வீட்டுல ராத்திரி தூங்கிட்டு இருக்கும்போது சமையலறையில் கடமுடானுன்னு பாத்திரம் உருளுற சத்தம் கேட்க,புருஷனும் பொண்டாட்டியும் திருடந்தான் நம்ம வீட்டுக்குள்ள பூந்துட்டான்னு சத்தம் போட்டு அக்கம் பக்கம் இருக்கிறவங்களை கூட்டிட்டு வந்து சமையல் ரூமுக்குள்ள போய் பாத்தா,,அங்க ஒரு பூனை தலையில பால் சொம்ப மாட்டிக்கிட்டு தவியா தவிச்சிட்டு இருந்து இருக்குது..சொம்புல இருந்த பாலை திருடிக் குடிக்கும்போது சொம்புக்குள்ள தலை மாட்டிக்கிச்சு போல..பாவம் அதால கழட்ட முடியாம சுவத்துல முட்டிக்கிட்டு இருந்திருக்குது..திருடன்னு நெனச்சு வந்தவங்களெல்லாம் பூனையோட நெலமையை பாத்து சிரிப்பா சிரிச்சுட்டு அந்த பூனை தலையில மாட்டியிருந்து சொம்பை கழட்டி விட்டுட்டு போனாங்களாம்.."
"நல்ல கூத்து அம்மணி"
என்று சிரித்துக்கொண்டே மீதித்துணிகளை கொடியில் உலர்த்த ஆரம்பித்தாள் அம்மணி..
சின்றாசும் அம்மணியும் நிகழ்கால தமிழகத்தை பிரித்து மேய்ந்துவிட்டனர் போல
ReplyDeleteஆமாம் சீனு அப்படியே..
Deleteஅம்மணியும் சின்ராசுவும் ஒரு விஷயத்தைத் தொட்டு அதிலிருந்து அடுத்த விஷயத்தைப் பேசியது வெகு சிறப்பு. சிறப்பான அந்த சமையல் கலைஞரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகளும். தரைதட்டிய கப்பல் விஷயத்தை அம்மணி அழகாய் எடுத்துரைத்ததும். ரங்கநாதன் தெரு மனித கன்வேயர் பெல்ட்டைப் பற்றிக் கூறியதும் (நான் நேரிலேயே கண்டு அதிசயித்ததால்) மிக ரசிக்க வைத்தது. அடிக்கடி வரட்டும் அம்மணி.
ReplyDeleteதிங்கள் தோறும் அம்மணி அலசுவாள்..
Deleteமிக அருமையான பதிவு
ReplyDeleteவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டி
sinraasum ammaniyum conversations are super round up about neelam puyal and jacob death
ReplyDeleteமகிழ்ச்சி தோழரே..
Deleteநாட்டு நடப்பை விலாவாரியா
ReplyDeleteசொல்லிப் போனவிதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்
செய்தி தொகுப்பு நகைச்சுவையாக அருமை
ReplyDeleteநாட்டு நடப்பு என்னன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுதுப்பா...
ReplyDeleteதீபாவளி பர்ச்சேசிங் ரங்கநாதன் தெருவில் ஒரே கூட்டம் டிவில பார்த்தேன்...
கப்பல் தரை தட்டினதும்....
திருப்பதி தர்ஷன் விலையும்...
செஃப் ஜேக்கப் மரணம்...
எல்லாம் அறியத்தந்த சின்ராசு அம்மணிக்கும் பகிர்ந்த உங்களுக்கும் அன்புநன்றிகள்பா...
மகிழ்ச்சி சகோதரி..
Deleteபூணைக்கதை சிறப்பு! சின்னராசுவையும் அம்மணியையும் விசாரித்ததாகச் சொல்லவும்!
ReplyDeleteசொல்கிறேன் ஐயா..
Deleteஉங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
ReplyDeletehttp://otti.makkalsanthai.com/
பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
நாட்டு நடப்புகளை அலசிய விதம் அருமை.
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteயதார்த்தமாக பேசிக் கொள்வது போல..செய்திகள் தூவப்பட்டது..படிக்க இனிமை சேர்த்தது..நன்று..வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்லத்தான் பேசிக்குறாங்க உங்க அம்மணியும் சின்ராசுவும். சிக்கன் விலை 30?! நம்ப முடியலியே! இந்த நேரம் பார்த்து எங்க வூட்டுல சபரி மலைக்கு போக மாலை போடிருக்காங்களே! அவ்வ்வ்
ReplyDeleteஅடடா..கறி போச்சே..
Deleteநாட்டு நடப்பு - சின்ராசு-அம்மிணி பார்வையில் நன்று. தொடரட்டும் நண்பரே.
ReplyDelete