வணக்கம் தோழர்களே.உண்மை இதழில் புதுக்கவிதையில் புரட்சிக்காரரின் வரலாறு எனும் பக்கத்தில் ஈரோட்டுச் சூரியன் என்ற தலைப்பில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதி வருவது நீங்கள் அறிந்ததே. தொடரின் ஐந்தாவது அத்தியாயமான "குறும்புக்கார மாணவன் இராமன்" 16.11.2012 உண்மை இதழில் வெளியாகியிருக்கிறது. இங்கே பகிர்ந்திருக்கிறேன்..
குறும்புக்கார மாணவன் இராமன்
பத்து வயதில்
பள்ளிக்கு முற்றுப்புள்ளி.
தீண்டத்தகாதவர்களுடன் சேர்க்கையே
இராமனை முரடனாக்கியது
என குருடனாயினர்.
பாட்டியின் வளர்ப்பு
சரியில்லை..
ஒரு நிமிடம்
இனி அங்கு வேண்டாம்..
இராமனை வீட்டிற்கு
அழைத்து வாருங்கள்;
இராமன் தானாய் திருந்துவான்
பாருங்கள்;
சின்னத்தாயம்மை
நாயக்கரிடம் சொல்ல,
சிற்றன்னையிடம் சொல்லி
இராமனை வீட்டிற்கு
அழைத்து வந்தார்;
இராமன் மனதளவில்
நொந்தார்;
இராமன்
அங்கேயும்
அடங்கவில்லை;
வீட்டிற்குள்ளும்
முடங்கவில்லை;
சக நண்பரோடு
பழக வேண்டாம் என்பதற்கு
ஜாதிதான் தடையா என
யோசித்தார்;
அன்றிலிருந்து அவர்களை
நேசித்தார்;
செய்யாதே என
வீட்டார் சொல்லுவதையே
தவறாமல் செய்ய விழைந்தான்;
கீழ் ஜாதியினர் வீட்டிற்குள்
மனம் விரும்பி நுழைந்தான்;
தாழ்த்தப்பட்ட
தன் நண்பர்களைக்
காணச் சென்றார்;
அவர் இல்லத்திலேயே
உணவையும் தின்றார்;
கோபப்பட்ட நாயக்கர்
காலில் விலங்கிட்டார்..
விலங்குடனே
வீதியில் வந்து
விளையாடுவார்..
தீண்டத்தகாதவர்களுடன் சேர்க்கையே
இராமனை முரடனாக்கியது
என குருடனாயினர்.
பாட்டியின் வளர்ப்பு
சரியில்லை..
ஒரு நிமிடம்
இனி அங்கு வேண்டாம்..
இராமனை வீட்டிற்கு
அழைத்து வாருங்கள்;
இராமன் தானாய் திருந்துவான்
பாருங்கள்;
சின்னத்தாயம்மை
நாயக்கரிடம் சொல்ல,
சிற்றன்னையிடம் சொல்லி
இராமனை வீட்டிற்கு
அழைத்து வந்தார்;
இராமன் மனதளவில்
நொந்தார்;
இராமன்
அங்கேயும்
அடங்கவில்லை;
வீட்டிற்குள்ளும்
முடங்கவில்லை;
சக நண்பரோடு
பழக வேண்டாம் என்பதற்கு
ஜாதிதான் தடையா என
யோசித்தார்;
அன்றிலிருந்து அவர்களை
நேசித்தார்;
செய்யாதே என
வீட்டார் சொல்லுவதையே
தவறாமல் செய்ய விழைந்தான்;
கீழ் ஜாதியினர் வீட்டிற்குள்
மனம் விரும்பி நுழைந்தான்;
தாழ்த்தப்பட்ட
தன் நண்பர்களைக்
காணச் சென்றார்;
அவர் இல்லத்திலேயே
உணவையும் தின்றார்;
கோபப்பட்ட நாயக்கர்
காலில் விலங்கிட்டார்..
விலங்குடனே
வீதியில் வந்து
விளையாடுவார்..
சம்பிரதாயத்தால்
இராமனை வதைத்தனர்;
ஆங்கிலப் பள்ளிக்கு
அனுப்பி வைத்தனர்;
அங்கே..
குறும்பு செய்யும்
மாணவர்களுக்கு
தலைவரானார்..
சக மாணவர்களை
அடிக்கடி அடித்துவிடுவார்;
மன்னிப்பு கடிதம் எழுதி
கொடுத்துவிடுவார்;
படிப்பில் பிடிப்பு இல்லாமற்போக
பள்ளிக்கும்
இராமனுக்குமிடையே
மீண்டும் பிரிவினை ஏற்பட்டது..
மதுமதி
(ஈரோட்டுச் சூரியன் தொடரும்)
பத்து வயதில் பள்ளிக்கு முற்றுப்புள்ளி,
ReplyDeleteதீண்டத்தகாதவர்களே சேர்க்கையே..,
>>>>
விளையும் பயிர் முளையிலேயே தெரிஞ்சு இருக்கு. ஆனா, அதை யாரும் கண்டுக்கலை.
கண்டுக்கிட்டாங்க..மாத்திடலான்னு நெனச்சாங்க..ஆனா இவரு எல்லாத்தையும் மாத்திட்டார்..
Deleteபெரியாரின் இளமைக்காலமே சாதி மறுப்பாக உள்ளதே!
ReplyDeleteஆமாம் ஐயா..
Deleteநல்ல கவிதை
ReplyDeleteசமுக அவலங்களை சொல்லும் கவிதை
நன்றி புரட்சி..
Deleteஉண்மை இதழில் வெளியாகி உள்ளதற்கு வாழ்த்துக்கள்... தொடர்கிறேன்...
ReplyDeleteநன்றி தலைவரே..வரும் 1 ம் தேதி 6 வது பாகம் வெளியாக இருக்கிறது தலைவரே..
Deleteசிறுவயதிலேயே பெரியார் பெரிய மனதோடும் மனித நேயத்தொடும் இருந்திருக்கிறார் போல,தொடருங்கள்
ReplyDeleteஆமாம் தலைவரே// அதில் ஐயமென்ன..
Deleteபெரியாரின் வாழ்க்கை வரலாறு புதுக்கவி வடிவிலா? அருமை அருமை. :)
ReplyDeleteஆம் தோழரே.. மகிழ்ச்சி..
Deleteதயவுசெய்து ”தீண்டத்தகாதவர்கள்” என்று நம்மை நாமே தாழ்த்திக்கொள்ள வேண்டாம். பெரியார் தளங்களில் எழுதுவதுபோல தீண்டப்படாதவர்கள் என்பதுதான் சரியாகும்.
ReplyDeleteஇன்றைய நாளில் வேண்டுமானாலும் தீண்டப்படாதவர்கள் என்னும் மாற்றுச் சொல்லை பயன்படுத்தலாம்.ஆனால் அன்றைய நிலைப்பாட்டில் தீண்டத்தகாதவர் என்ற சொல்லே பயன்பாட்டில் இருந்தது.அதைத்தான் இதற்கு பயன்படுத்த முடியும் தோழரே.. இது குறித்து வேறேதும் கட்டுரை எழுதும்போது அச்சொல்லை பயன்படுத்துகிறேன்.யாரையும் தாழ்த்துவதற்காக அவ்வார்த்தை சொல்லப்படவில்லை. கருத்துக்கு நன்றி..
Deleteசகோ மதுமதி ....... ”தீண்டத்தகாதவர்கள்” "தீண்டப்படாதவர்கள்" என்று அழைப்பதும் தவறு ..
ReplyDeleteவேண்டுமானால் "சமூகத்தில் தாழ்ந்தவர்கள் " "பொருளாதரத்தில் பின்தங்கியவர்கள் " எனும் இது போன்ற பதம்களை பிரயோகிக்கலாம் அவர்களின் மனமும் புன்படாதல்லவா .
பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களே இப்படி அழைத்தால்
எப்படி ?? சிந்திப்பீர் .
தலித் என்பதும் வேண்டாம் . நல்ல மாதிரியாக அழைக்க/குறிக்க முயற்சி செய்யலாமே ...!!!
உண்மைதான்.. நீங்கள் சொல்லும் கருத்துக்கும் உடன்படுகிறேன்..
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி..