புது வரவு :
Home » » முகநூல் முனகல் - 2

முகநூல் முனகல் - 2

                                                                                                       முகநூல் முனகல்-2
                                                                                                      (என் முகநூலிலிருந்து)
 
வாழ்வதற்காக
பிறந்தோம் என்பதைவிட
பிறந்ததற்காக வாழ்கிறோம்
என்பதே மிகச்சரியானது..
 ---------------------------------
வரிந்து கட்டிக்கொண்டு வரும்
தோல்விகளெல்லாம்
வெற்றியைக் கண்டவுடன்
வாய்மூடிக்கொள்கின்றன..
 -------------------------------
ஒருமுறை
வென்றால் போதும்
பலமுறை தோற்றதெல்லாம்
காணாமற்போய்விடும்..
 -------------------------------
இரவென்றால்
விடிந்தே தீரும்..
மணிநேரங்கள்
காத்திருக்கத்தான் வேண்டும்..
 --------------------------------
ஏமாற்றத்தை விரும்பும்
மனிதன் எவனுமில்லை..
ஏமாற்றத்தை அடையாதவன்
மனிதனுமில்லை..
 -------------------------------
எதிர்பார்த்தது
கிடைக்காதபோது
எதிர்பாராதது கிடைக்குமாம்..
எதிர்பாராததை எதிர்பார்த்தபடி நான்..
--------------------------------

எப்போதும்
கவலைப்படுவதை விடுத்து
எப்போதாவது
கவலைப்படுவோம்..
-------------------------------

Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

27 comments:

 1. இன்னும் நிறைய முனகுங்க கவிஞரே முகநூலில். எல்லாமே ரசிக்க வைக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா தலைவரே..

   Delete
 2. கவிதை மிக மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 3. தலைப்பு அருமை
  ஆனால் முனகல் எங்களுக்குள்
  இடியாய் அல்லவா இறங்குகிறது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. எல்லாமுமே அசத்தல்... உண்மைகள்...

  அப்பப்போ இங்கேயும் அசத்துங்க... (முகநூல் பக்கம் ஒரு வாட்டி மூழ்கினால் எழுவது கொஞ்சம் சிரமம் தான்)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தலைவரே சரிதான்..

   Delete
 5. தோழரே,,, வேகம்,, வேகம்,,,

  ReplyDelete
  Replies
  1. இனி வேகம்தான் தோழரே..

   Delete
 6. அழகான வரிகள் மிகவும் அருமை.

  ReplyDelete
 7. அன்பின் மதுமதி - அனைத்துச் சிறு கவிதைகளும் அருமை - நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
 8. அனைத்தும் ரசிக்க வைத்தன! அருமை!

  ReplyDelete
 9. நன்றி தலைவரே..

  ReplyDelete
 10. எதைச் சொல்வது எதை விடுவது! அனைத்தும் ஒளிரும் முத்துக்கள்!

  ReplyDelete
 11. வரிந்து கட்டிக்கொண்டு வரும்
  தோல்விகளெல்லாம்
  வெற்றியைக் கண்டவுடன்
  வாய்மூடிக்கொள்கின்றன..
  >>>
  நிதர்சனமான உண்மை. எல்லாமே தன்னம்பிக்கை ஊட்டும்கவிதைகள்தானே?! இனி முனகாதீங்க.., சத்தமாவே சொல்லுங்க..

  ReplyDelete
 12. // வாழ்வதற்காக
  பிறந்தோம் என்பதைவிட
  பிறந்ததற்காக வாழ்கிறோம்
  என்பதே மிகச்சரியானது.. //

  இதுதான் உண்மை.

  ReplyDelete
 13. முக நூல் முனகல்கள் அனைத்துமே அருமை. தொடரட்டும் நண்பரே.

  ReplyDelete
 14. நண்பரே,

  தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
 15. முகநூலில் வாசித்தேன் - சிறப்பு

  ReplyDelete
 16. ஏழுகடல் தாண்டியும் உங்கள் எழுத்துக்கு மதிப்பிருக்கும்

  ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com