வணக்கம் தோழர்களே.. பொதுத்தமிழில் முழு மதிப்பெண்களை பெறுவது எப்படி எனப் பார்ப்போம்.. டி.என்.பி.எஸ்.சி தேர்வை முதல்முறையாக எழுதுபவர்களுக்கு எந்த மாதிரியான வினாக்கள் கேட்கப்படும் என்று தெரியாமல் போகிறது. அதற்கு நீங்கள் முந்தைய வினாத்தாள்களை திருப்பிப் பாருங்கள். அதற்கு முன்னதாக பொதுத்தமிழ் பகுதிக்கான பாடத்திட்டம் என்னவென்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்..
பொதுத்தமிழ் பாடத்திட்டம் என்ன வென்று தெரியாதவர்கள் இங்கே சென்று தெரிந்து கொள்ளுங்கள்..
பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 20 வகையான பாடங்களிலிருந்தே வினாக்கள் கேட்கப்படுகின்றன.எனவே குறிப்பிட்ட பாடங்களை தெளிவாகப் புரிந்து கொண்டு படியுங்கள்..இந்தப்பாடங்கள் ஒவ்வொன்றை குறித்தும் விரிவாகவும் விளக்கமாகவும் நம் தளத்தில் வெளியிட்டு இருக்கிறோம்.அந்த பதிவுகளின் மொத்த இணைப்புகளையும் ஒரே பதிவிலிருந்து வாசிக்க இங்கே செல்லவும்..
பொதுத்தமிழ் என்றவுடன் யாரும் பயப்படவேண்டாம்..ஏனென்றால் தமிழ் மொழிப்பயிற்சி குறித்த வினாக்களே இப்பகுதியில் இடம்பெறும்..நாம் தினமும் உரையாடும் வாக்கியங்களே பெரும்பாலும் இடம்பெறும்.நாம் தவறாகவே தமிழைப் பயன்படுத்துகிறோம்..அவற்றை சரியாகப் பயன்படுத்த இப்பகுதிகள் உதவும்..மொழிப்பயிற்சி பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன.இவற்றை முழுமையாகப் பெறலாம்.
யார் ஒருவர் பொதுத்தமிழ் பகுதியில் முழுமையான மதிப்பெண்களைப் பெறுகிறார்களோ அவர்களுக்கு கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகிவிடும்.வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதே பொதுத்தமிழ் பகுதிதான்.எனவே எளிமையாக 150 மதிப்பெண்களை பொதுத்தமிழ் பகுதியிலேயே பெறலாம். அது மட்டுமின்றி குரூப் 2 வை பொறுத்தவரையில் பொது அறிவுக்கு உட்பட்ட 100 வினாக்களில் தமிழ்,தமிழ் நாடு,தமிழ் இலக்கியம் போன்ற பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 15 வினாக்கள் கேட்கப்படும் எனவே தமிழ் சார்ந்த பாடங்களை நன்றாக திருப்பிப் பார்த்துக்கொள்ளுங்கள்..தமிழில் முழுமையான மதிப்பெண்களைப் பெற முயற்சியுங்கள்..
தமிழ்நாடு பற்றிய மொத்தப் பதிவுகளையும் வாசிக்க இங்கே செல்லவும்.
பாடத்திட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு பாடத்தையும் படித்து அவற்றிற்கு நீங்களே வினாக்களை தயாரித்து பதிலளித்துப் பாருங்கள்.பழைய வினாத்தாள்களில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலளித்து பயிற்சி பெறுங்கள்..பயிற்சி மிகவும் அவசியம்..
சில வினாக்களைப் பார்த்தாலே உங்களுக்கு விடை தெரியும்.. சில வினாக்களுக்கு யூகித்து விடையளிக்கலாம்.. விடை தெரியாத பட்சத்தில் தவறான விடைகளை நீக்கிவிட்டு சரியான விடையைக் கண்டுபிடிக்கலாம். ஏற்கனவே பொதுத்தமிழுக்கான பாடங்களை படித்துக்கொண்டுதான் இருப்பீர்கள்..அவற்றில் எளிமையான பகுதிகளை விட்டுவிட்டு கடினமான பகுதிகளுக்கு நேரத்தை ஒதுக்கி நினைவில் நிறுத்துங்கள்..மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகளை பிரித்துக்கொள்ளுங்கள்..
உதாரணமாக அகரவரிசை, பெயர்ச்சொல் அறிதல், எதிர்ச்சொல் அறிதல், பிரித்தெழுதுக போன்றவை எளிமையான பகுதிகள். ஓரெழுத்து ஒரு மொழி, பொருள் தருக, எதுகை மோனையின் வகைகள், நூல் நூலாசிரியர்கள் போன்றவை மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகள்..
எனவே திட்டமிட்டு படியுங்கள்.. தெளிவாகப் படிக்கலாம்.. எளிதில் தேர்வில் வெல்லலாம்..
டி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..
தொடரும்..
பயனுள்ள தகவல் நன்றி...
ReplyDeleteThanks
ReplyDeleteWhen will TNPSC publish next notification for Group2&4
ReplyDeleteஅண்ணா!
ReplyDeleteSome persons TNPSC Exam-க்கு நல்லா Prepare பண்ணியும் Exam fever-ல confuse ஆகி அவங்க வெற்றியை கோட்டை விடுறாங்க! அவங்களுக்கு உற்சாகம் அளித்து அவங்க Tension இல்லாம Exam எழுத ஒரு Article டானிக் எடுத்து விடுங்க