/ கோடம்பாக்கம்/
வெள்ளித்திரை
வெள்ளித்திரை
தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர், அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்,பெரிய பட்ஜெட் இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றவர் இயக்குனர் ஷங்கர் அவர்கள்.இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களிடத்தில் பெரும்பான்மையான படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வசந்தகாலப்பறவை, சூரியன், ஐ லவ் இந்தியா போன்ற படங்களில் இயக்குனர் பவித்ரன் அவர்களிடத்தில் இணை இயக்குனராக பணியாற்றி 1993 ஆம் ஆண்டு குஞ்சுமோன் தயாரித்த 'ஜென்டில்மேன்' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி தமிழ்சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர்.அவர் இயக்கிய படங்களில் 'பாய்ஸ்' தவிர அனைத்தும் வெற்றிப்படங்களே..ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் புதுமையை புகுத்தி தன் திறமையை இந்திய அளவிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனராக இருக்கும் இவரை அவரது படங்கள் இந்திய திரையுலகின் கவனிக்கத்தக்க இயக்குனராக கொண்டு சேர்த்தது.இவரது படம் ரிலீஸ் என்றால் முதல் நாள் தியேட்டர் கூட்டத்தில் வழியும் என்பது மறுக்க முடியாத ஒன்று.
ரஜினி படம்,கமல் படம்,அஜீத் படம்,விஜய் படம் என்பதையும் தாண்டி ஷங்கர் படம் என்ற இமேஜை பெரியளவில் ஏற்படுத்தியவர்.புது முகத்தை வைத்து ஷங்கர் இயக்கினால் கூட பெரிய ஓப்பனிங் இவரது படத்திற்கு உண்டு என்பதற்கு இவர் இயக்கிய 'பாய்ஸ்' உதாரணம். ஆனால் படம் தோல்வியை சந்தித்தது.காரணம், அதே போல ஒரு கதையைக் கொண்டு கஸ்தூரிராஜா இயக்கிய 'துள்ளுவதோ இளமை' படம் பெரிய வெற்றி பெற்றதுதான்.ஷங்கர் படத்தில் நடிக்க எத்தனையோ கதாநாயகிகள் இன்றைக்கு வரிசையில் நிற்கிறார்கள்.அவர் படத்தில் நடித்தால் தமிழின் முக்கிய கதாநாயகி ஆகிவிடலாம் என்பதுதான் காரணம்.ஷங்கர் அவர்கள் இதுவரை தமிழில் இயக்கி படங்கள் 10.அதில் நடித்த கதாநாயகிகள் எந்தளவிற்கு தமிழில் புகழ்பெற்றார்கள் என பார்ப்போம்..
ஷங்கரின் முதல் படம் 'ஜென்டிமேன்' இதில் நாயகியாக நடித்தவர் மதுபாலா. இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.ஆனாலும் மதுபாலாவுக்கான வெற்றிக்கதவு கதவு பெரிதாய் திறக்கப்படவில்லை.
ஷங்கரின் இரண்டாவது படம் 'காதலன்' அது பிரபு தேவாவுக்கும் இரண்டாவது படம் அதில் அறிமுகமான நாயகி நக்மா.படம் வெற்றி பெற்றது.அடுத்து ரஜின்காந்தோடு 'பாட்ஷா' படத்தில் ஜோடி சேர்ந்தார் நக்மா.அதன்பிறகு நடித்த ஓரிரண்டு படங்கள் தோல்வியைத் தழுவ அவரும் காணாமல் போனார்.
ஷங்கரின் மூன்றாவது படம் 'இந்தியன்'. மும்பையிலிருந்து மனீஷா கொய்ராலாவை அழைத்து வந்து தனது 'பம்பாய்' படத்தில் அறிமுகப்படுத்தினார் மணிரத்னம்.படம் மிகப்பெரிய வெற்றி.தொடர்ந்து ஷங்கர் தனது இந்தியன் படத்தில் நாயகனாக்கினார்.இந்தியனும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.தமிழ் சினிமாவை ஆட்டிப்படைப்பார் என்று எதிர்பார்த்த மனீஷா கொய்ராலா மணிரத்னத்தின் 'உயிரே' தோல்விப்படத்தோடு மும்பை சென்று விட்டார்.
ஷங்கரின் நான்காவது படம் 'ஜீன்ஸ்' இப்படத்திற்கு மணிரத்னம் 'இருவர்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராயை நாயகியாக்கினார்.படம் மிகப்பெரிய வெற்றி.ஆனால் ஐஸ்வர்யா ராயை அதற்குப்பிறகு தமிழில் காணவில்லை.இடையில் 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்" படம் நடித்தார்.சில வருடங்களுக்குப் பிறகு ராவணன் எந்திரன் போன்ற படங்களில் நடித்தார்.இடையில் என்னானார் எனத் தெரியவில்லை.வேறு இயக்குனர்கள் அவரை அழைக்கவில்லையா அல்லது வேறு இயக்குனர்கள் படத்தில் நடிக்க இவர் விரும்பவில்லையா எனத் தெரியவில்லை.ஆனால் தமிழில் அவர் நடித்த நான்கைந்து படங்களில் பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் ஷங்கர் இயக்கிய 'ஜீன்ஸ்' தான்.
ஷங்கரின் ஐந்தாவது படம் 'முதல்வன்' இந்தப்படத்தில் மீண்டும் மனீஷாவை நாயகியாக்கினார்.கொஞ்சம் வயதானது போல தோற்றத்தை கொண்டிருந்தார் மனீஷா.படம் வெற்றியடைந்தாலும் மனீஷாவின் மார்க்கெட் தமிழில் பெரிதாக இல்லாமல் போனது.
ஷங்கரின் ஆறாவது படம் 'பாய்ஸ்'.ஹரிணி என்ற பெண்ணை நாயகியாக்கினார். சொல்லப்போனால் முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கினார்.படப்பிடிப்பின் போதே படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.அதே சமயம் கஸ்தூரி ராஜா தனது மகன் தனுஷை நாயகனாக்கி 'துள்ளுவதோ இளமை' படம் எடுத்து வெற்றி பெற,அதன் பிறகு வந்த 'பாய்ஸ்' தோல்வியைத் தழுவியது.ஹரிணி காணாமற்போனார்.பின்னர் அவர் ஜெனிலியா என்று பெயரை மாற்றிக்கொண்டு சில படங்கள் நடித்தார்.ஆனாலும் முன்னுக்கு வர முடியவில்லை.
ஷங்கரின் ஏழாவது படம் அந்நியன்.பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட படத்தில் 'ஜெயம்' படம் மூலம் அறிமுகமான சதாவை நாயகியாக்கினார்.அந்த நாயகி இனி தமிழில் கொடிகட்டிப் பறப்பார் எனப் பார்த்தால் அதற்குப் பிறகு சுத்தமாக மார்க்கெட்டை இழந்துவிட்டார்.
ஷங்கரின் எட்டாவது படம் ரஜினிகாந்த நடித்த சிவாஜி .மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்திற்கு ஜோடியானார் ஸ்ரேயா.படம் மிகப்பெரிய வசூலைக்குவித்தும் ஸ்ரேயாவை தமிழ் சினிமா கண்டுகொள்ளவேயில்லை.விஜயுடன் ஜோடியாக நடித்த கையோடு வடிவேலோடு ஒரு பாட்டுக்கு ஆடப்போனவரை இப்போது வரை காணவில்லை.
ஷங்கரின் ஒன்பதாவது படம் 'எந்திரன்.இப்படத்தில் மீண்டும் ஐஸ்வர்யாவை ஜோடியாக வைத்து இயக்கினார்.ரஜினிகாந்தோடு ஐஸ்வர்யாவை ஜோடியாக்கவேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காகவே நாயகியின் தேர்வு இருந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
ஷங்கரின் பத்தாவது படம் ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தை தழுவி எடுக்கப்பட்ட நண்பன்.விஜய் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக 'கேடி' படத்தில் அறிமுகமான இலியானாவை ஜோடியாக்கினார் ஷங்கர்.ஆந்திராவில் பிசியாக இருந்த இலியானா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைப்பார் என்ற கோடம்பாக்க ஆரூடம் பொய்த்துப்போனது.அதற்குப் பிறகு அம்மணியை தமிழ்த்திரையில் காணவில்லை.
மற்ற இயக்குனர்களைக் காட்டிலும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஷங்கரின் வழக்கம்.மற்றப் படங்களில் இருப்பதைக் காட்டிலும் தம் படத்தில் நாயகிகளின் உடை, நடை, பாவனைகளில் வித்தியாசம் காட்ட வைப்பவர்.நாயகிகளை மிகவும் அழகாக படம் பிடிக்கக் கூடியவர்.ஆனாலும் இவரது படத்தில் நடித்த நாயகிகள் தொடர்ந்து ஜொலிக்காததன் பின்னணி என்னவென்றே தெரியவில்லை.
ஷங்கரின் எட்டாவது படம் ரஜினிகாந்த நடித்த சிவாஜி .மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்திற்கு ஜோடியானார் ஸ்ரேயா.படம் மிகப்பெரிய வசூலைக்குவித்தும் ஸ்ரேயாவை தமிழ் சினிமா கண்டுகொள்ளவேயில்லை.விஜயுடன் ஜோடியாக நடித்த கையோடு வடிவேலோடு ஒரு பாட்டுக்கு ஆடப்போனவரை இப்போது வரை காணவில்லை.
ஷங்கரின் ஒன்பதாவது படம் 'எந்திரன்.இப்படத்தில் மீண்டும் ஐஸ்வர்யாவை ஜோடியாக வைத்து இயக்கினார்.ரஜினிகாந்தோடு ஐஸ்வர்யாவை ஜோடியாக்கவேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காகவே நாயகியின் தேர்வு இருந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
ஷங்கரின் பத்தாவது படம் ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தை தழுவி எடுக்கப்பட்ட நண்பன்.விஜய் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக 'கேடி' படத்தில் அறிமுகமான இலியானாவை ஜோடியாக்கினார் ஷங்கர்.ஆந்திராவில் பிசியாக இருந்த இலியானா இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைப்பார் என்ற கோடம்பாக்க ஆரூடம் பொய்த்துப்போனது.அதற்குப் பிறகு அம்மணியை தமிழ்த்திரையில் காணவில்லை.
மற்ற இயக்குனர்களைக் காட்டிலும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஷங்கரின் வழக்கம்.மற்றப் படங்களில் இருப்பதைக் காட்டிலும் தம் படத்தில் நாயகிகளின் உடை, நடை, பாவனைகளில் வித்தியாசம் காட்ட வைப்பவர்.நாயகிகளை மிகவும் அழகாக படம் பிடிக்கக் கூடியவர்.ஆனாலும் இவரது படத்தில் நடித்த நாயகிகள் தொடர்ந்து ஜொலிக்காததன் பின்னணி என்னவென்றே தெரியவில்லை.
Sema analysis ! True !
ReplyDeleteநன்றி தலைவரே..
Deleteநல்லதொரு ஆராய்ச்சி கட்டுரை. அனைவருக்கும் மிகவும் பயன்படும் குறிப்புகள். சகோதரே! தொடரட்டும் உங்கள் சேவை...
ReplyDeleteஉங்களுக்கு பயன்பட்டிருக்குமே..
Deleteஉங்களின் கருத்துக்கள் தொடரட்டும்...
ReplyDeleteநன்றி தோழரே..
Deleteஅட... இந்தக் கோணத்தில் நான் நினைச்சே பார்க்கலை கவிஞரே... தொடருங்கள் உங்கள் சினிமாக் கட்டுரைகளை.
ReplyDeleteமகிழ்ச்சி தலைவரே..
Deleteஇந்த கட்டுரை மிகவும் மேம்போக்காக எழுதப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. காதலன் படத்தில் நடித்த பிறகுதான் நக்மா தமிழின் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தார். தொடர்ச்சியான படங்களிலும் நடித்தார். இந்தியன் மனிஷா கொய்ராலா, ஊர்மிளா இருவருமே பாலிவுட்டில் பிரபலமானவர்கள். அவர்கள் தமிழில் கவனம் செலுத்தவில்லை. ஷங்கர் , மணிரத்தினம் படங்களில் மட்டுமே நடிக்க விரும்பினர் என்பதே உண்மை. ஜீன்ஸ் படத்தில் நடித்தப் பிறகே ஐஸ்வர்யா ராயும் முன்னணி நடிகையானார் . இன்றுவரை அவரது புகழ் நிலைத்துள்ளது. அவரது கால்ஷீட்டினை மணிரத்தினம், ஷங்கர், ராஜீவ் மேனன் தவிர வேறு யாருக்கும் பெற முடியவில்லை என்பதே எதார்த்தம். பாய்ஸ் படம் மிகப்பெரிய தோல்விப்படம். எனினும் ஜெனிலியா இன்றுவரை தமிழ் தெலுங்கு இரண்டிலும் முன்னணி நிலையிலேயே உள்ளார். தெலுங்கில் மார்க்கெட் அதிகமாக இருப்பதால் தமிழில் குறிப்பிட்ட படங்களிலேயே கவனம் செலுத்துகிறார். சதா, ஸ்ரேயா போன்றோர் மட்டுமே ஷங்கர் படத்தின் பின் இறங்கு முகத்தில் சென்றனர். காரணம் அவர்கள் தங்களது நிலையை விட மிகப்பெரிய ஹீரோக்களுடன் நடித்ததே. இலியானா இன்றும் தெலுங்கின் முன்னணி நாயகியாகவே உள்ளார். தமிழில் பிற இயக்குனர்கள் அவரது பட்ஜெட் மிகப்பெரியது என்பதால் அணுகுவதில்லை என்பதே உண்மை நிலவரம்..
ReplyDeleteமேம்போக்காக எழுதப்படவில்லை தோழரே..சங்கர் படத்திற்கு பின் தமிழில் நாயகிகளின் நிலை என்ன என்பதுதான் பார்வை..நீங்கள் சொன்ன கருத்தையும் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்..நாலு படம் நடித்தால் மார்க்கெட் இல்லை..பத்து வருடங்களாவது வலம் வர வேண்டும் ..உதாரணம் ரோஜா,சிம்ரன்..முழுமையாக வாசித்து கருத்திட்ட தங்களுக்கு நன்றி..தொடர்ந்து வாருங்கள்..
Deleteஎன்ன தீடீரென்று இப்படி ஒரு ஆராய்ச்சி...?
ReplyDeleteநல்ல அலசல்... நன்றி...
அப்படியா தலைவரே..மகிழ்ச்சி..இனி ஆராய்ச்சி தொடரும்..
Deleteம்
ReplyDeleteமுத்தரசா? மனசாட்சிதானே..
Delete//மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்திற்கு ஜோடியானார் ஸ்ரேயா.படம் மிகப்பெரிய வசூலைக்குவித்தும் ஸ்ரேயாவை தமிழ் சினிமா கண்டுகொள்ளவேயில்லை.விஜயுடன் ஜோடியாக நடித்த கையோடு வடிவேலோடு ஒரு பாட்டுக்கு ஆடப்போனவரை இப்போது வரை காணவில்லை.//
ReplyDeleteஎங்கள் தானைத்தலைவி ஸ்ரேயாவைக் காணவில்லை என்று ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்திருப்பதை, அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத்தின் ஒரே தலைவர் என்ற முறையில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ‘சிவாஜி’ படத்துக்குப் பிறகு விஜய், விக்ரம், தனுஷ், விஷால், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து எங்கள் வயிற்றில் பால்வார்த்த தலைவியின் பிரபலத்தை வைத்து லாபம் சம்பாதிக்கவே ‘இந்திரலோகத்தில் அழகப்பன்’ என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடச் சொல்லியிருந்தார்கள். பரந்த மனதோடு அந்தப் பாடாவதி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடி மனதைக் கொள்ளைகொண்ட ஸ்ரேயாவைக் காணவில்லை என்று சொல்லியதைக் கண்டித்து நாளை டீக்குடிப்புப் போராட்டம் நடத்தவிருக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.
மேலும் "விஜயுடன் ஜோடியாக நடித்த கையோடு," என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது எங்கள் தலைவி குறித்த அவதூறான செய்தியாகும். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று எந்த மொழியாக இருந்தாலும், எங்கள் தலைவி ஒரு படத்திலும் இதுவரை ’நடித்ததேயில்லை’ என்பதை நாடறியும். எனவே ஸ்ரேயா "நடித்தார்" என்று குறிப்பிடுவது உண்மைக்குப் புறம்பானது என்பதையும் உள்ளக்குமுறலோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
/அகில உலக ஸ்ரேயா ரசிகர் மன்றத்தின் ஒரே தலைவர் என்ற முறையில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்/
Deleteதலைவர் இங்கு இருக்கிறார் என்பதை மறந்து எழுதிவிட்டேன்..அவதூறு வழக்கு ஏதும் பதிவு செய்துவிடாதீர்கள் தலைவரே.அடுத்த கட்டுரையில் அம்மணியைப் பற்றி பாராட்டி எழுதிவிடுகிறேன்..ஹாஹாஹா..
ஐஸ்வர்யா ராய் படம் ஏன் போடவில்லை தோழரே?
ReplyDeleteஅனைத்துலக ஐஸ்வர்யா ரசிக மன்றத்தின் சார்பாக கண்டனங்களை தெரிவிக்கிறேன்......
கண்டனங்களை ஏற்றுக்கொண்டு அடுத்த பதிவில் அம்மணியின் படத்தை பெரிதாக பிரசுரிக்கிறேன் தோழரே மன்னிக்கவும்..
Deleteஉங்கள்கருத்து உண்மையென தெரிகிறது
ReplyDeleteஅப்படியா தலைவரே..
Deleteமதுபாலா,ஸ்ரேயா(ஓவர் ஆக்ட்),சதா,நக்மா(நடிக்கவே தெரியாது)அதான் இவர்கள் ஜொலிக்கலை.ஐஸ்வர்யா மார்க்கெட் ஹிந்தியில் சூடு பிடிக்கவே அங்கு பிசியாகி அங்குமார்க்கெட் போன பிறகு சிவாஜியில் நடிக்க வந்தார்.ஜெனிலியா தெலுங்கில் செம பிசியாகவே தமிழை மறந்தார். இலியானா தெலுங்கில் மார்க்கெட் போனதும் இங்கே நண்பனில் வந்தார்.
ReplyDeleteதெலுங்கில் மார்க்கெட் இழந்த இலியானாவை தமிழில் நாயகியாக்கினார் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது..
Delete///சில வருடங்களுக்குப் பிறகு ராவணன் சிவாஜி போன்ற படங்களில் நடித்தார்/// .சிவாஜி ல ஜோடி ஸ்ரேயா ..ஐஸ்வர்யா எந்திரன் ல தானே நடித்தார்கள்....
ReplyDeleteமாற்றிவிட்டேன் தோழரே..
Deleteஷங்கரின் நான்காவது படம் 'ஜீன்ஸ்' இப்படத்திற்கு மணிரத்னம் 'இருவர்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராயை நாயகியாக்கினார்.படம் மிகப்பெரிய வெற்றி.ஆனால் ஐஸ்வர்யா ராயை அதற்குப்பிறகு தமிழில் காணவில்லை.இடையில் 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்" படம் நடித்தார்.சில வருடங்களுக்குப் பிறகு ராவணன் சிவாஜி போன்ற படங்களில் நடித்தார் ***
ReplyDeleteஎந்திரன்னு சரி செய்துவிடுங்கள். :)
சரி செய்துவிட்டேன் தோழரே..
Deleteகவிஞரே, இதெல்லாம் டிஎன்பிசி தேர்வு சிலபஸில் வருகிறதா?!!!.
ReplyDeleteதிடீரெண்டு அம்மனிகள் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டீர்கள். இங்கெ சொல்லப்பட்டிருப்பதும் சரிதானோ?!, இலியானா தெலுங்கில் மிகப்பிரபலமாக உள்ளதால் தமிழில் நடிக்க விரும்பாமல் இருக்கலாம். ஹி ஹி.
ஹாஹ்ஹாஹ...
Deleteபாய்ஸ் படம் தோல்வி தோல்வி என்று திரும்ப திரும்ப சொல்வதிலிருந்து உங்கள் நோக்கம் தெரிகிறது..ஷங்கரின் தோல்வி, அந்நியனில் தொன்டங்கி, சிவாஜி, எந்திரன், மற்றும் நண்பன் வரை தொடர்கிறது. இவை எல்லாம் ஷங்கரின் சரக்கு தீர்ந்துவிட்டது ய என்பதை நமக்கு உணர்த்தும். ரஜினி நடித்த சிவாஜி மற்றும் எந்திரன் போன்ற படுதோல்வி படங்களை வெற்றி படங்கள் என்றும் வெற்றி பெற்ற பாய்ஸ் படத்தை மீண்டும் மீண்டும் தோல்வி என்று சொல்வதிலிருந்தும் நீங்களும் ஒரு ரஜினி யென்ற கூத்தாடியின் அடிமை என்று விளங்குகிறது.
ReplyDeleteவெற்றி தோல்வி என்பது தியேட்டடில் ஓடும் நாட்களை வைத்து கணக்கிடவில்லை தோழரே அது அந்தக்காலம்..வசூலை வத்துத்தான் இன்று கணக்கிடப்படுகிறது.ரஜினி உங்களுக்கு பிடிக்கவில்லை எனபதையே உங்கள் கருத்து சுட்டிக்காட்டுகிறது..
Deleteஅலசல் அருமை! தங்கள் கருத்துக்கள் அனைத்தும் ஏற்க கூடியதாகவும் உள்ளது! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteசினிமா பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது!
ReplyDeleteamy jackson enna aakirar enru paarppom anna....
ReplyDeletegoooddddddddddddd
nalla arachi
ReplyDeleteஉங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...